காங்கிரசை தனிமைப்படுத்த வேண்டும்: விஜய டி.ராஜேந்தர்

‘நாடாளுமன்ற தேர்தலில் காங்கிர‌ஸ் க‌ட்‌சியை தனிமைப்படுத்த வேண்டும்” என்று லட்சிய தி.மு.க. தலைவ‌ர் விஜய டி.ராஜேந்தர் கூறினார்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ். எனவே நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த வேண்டும் எ‌ன்றா‌ர்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்வேன் எ‌ன்று கூ‌றிய ராஜே‌ந்த‌ர், காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம் எ‌ன்றா‌ர்.

இலங்கை‌த் தமிழர்களுக்காக முத்துக்குமார் என்ற இளைஞன் தன் உடலில் செந்தீ வைத்துக்கொண்டு உயிர் தியாகம் செய்தான். அந்த சம்பவத்தில் இருந்து தமிழர்களின் இதயங்களில் இலங்கை‌த் தமிழர்களின் பிரச்சனை கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்து இருக்கிறது. எனவே இலங்கை‌த் தமிழர்களுக்கு எதிரான கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாது எ‌ன்றா‌ர்.

மேலு‌ம் கூறுகை‌யி‌ல், இலங்கை‌த் தமிழர்களுக்காக குரல் கொடுத்தால், கைது செய்யப்படுவோம் என்ற பயம் எனக்கு இல்லை எ‌ன்றா‌ர் டி.ராஜே‌ந்தன‌ர்.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Your email address will not be published.