அரசு மரு‌த்துவ‌ர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு வழங்கப்படுவது போன்று அரசு மருத்துவர் களுக்கும் வழங்க வேண்டும் எ‌ன்பது உ‌ள்‌பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு மரு‌த்துவ‌ர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மரு‌த்துவ‌ர் கனகசபாபதி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், 5-வது ஊதியக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்த டிஏசிபி இன்னமும் தமிழ்நாடு அரசு வழங்காததால் தற்போது அரசு மரு‌த்துவ‌ர்களின் சம்பளம் மத்திய அரசு மரு‌த்துவ‌ர்களின் சம்பள விகிதத்தை விட குறைவாக உள்ளது. எனவே தற்போது வரும் 6-வது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் ஏற்கனவே உள்ள முரண்பாடுகளை களைந்து மத்திய அரசு மரு‌த்துவ‌ர்களின் சம்பளத்திற்கு இணையாக தமிழ்நாடு அரசு மரு‌த்துவர்களின் சம்பளத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை என்று மாற்றி அமைக்க வேண்டும்.

கவுன்சிலிங் முறைகேடுகள் இன்றி முறையாக நடத்த வேண்டும். விருப்ப ஓய்வு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படுவது போன்று அரசு மருத்துவர் களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்துவது.

அதன்படி வருகிற 11ஆ‌ம் தேதி முதல் 17ஆ‌ம் தேதி வரை கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடைபெறும். 19ஆ‌ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடைபெறும். 20ஆ‌ம் தேதி முதல் 28ஆ‌ம் தேதி வரை அனைத்து சிறப்பு பணிகள் புறக்கணிப்பு நடைபெறும்.

31ஆ‌ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். இந்த போராட்டத்தில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறாவிட்டால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15ஆ‌ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் எ‌ன்று ‌தீ‌ர்மான‌‌ங்கள‌் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Your email address will not be published.