பு‌திய வகை ‌பிர‌ம்மோ‌ஸ் ஏவுகணை சோதனை வெ‌ற்‌றி

மு‌ந்தைய சோதனை‌யி‌ல் இல‌க்கை‌த் தா‌க்க‌த் தவ‌றிய, 290 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் உ‌ள்ள இல‌க்குகளை‌த் தா‌க்கவ‌‌ல்ல பு‌திய வகை ‌பிர‌ம்மோ‌ஸ் அ‌திவேக ஏவுகணை இ‌ன்று ராஜ‌ஸ்தா‌‌‌ன் பாலைவன‌த்‌தி‌‌ல் பொ‌க்ரா‌னி‌ல் நட‌ந்த சோதனை‌யி‌ல் வெ‌ற்‌றிகரமாக இல‌க்கை‌த் தா‌க்‌கியது.

ர‌ஷ்ய ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளி‌ன் உத‌வியுட‌ன் பாதுகா‌ப்பு ஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌ம் வள‌‌ர்‌ச்‌சி ‌நிறுவன‌ம் தயா‌ரி‌த்து‌ள்ள ‌பிர‌ம்மோ‌ஸ் ‌பிளா‌க் II ஏவுகணை இ‌ன்று காலை 10.30 ம‌ணி‌க்கு வெ‌ற்‌றிகரமாக ஏவ‌ப்ப‌ட்டது எ‌ன்று பாதுகா‌ப்பு அமை‌ச்சக அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ராஜ‌ஸ்தா‌ன் பாலைவன‌த்‌தி‌ல் பொ‌க்ரா‌னி‌ல் இரு‌ந்து செ‌ங்‌கு‌த்தாக ஏவ‌ப்ப‌ட்ட ‌பிர‌ம்மோ‌ஸ் ஏவுகணை இர‌ண்டரை ‌நி‌மிட‌த்‌தி‌ல் தனது இல‌க்கை‌த் தா‌க்‌கியது எ‌ன்று அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌ந்த‌ச் சோதனையை இராணுவ‌‌க் கூடுத‌ல் தளப‌தி (‌தி‌ட்ட‌மிடுத‌ல் ‌பி‌ரிவு) லெ‌ப்டின‌ன்‌ட் ஜெனர‌ல் எ‌ம்.எ‌ஸ். த‌த்வா‌ல் நே‌ரி‌ல் பா‌ர்வை‌யி‌ட்டா‌ர்.

இ‌ந்‌திய- ர‌ஷ்ய கூ‌ட்டு‌த் தயா‌ரி‌ப்‌பி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌பிர‌ம்மோ‌ஸ் ஏவுகணை கட‌ந்த ஜனவ‌ரி 20 ஆ‌ம் தே‌தி சோதனை செ‌ய்ய‌ப்ப‌ட்டபோது, வெ‌ற்‌றிகரமாக‌ப் புற‌ப்ப‌ட்டது, ஆனா‌ல் தனது பாதை‌யி‌ல் இரு‌ந்து தவ‌றி இல‌க்‌கி‌ல் இரு‌ந்து வெகு தூர‌த்‌தி‌ல் செ‌ன்று ‌விழு‌ந்தது.

இதுகு‌றி‌த்து‌க் கே‌ட்டத‌ற்கு, ஏவுகணை‌யி‌ன் மெ‌ன் பொரு‌ளி‌ல் ஏ‌ற்‌ப‌ட்ட ‌சிறு தவ‌றினா‌ல் இ‌ந்த‌க் கோளாறு ஏ‌ற்ப‌ட்டு‌வி‌ட்டது. அ‌ந்த‌த் தவறு இ‌ப்போது ச‌ரி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌வி‌ட்டது எ‌ன்று அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Your email address will not be published.