கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பய‌ங்கரவா‌‌திக‌ளி‌ன் கூ‌ட்டு மறை‌விட‌ம் க‌ண்டு‌பிடி‌ப்பு

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌‌ர் மா‌நில‌‌‌த்‌‌தி‌ல் ஜெ‌ய்‌ஸ்- இ மொஹ‌ம்மது, ஹ‌ி‌ஸ்பு‌ல் முஜாஹ‌ி‌தீ‌ன் பய‌ங்கரவா‌திக‌ள் இணை‌ந்து பய‌‌ன்படு‌த்‌திய மறை‌விட‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ள பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர், அ‌தி‌லிரு‌ந்து பெருமள‌விலான ஆயுத‌ங்களையு‌ம் வெடி பொரு‌ட்களையு‌ம் ப‌றிமுத‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர்.

ப‌ந்‌தி‌ப்போரா மாவ‌ட்ட‌த்‌தி‌‌ல் உ‌ள்ள ச‌க்‌ரி‌‌சிபூரா பகு‌தி‌யி‌ல் மா‌நில‌க் காவ‌ல் துறை‌யினரு‌ம், 57ஆவது ரா‌ஷ்‌ட்‌ரிய ரைஃ‌பி‌ள் படை‌யினரு‌ம் இணை‌ந்து, நட‌த்‌திய தேடுத‌ல் வே‌ட்டை‌யி‌ல் இ‌ந்த மறை‌விட‌ம் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதாக பாதுகா‌ப்பு அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌‌ர்.

கையெ‌றி கு‌ண்டுக‌ள் 23, 60 ‌மி.‌மீ. மோ‌ட்டா‌ர் கு‌ண்டு ஒ‌ன்று, ‌சீன கையெ‌றி கு‌ண்டுக‌ள் 4, ரா‌க்கெ‌ட் லா‌ஞ்ச‌ர்க‌ள் 3, ஏ.கே. து‌ப்பா‌‌க்‌கி ம‌ற்று‌ம் அத‌ற்கான தோ‌ட்டா‌க்க‌ள், 50 ‌கிலோ வெடி மரு‌ந்து ஆ‌கியவை ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ஆயுத‌ங்க‌ளி‌ல் அட‌க்க‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.

ஆயுத‌ங்களு‌ம் வெடி பொரு‌ட்களு‌ம் ப‌க்கெ‌ட்டி‌ல் போட‌ப்ப‌ட்டு ‌நில‌த்‌தி‌‌ற்கு அடி‌யி‌ல் புதை‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ந்தன.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Your email address will not be published.