‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (04.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

தென்னிலங்கையின் புத்தளகதிர்காமம் பாதையில் உள்ள கோணகனார பிரதேசத்தில் இன்று காலை 9.00 மணியளவில் ஆயுததாரிகள் சிலரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

சிவில் பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் பதில் தாக்குதலை நடத்தியதாகவும் மேற்படி ஆயுதக் குழு காட்டுக்குள் ஓடி மறைந்ததாவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன .

இந்தச் சம்பவத்தை அடுத்து, அப்பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.இத்தாகுதல் விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆனையிறவுக்கு கிழக்கே உள்ள வண்ணாண்குளம் பகுதியில் நேற்று முன்நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது .
இது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஆனையிறவுக்கு கிழக்காக உள்ள வெற்றிலைக்கேணியின் தெற்குப் பகுதியில் வண்ணாண்குளம் உள்ளது . இந்த பகுதிக்குள் நேற்று முன்நாள் திங்கட்கிழமை விடுதலைப் புலிகளின் அணி ஊடுருவியது .
ஊடுருவிய அந்த அணியில் இருந்த பெண் கரும்புலி உறுப்பினர் ஒருவர், 55 ஆவது படையணி மீது கரும்புலித் தாக்குதலை நடத்தினார். 1 தொடக்கம் 2 கிலோ அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது .
இதனிடையே, இந்த தாக்குதலின் இழப்புக்கள் குறித்து படைத்தரப்பு தகவல் எதனையும் வெளியிடாத போதும், வெற்றிலைக்கேணிக்கு அண்மையாக விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தின் 55 ஆவது டிவிசன் படையினருக்கும் இடையில் திங்கட்கிழமை கடும் சமர் நடைபெற்றதாக தகவல் வெளியிட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்.பல்கலைக்கழகம் இராணுவம் காவல்துறையினரால் திடீரெ தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் மாணவர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுக் செவ்வாக்கிழமை காலை முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணிவரை இராணுவத்தினரும் , காவல்துறையினரும் இணைந்து ஆனந்தக்குமாரசாமி ஆண்கள் விடுதி கடுமையான சோதனையிடப்பட்டுள்ளது எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பல்கலைக்கழகத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கையினால் ஏற்படும் அசெளகரியங்கள் தொடர்பாக காவல்துறையினருக்கு நிர்வாகம் எடுத்துக் கூறியும் நீதிமன்றத்தின் அனுமதி பத்திரத்தை காட்டி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை முதல் மாலை வரை பல்கழைக்கழகத்தினை சூழலில் படையினர் குவிக்கப்பட்டு வீதியில் சென்றோரும் பல்கலைக் கழகத்துக்கு வந்தோரும் விசாரணை செய்யப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பதற்றநிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அரசாங்கத்தின் தற்கால நடவடிக்கைகளால் தமிழ்,முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் பல்வேறு சிரமங்களையும் பாரிய பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளதுஎன்று ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நேற்று சபையில் தெரிவித்தார். நாட்டில் மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்தப்படத் தொடங்கி விட்டது என்றும் அவர் குற்றம் சுமத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்சார திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ரவி கருணாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய அரசாங்கமானது எதிர்க்கட்சியை விமர்சிக்கும் வேலையை மட்டுமே மிகச் சரியாக செய்து கொண்டிருக்கின்றது . அமைச்சர்களோ அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தற்போதைய நிலையில் ஊழியர் சேமலாப நிதியத்தில் உள்ள பணத்தில் அரசாங்கம் கை வைக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சேவையில் தொங்கியவர்கள் பின்னர் ஜே.வி.பி.யில் தொங்கினார்கள். ஆனால் நாம் யாரிலும் தொங்கவில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு நாளைய தினம் பிரேரணை கொண்டு வந்தாலும் நிபந்தனையின்றி ஆதரவு வழங்க நாம் தயாராகவே இருக்கின்றோம். நிதி விடயங்களில் அரசாங்கம் செய்கின்ற தவறுகளுக்கெல்லாம் இந்நாட்டின் வரி செலுத்துபவர்களே சுமையை ஏற்க வேண்டியுள்ளவர்களாக இருக்கின்றனர். நாட்டின் கடன் சுமையானது அதிகரித்துச் செல்கின்றது.

அனைத்து தரப்பினராலும் எதிர்க்கப்படுகின்ற இந்த மின்சார சபை திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்ற அரசு துடிப்பது ஏன் என்று தெரியவில்லை . சரியான திட்டங்கள், வழிநடத்தல்கள் எதுவுமின்றியே வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனஎன்றார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பிலுள்ள இலங்கை மின்சார சபை தலைமையகத்தின் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் பொலிஸாரால் அடித்து கலைக்கப்பட்டிருப்பதாக சபையின் கவனத்திற்கு கொண்டுவந்த ஜே.வி.பி. எம்.பி.யான கே .டி.லால்காந்த, அரசாங்கத்தின் ஜனநாயகம் இதுதானா என்றும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று இலங்கை மின்சார சட்டமூலம் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி.யான ரவி கருணாநாயக்க பேசிக்கொண்டிருக்கையில் குறுக்கிட்டு ஒழுங்குப் பிரச்சினையொன்று எழுப்பி பேசும்போதே லால்காந்த எம்.பி.இவ்வாறு தெரிவித்தார்.
மின்சாரசபை தலைமையகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்த மின்சார சபை ஊழியர்கள் பொலிஸாரால் அடித்து கலைக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் செய்வதற்கான ஜனநாயக உரிமை கூட இங்கு இல்லையா என்பது எமக்குத் தெரியவேண்டும்.
சட்டமூலத்தின் மீதான ஆதரவு, எதிர்ப்பு குறித்து எமக்கு சபையில் பேசி தீர்த்துக்கொள்ள முடியும்.அதற்கு தொழிற்சங்கங்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்யவிடாமல் கலைப்பது முறையாகாது. உங்களது (அமைச்சரது) உத்தரவின்றி இது நடந்திருக்க முடியாது.
நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. அவசரகாலச் சட்டத்தை தொழிற்சங்கங்கள் போராட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது. எனவே, இவற்றைக் கருத்திற்கொண்டு தொழிற்சங்கங்களை தங்களது போராட்டங்களை மேற்கொள்வதற்கான உரிமையை அமைச்சர் பெற்றுக்கொடுக்க வேண்டும்என்றும் லால் காந்த கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார் .

தீவிரவாதிகளின் முக்கிய நிலையமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் . பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிப்பதாக ஒபாமா தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களைக் குடும்பத்தினர் விமான நிலையம் சென்று அழைத்துவந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பாகிஸ்தான் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்றைய சமவத்தின் போது காயமடைந்த திலான் சமரவீர சத்திரசிகிச்சைகளுக்காக நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்த போதிலும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

!!!!!!!!!!!!!!!!!
மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆய்வாளர் எனா நெஸ்டார்டை வவுனியாவிற்கு அழைத்துச் சென்றவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த மனித உரிமை கண்காணிப்பக ஆய்வாளர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா வீஸா ஒன்றின் மூலம் இலங்கைக்கு வருகை தந்த நெஸ்டார்ட் வன்னி மக்கள் குறித்து இரகசியமாக ஆய்வு நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வன்னியிலிருந்து வவுனியா வைத்தியசாலை மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.
குறித்த ஆய்வாளரை வவுனியாவிற்கு அழைத்து சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பொதுமக்கள் பாதுகாப்பை கருத்திற் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகளுடான இராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக படைத்தரப்பின் முழுப்பலமும் பிரயோகிக்கப்படவில்லை எனவும் , படைத்தரப்பின் இழப்புக்கள் அதிகரித்த போதிலும், சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் யுத்தத்தை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறத்தில் அரச படையினர் சர்வதேச யுத்த சட்டங்களுக்கு மதிப்பளித்து மிகவும் அவதானமாக யுத்த முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், மனித உரிமை சட்ட திட்டங்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்றை படைவீரர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யுத்த வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு உரிமை மீறல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகளும் அதன் ஆதரவு இணையத்தளங்களும் சர்வதேச ரீதியில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அரசாங்க ஊடகங்கள் பக்கச்சார்பான வகையில் செயற்பட்டு வருவதாக ஆளும் கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜனநாயக ரீதியான கருத்துக்களை அரசாங்கம் இருட்டடிப்புச் செய்து வருவதாகவும், ஒருதலைப்பட்சமான செய்திகளே அரச ஊடகங்களில் வெளியிடப்படுவதாகவும் ஜே.வி.பியின்நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சியில் போன்ற அரச ஊடகங்களில் அரசாங்கத்திற்கு சார்பான செய்திகள் மட்டுமே வெளியாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்hர் .
அரசாங்கத்தினால் எதிர்க்கட்சிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!
வரலாற்று அடையாளச் சிறப்புமிக்க கச்சதீவு உற்சவத்தில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வது தொடர்பான முடிவை பாதுகாப்பு அமைச்சே மேற் கொள்ள வேண்டும் . அதன் பின்பே பக்தர் கள் அங்கு செல்வது தொடர்பான தீர் மானத்தை மேற்கொள்ளமுடியும் .
யாழ்.அரச அதிபர் கே.கணேஷ் இத்தகலைத் தெரிவித்தார்.
கச்சதீவு உற்சவம் எதிர்வரும் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பாமாகி நடை பெறவிருக்கின்றது. அந்த உற்சவத்தில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக யாழ். செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீதான தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விடுதலைப்புலிகள் 63 இலட்சம் ரூபா வழங்கியுள்ளது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இரகசியப் பொலிஸார் அநுராதபுரம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்களன்று அநுராதபுரம் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் இரகசிய பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரினதும் மனைவியினதும் மதவாச்சி மக்கள் வங்கிக்கணக்கில் 35 இலட்சம் ரூபா விடுதலைப்புலிகளால் வைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும், 28 இலட்சம் ரூபா பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகளால் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன . இவர்களிருவரதும் வங்கிக்கணக்குகளிலும் 35 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், தமக்கு 28 இலட்சம் ரூபாவை பல்வேறு தடவைகளில் புலிகள் வழங்கியதாக சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரி தனது தேசிய அடையாள அட்டையின் பிரதியை வழங்கி கையடக்கத் தொலைபேசி சிம் ஒன்றையும் கண்டியிலுள்ள கடையொன்றில் பெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்த இரகசியப் பொலிஸார், தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாண குடாநாட்டு மக்களுக்கும் தேவையான அனைத்து பொருட்களும் 9 வீதியூடாக லொறிகள் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளது.
அடுத்த வாரம் முதல் பொருட்கள் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ் கண்டி 9 வீதி இராணுவத்தினரின் பாவனைக்கு உத்தியோக பூர்வமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். குடாநாட்டிற்குத் தேவையான பொருட்களை தரை வழியாக எடுத்துச் செல்வதன் மூலம் குறைந்த செலவே ஏற்படும். இதனால் பொது மக்கள் பல்வேறு நன்மைகளை அடைவார்கள் என்றும் அமைச்சு தெரிவிக்கின்றது.
இதுவரை காலமும் குடாநாட்டு மக்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் கடல் மார்க்கமாகவே அனுப்பிவைக்கப்பட்டது. வீதி திறக்கப்பட்டதை வரவேற்கும் யாழ். வாசிகள் தமது தென்பகுதிக்கான பயணத்திற்கும் அனுமதிக்கவேண்டும் என கோருகின்றனர். அத்துடன் விவசாய விளைபொருட்களை தென்பகுதி சந்தைக்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகவும் மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகிந்த சிந்தனையையே பின்பற்றுவதாக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சருமான சம்பிக்க ரணவக்க நேற்று தெரிவித்திருக்கின்றார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இதனை அவர் தெரிவித்தார்.
தாராள பொருளாதாரக் கொள்கை உலகில் இன்று தோல்விகண்டுள்ளது. உள்நாட்டு தேசிய உற்பத்தி ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியம் உணர்த்தப்பட்டிருக்கின்றது.
அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் பின்பற்றி வந்த தாராள பொருளாதாரக் கொள்கை மீது இன்று நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது .
ரணில் விக்கிரமசிங்கவும் முதலாளித்துவ சக்திகளும் இங்கு இன்னமும் தாராள பொருளாதாரக் கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான பராக் ஒபாமா இன்று தேசிய உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளார். “மகிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டிருந்த பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் அவர் செயற்படத் தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் ஒபாமாவே மகிந்த சிந்தனையை ஏற்றிருப்பதாகவே நோக்க முடிகிறது. “மகிந்த சிந்தனைஉலகப் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பக் கூடிய பலம்கொண்ட சக்தியாகவே நாம் காணக்கூடியதாகவுள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை இ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன் ச‌ந்‌தி‌த்து உட‌ல் நல‌‌ம் கு‌றி‌த்துவிசா‌ரி‌த்தா‌ர்.

முதுகுவ‌லி காரணமாக செ‌ன்னை போரூ‌ர் ராம‌ச்ச‌ந்‌திரா மரு‌த்துவமனை‌யி‌ல் அறுவைசி‌‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கட‌ந்த ஞா‌யிறுவீடுதிரு‌ம்‌‌பினா‌ர்.

இ‌ந்தநிலை‌யி‌ல் செ‌ன்னை கோபாலபுர‌த்‌தி‌ல் உ‌ள்ள இ‌ல்ல‌த்‌தி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை , இ‌ந்‌திய க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌‌‌யி‌ன் மா‌‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன் இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.

‌பி‌ன்ன‌ர் வெ‌ளியே வ‌ந்த அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல் , முதலமை‌ச்ச‌ர் உட‌ல் நல‌ம் கு‌றி‌த்துவிசா‌ரி‌த்ததாகவு‌ம், அர‌சிய‌ல் எதுவு‌ம் பேச‌வி‌ல்லை எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம் நாடாளும‌ன்ற தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டிடுவத‌ற்கான தொகு‌தி‌ப்ப‌ங்‌கீடு ப‌ற்‌றி பேச ...‌தி.மு.. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா பா‌ர்‌க்க அவரது இ‌ல்ல‌த்‌தி‌ற்கு செ‌ல்‌கிறே‌ன் எ‌ன்றா‌ர்.

...‌தி.மு..வுட‌ன் தொகு‌தி‌ப்ப‌ங்‌கீடு ப‌ற்‌றி பேச உ‌ள்ளநிலை‌யி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியைதிடீரென தா.பா‌ண்டிய‌ன் ச‌ந்‌தி‌த்து பே‌சியது அர‌சிய‌ல் வ‌ட்டார‌த்‌தி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
”நாடாளுமன்ற தேர்தலில் காங்கிர‌ஸ் க‌ட்‌சியை தனிமைப்படுத்த வேண்டும்” என்று லட்சிய தி.மு.க. தலைவ‌ர் விஜய டி.ராஜேந்தர் கூறினார்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ். எனவே நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த வேண்டும் எ‌ன்றா‌ர்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்வேன் எ‌ன்று கூ‌றிய ராஜே‌ந்த‌ர், காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம் எ‌ன்றா‌ர்.

இலங்கை‌த் தமிழர்களுக்காக முத்துக்குமார் என்ற இளைஞன் தன் உடலில் செந்தீ வைத்துக்கொண்டு உயிர் தியாகம் செய்தான். அந்த சம்பவத்தில் இருந்து தமிழர்களின் இதயங்களில் இலங்கை‌த் தமிழர்களின் பிரச்சனை கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்து இருக்கிறது. எனவே இலங்கை‌த் தமிழர்களுக்கு எதிரான கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாது எ‌ன்றா‌ர்.

மேலு‌ம் கூறுகை‌யி‌ல், இலங்கை‌த் தமிழர்களுக்காக குரல் கொடுத்தால், கைது செய்யப்படுவோம் என்ற பயம் எனக்கு இல்லை எ‌ன்றா‌ர் டி.ராஜே‌ந்தன‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
”தமிழகத்தில் பாஜக தனித்துப்போட்டியிடப் போவதாகவும், வரும் 7ஆம் தேதியன்று நாகர்கோவிலில் இருந்து கட்சியின் மூத்த தலைவர் அத்வானி பிரச்சாரத்தைத் தொடங்க இருப்பதாகவும் மாநில பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான பாஜக, தமிழகத்தில் அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளுடன் கூட்டணி வைக்க அண்மையில் முயற்சிகளை மேற்கொண்டது. எனினும், அந்த முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்காத நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுவது என்று முடிவெடுத்துள்ளது. இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த இல.கணேசன், தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவது குறித்து வரும் 12ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில தேர்தல் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறினார். பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை வரும் 7ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து அத்வானி தொடங்க இருப்பதாகவும் இல.கணேசன் தெரிவித்தார். இதனிடையே, தற்போது பிரபலமாகி இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் ஜெய்ஹோ பாடலை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!
குஜராத் மாநிலத்தில் ஒரேயொரு வாக்காளருக்காக மட்டும் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது .

மக்களவைத் தேர்தல் தேதிகளை டெல்லியில் நேற்று வெளியிட்டுப் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி, இத்தகவலை வெளியிட்டார்.

உதன்படி, குஜராத் மாநிலம் ஜுனாகாத் மாவட்டம் யுனா தாலுகாவில், கிர் வனப்பகுதியில் இந்த தனி வாக்குச் சாவடி அமைக்கப்படுகிறது.அங்குள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருக்கும் பரத்தாஸ் தர்ஷ்ன்தாஸ் குரு என்பருக்காக, இந்த வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது.

இதேபோல், சட்டீஸ்கர் மாநிலத்தில் இரண்டு வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடியும், வட கிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் மூன்று வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்படுகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை அணியினர் மீது தீவிரவாதிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர். அதில் 6 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். 6 போலீசார் உட்பட 8 பேர் பலியாகினர். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் கப்பல்துறை அமைச்சர் நபீர் அகமது, இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் அனைவரும் இந்தியாவில் இருந்து எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் ஊடுருவியதாக, தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறினார். சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு இழுக்கு ஏற்படுத்த இந்தியா செய்த சதிச்செயல் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, லாகூர் தாக்குதலுக்கு லஷ்கர் தொய்பா அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து, இதுதொடர்பாக தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!
சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் பயண நேரம், அதிகபட்சமாக 4 மணி நேரம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து நியூயார்க் செல்லும் விமானம், மும்பையில் காத்திருக்கும் காலஅளவு, ஒன்றரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தின் காலஅளவும் குறைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மற்ற வெளிநாடுகளுக்கான பயண நேரமும் அதிகபட்சம் 4 மணி வரை குறைக்கப்பட்டுள்ளது என்றும், மாற்றியமைக்கப்பட்ட கால அட்டவணை, வரும் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சென்னை நகரில் மூன்று ஆண்டு களுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிய 59 இன்ஸ்பெக்டர்கள், 15 உதவி கமிஷனர்கள் உள்பட 90 போலீஸ் அதிகாரிகள் வெளியூர் களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். .

மக்களவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, சொந்த ஊரில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஆகியோரை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் முதற்கட்டமாக சென்னை நகரில் பணியாற்றி வரும் 15 உதவி கமிஷனர்கள் மற்றும் 75 இன்ஸ் பெக்டர்கள் சென்னை அல்லாத வெளியூர்களுக்கு மாற்றப்பட் டுள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!
Ck§Vô®u úTôTôp SL¬p SPkR ®`YôÙd L£Ü ®TjÕ, AúR ë²Vu LôoûTÓ BûX AùU¬dLô®p CÚk§ÚkRôp SPk§ÚdLôÕ Guß Ak SôhÓ ùRô¯tNeLj RûXYo ûUdúLp ûWh U]m ùYÕm©d ᱫÚd¡\ôo.
AùU¬dL SôPôÞUu\d ÏÝ®p Nôh£Vm A°jRúTôÕ AYo ùR¬®jR LÚjÕLs YÚUôß:
“1984 ¥NmTo UôRm Uj§Vl ©WúRNj RûXSLo úTôTô#p SPkR ®`YôÙd L£Ü ®TjÕdÏl ©\Ï AkR FûWl TôodLf ùNu\ NoYúRNd ÏÝ®p Sôàm JÚYu. GuàPu Cuù]ôÚ AùU¬dLÚm Yk§ÚkRôo.
AeúL Sôu LiP Lôh£Ls Gu ¨û]®p A¯VôR úNôL £j§WeL[ôLl T§Yô¡®hP]. NmTYm SPkÕ 25 BiÓLs B] ©\ÏmáP Aú]L CWÜLs çdLm YWôUp R®jÕdùLôi¥Úd¡ú\u.
ULu, ULû[ CZkÕ Õ¥dÏm ùTtú\ôoL°u ØLeLÞm Rôn, RkûRVûW CZkR ÏZkûRL°u ØLeLÞm L]ÜúTôX YkÕ Guû] YûRd¡u\].
AkR BûX«p CÚkR TôÕLôl× HtTôÓLû[Ùm, ®` YôÙûYj RVô¬jÕ AûRj ùRôh¥«p úNªjÕ ûYj§ÚkR ®RjûRÙm TôojRúTôÕ CkR BûX AùU¬dLô®p CÚk§ÚkRôp ClT¥ùVpXôm SPdL AàU§dLlTh¥ÚdÏUô Gu\ úLs®úV Gu U]ÕdÏs ÃeLôWªhPÕ. Ck§Vô®p A§Lô¬LÞm Bh£Vô[oLÞm UdLÞûPV E«ûW ¡sÞd¸ûWVôL U§lTRôÛm, XgNm Yôe¡dùLôiÓ GûRÙm AàU§dÏm Lp ùSgNoL[ôL CÚlTRôÛm B«WdLQdLô] AlTô®L°u E«o T#YôeLlTh¥Úd¡\Õ. AYoLÞûPV UßYôrÜdÏ Cu]ØmáP Y¯ ùNnVôUp CÚlTÕ LiÓ U]m úYRû]Vôp Õ¥d¡\Õ.
E«ûW ¨fNVm Ï¥dÏm Guß ùR¬kÕm JÚ SfÑ YôÙûY JÚ BûX RVô¬lTôú]u, AkR BûXdÏ FÚdÏ SÓ®p CPm RÚYôú]u, JÚ ùT¬V SLWjûRúV SôNlTÓjÕm A[ÜdÏ ®` YôÙûYj ùRôh¥«p úNªjÕ ûYlTôú]u Guß TX úLs®Ls Gu²p GÝkR].
Sm Sôh¥p Es[ NhPeLÞm AûR Sôm Li¥l×Pu AUp ùNnÙm Øû\Ùm CÚlTRôp CkR A[ÜdÏ RôuúRôu±jR]Uô] BûX CeÏ ùNVpTÓYÕ Nôj§Vm ApX. AlT¥úV ùNVpTh¥ÚkRôÛm ARu ¨oYô¡LÞm, ùTôßlTô[oLÞm Ck úSWm çd¡p ùRôe¡«ÚlTôoLs, ApXÕ Cu]Øm Lm© Gi¦d ùLôi¥ÚlTôoLs.
SmSôhÓ BûX TôÕLôl× NhPeLs ªLd LÓûUVô]ûY Guß £X úYû[L°p úRôu±]ôÛm AlT¥ CÚlTRôpRôu CeÏ JÚ E«olT#Ùm SPdLôUp CÚd¡\Õ Guß ×¬¡\Õ. TôYm Ck§VoLs. AYoLÞdÏm NhPm, ®§Ls CÚkRôÛm AûR AUp ùNnY§p AkR SôhÓ AWÑ A§Lô¬LÞm AûR úUtTôoûY«P úYi¥V Bh£Vô[oLÞm AXh£VUôL CÚlTRôp AeÏ E«ÚdÏ U§lúT ¡ûPVôÕ’ Guß úTh¥ A°j§Úd¡\ôo ûUdúLp ûWh.

world
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
AÔ BÙR RVô¬l©p DWôàdÏ ER®Ls ùNnYûR ¨ßj§dùLôiPôp, EeLs SôhÓdÏ G§WôL HÜLûQLû[ ¡ZdÏ IúWôlTô®p ¨ßjRôUp ®hÓ®ÓYRôL WµVô®Pm úTWm úTÑ¡\Õ AùU¬dLô.
AùU¬dLô®u קV A§To TWôd JTôUô CÕ ùRôPoTôL WµV A§To §ªj¬ ùUjYúRÜdÏ GݧÙs[ WL£Vd L¥Rj§p CûR ¨TkRû]VôL ®§j§ÚlTRôL “¨ëVôod ûPmv’ Tj§¬ûLj ùR¬®d¡\Õ.
ªLÜm WL£VUôL GÝRlThP AkRd L¥Rm GlT¥ ¨ëVôod ûPm^ýdÏd ¡ûPjRÕ Guß ùR¬V®pûX.
WµVôûY Cu]Øm RuàûPV Ød¡V G§¬VôLd LÚÕm AùU¬dLô, WµV Sôh¥u ÁÕ GlúTôRôYÕ RôdÏRp SPjR úYi¥«ÚkRôp ER®VôL CÚdLhÓm Guß ¡ZdÏ IúWôl©V SôÓL°p HÜLûQLû[ ¨ßj§YÚ¡\Õ. CYt±u ϱ SmØûPV SôÓRôu Guß ùR¬kÕ ûYjÕs[ WµVôÜm AÕTt±V R]Õ A§Úl§ûV A¥dL¥ ùY°lTÓj§ YÚ¡\Õ. Ck ¨ûX«p WµVôûYf NUôRô]lTÓjÕm úSôd¡p JTôUô CkRd L¥RjûR Gݧ«Úd¡\ôo Guß LÚRlTÓ¡\Õ.
DWôàdÏf ùNnÕYÚm WôÔY ER®Lû[ ¨ßj§]ôp EeLÞdÏ Cu²u] NÛûLLs LôhPlTÓm Guß AkRd L¥Rj§p ϱl©Pô®hPôÛm AùU¬dL A¦dÏ AàNWûQVôL WµVô YÚYûR ®Úm×YûR ùR°YôLd ϱl©Ó¡\Õ.
CWôdÏdÏ AÓjRT¥VôL Rôu ÖûZV úYi¥V L[m DWôuRôu Guß AùU¬dLô ¨û]d¡\Õ. ARtÏ Øuú]ô¥VôLúY DWô²u AÔÏiÓ RVô¬l×j §\u ϱjÕ R]dÏs[ AfNjûR ùY°lTÓj§ L¥Rm Gݧ«Úd¡\Õ.

CkRd L¥RjÕdÏ UôvúLô®#ÚkÕ T§p GÕÜm YW®pûX. A§To TWôd JTôUô®u L¥RjûR AùU¬dL ùY°Ù\ÜjÕû\ A§Lô¬Ls 3 YôWjÕdÏ Øu]ôp UôvúLôÜdÏ úSW¥VôLf ùNuß A§To ùUjYúRûY úS¬p TôojÕ A°j§Úd¡\ôoLs.
WµV ùY°Ù\Ü AûUfNo ùNo¡ XYúWôq, AùU¬dL ùY°Ù\Ü AûUfNo ¶Xô¬ ¡°iPû] ù_ÉYô SL¬p YÚm N²d¡ZûU Nk§d¡\ôo. AlúTôÕ WµVô®u T§p úS¬úXúV ùR¬®dLlTÓm Guß WôËV YhPôWeLs ùR¬®d¡u\].
A§To JTôUôÜm ùUjYúRÜm XiP²p HlWp 2-m úR§ Nk§jÕl úTNl úTô¡u\]o. AlúTôÕ úUtùLôiÓ CÕ Ï±jÕ BúXôNû] LXdLlTÓm Guß WôËVjÕû\ ¨×QoLs ùR¬®d¡u\]o.
AùU¬dLô R]Õ HÜLûQLû[ WµVô®Ûm ¨ßjR úYiÓm Gußm AûR CVd¡, TWôU¬dÏm ùTôßl× ReLÞdÏm RWlTP úYiÓm Gußm WµVj RWl©p úLôWlThPÕ. AûR AlúTôûRV A§To _ôow ×x ¨WôL¬jRôo. HÜLûQLû[ AùU¬dLô®u RtLôl×dLôLjRôu ¨ßjÕ¡ú\ôm, G]úY AûRd ûLVôÞm E¬ûU GeLÞdÏ UhÓmRôu Guß á±®hPôo.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு பாதுகாப்பான சொர்க்க பூமியாக பாகிஸ்தானும் , ஆப்கானிஸ்தானும் திகழ்வதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் பிரிட்டீஷ் பிரதமர் கார்டன் பிரவுனுடன் செய்தியாளர்களைச் சந்தித்த ஒபாமா , இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானில் நடந்த தாக்குதல் சம்பவத்தைத் தாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறினார். அதுதொடர்பான அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அதுவரை தங்களால் எதுவும் தெரிவிக்கமுடியாது என்றும் ஒபாமா கூறினார். தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் தவறிவிட்டதால், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு பாதுகாப்பான சொர்க்க பூமியாக பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் திகழ்வதாக ஒபாமா குற்றம்சாட்டினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கியூபாவின் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ரவூல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
இதில் முக்கியமாக நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் வாதிகள் இருவர் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
பதவி விலகும் 10 அதிகாரிகளில் அமைச்சரவை செயலாளர் கார்லோஸ் லேஜ் மற்றும் வெளியுறவு அமைச்சர் பெலிப் பெரஸ் ரோஜ் என்போரும் உள்ளடங்குகின்றனர்.
கடந்த வருடம் தனது சகோதரர் பிடல் காஸ்ட்ரோவிடமிருந்த ரவூல் காஸ்ட்ரோ பதவிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் நிகழ்ந்துள்ள பாரிய மாற்றமாகக் இது கருதப்படுகிறது .
இதேவேளை, தொடர்ந்தும் பிடல் காஸ்ட்ரோவின் அடையாளத்துடன் இருந்து வரும் அரசாங்கத்தில் இந் நடவடிக்கையின் மூலம் ரவூல் காஸ்ட்ரோ தனது முத்திரையைப் பதித்துள்ளதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
லேஜ் மற்றும் பெரஸ்ரோஜ் உட்பட பதவி நீக்கப்பட்டவர்களில் பலர் பிடலின் விசுவாசிகளாவர் .
இதுதவிர லேஜ் மற்றும் பெரஸ் ரோஜ் ஆகியோர் எதிர்காலத்தில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உணவு, மீன்பிடி, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீடு ஆகிய அமைச்சுக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்குமிடையில் பல வருடங்களாக விரிசலடைந்திருந்த உறவு சீரடைவதற்கான சமிக்ஞைகள் வெளிவர ஆரம்பித்துள்ள நிலையிலேயே கியூப அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறத
!!!!!!!!!!!!!!!!!
73 இராணுவ அதிகாரிகளைப் பலிகொண்ட பங்களாதேஷ் கிளர்ச்சிக்கு அந்நாட்டின் துணை இராணுவ அதிகாரி ஆலமே முக்கிய காரணமென்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த துணை இராணுவ அதிகாரிகள் மூன்று பேரும் வீரர்கள் 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கெதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .
கிளர்ச்சிக்கு ஆலமே முக்கிய காரணம் என்பது உறுதியாகிவிட்டது. எனினும் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்களை தாங்கள் திரட்டிவருவதாக லால்பாக் காவல்நிலையத் தலைவர் ஜோதிகிஷா தெரிவித்தார்.
துணை இராணுவத்தின் கிளர்ச்சிக்கு பின்னர் காணாமல்போன இராணுவ அதிகாரிகளில் இன்னும் 72 பேரின் நிலை என்னவென்றே இதுவரை தெரியவில்லை. அவர்களின் நிலைமை குறித்து அறியும் பணியில் தீவிரமாக அந்நாட்டு இராணுவம் ஈடுபட்டுள்ளது.
கிளர்ச்சியில் ஈடுபட்ட துணை இராணுவ வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசு உறுதியாகவும், முனைப்பாகவும் உள்ளது. அந்தவகையில் முதல்கட்ட நடவடிக்கையாக கிளர்ச்சியில் ஈடுபட்ட 1000 பேருக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கிளர்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பான தகவல் திரட்டப்பட்டு வருகின்றது. கிளர்ச்சிக்காரர்கள் குறித்து தகவல் ஏதும் தெரியவந்தால் அதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கும்படி அந்நாட்டு மக்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கிளர்ச்சி குறித்த உயர்நிலை விசாரணைக்கு பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பு, ஸ்கொட்லாந்து பொலிஸாரின் உதவியையும் கோரியுள்ளார் .
பங்களாதேஷின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது. விசாரணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தாங்கள் அளிக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
இதனிடையே, கிளர்ச்சியில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் இறுதிச்சடங்கு நாட்டின் தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் அந்நாட்டின் ஜனாதிபதி ஜில்லுர் ரஹ்மான் கலந்துகொண்டு உயிரிழந்த இராணுவ அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தினார் .
!!!!!!!!!!!
வெளிநாடுகளைச் சேர்ந்த தாதிமார்கள் அமெரிக்காவில் வேலை வாய்ப்பை பெறுவதை எளிதாக்கும் புதிய சட்டமொன்று அங்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இப் புதிய சட்டம் அமெரிக்காவில் வேலை செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை எளிதில் பெறுவதற்கு வழிவகுக்கும்.
அமெரிக்காவில் தாதிமார்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தாதிமார்களுக்கு பயிற்சியளிக்கும் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவிகளின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் தாதிமார்கள் தேவைப்படுகின்றனர்.
ஒரு இலட்சத்து 26 ஆயிரம் தாதிமார்கள் தேவைப்படுகின்றனரென தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது .
இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அளவுக்கு அதிகமான தாதிகள் இருப்பதால் அந்த நாடுகளைச் சேர்ந்த தாதிகளை இப்போதுள்ள குடியேற்ற திட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் அங்குள்ள ஆஸ்பத்திரிகள் வேலைக்கு அமர்த்தி வருகின்றன.
உலக பொருளாதார பின்னடைவு காரணமாக அமெரிக்க அதிகாரிகள் வெளிநாடுகளை சேர்ந்த தாதிமார்களுக்கு வேலை அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் தயக்கம் காட்டுகிறார்கள் . எனவே இப்போதுள்ள நடைமுறைகளை தளர்த்துவதற்காக புதிய சட்டமொன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் வெளிநாட்டு தாதிகளுக்கு விசாக்கள் எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சட்டத்துக்கு தாதிகள் நிவாரணச் சட்டம் 2009 என்று பெயர். ஆண்டுக்கு 50 ஆயிரம் தாதியர்களுக்கு விசா வழங்க இந்தச் சட்டம்வகை செய்கிறத
!!!!!!!!!!!!
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பேச்சுகளை நடத்துவதற்காக பிரிட்டிஷ் பிரதமர் ஹோர்டன் பிறவுண் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளும் இணைந்து செயற்பட்டால் தமது பொருளாதார மீட்புத் திட்டங்கள் பயன்மிக்கவையாக இருக்குமென பிறவுண் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவினால் தான் கவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிறவுண் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஒபாமாவைச் சந்திக்கும் முதலாவது ஐரோப்பிய தலைவராவார்.
இதேவேளை, இன்று புதன்கிழமை காங்கிரஸில் உரையாற்றவுள்ள பிறவுண் இங்கு உரையாற்றும் ஐந்தாவது பிரிட்டிஷ் பிரதமரென்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கிடையிலான பேச்சுகளில் உலக பொருளாதார நெருக்கடியும் ஆப்கானிஸ்தான் நிலைவரமும் முக்கிய பங்கு வகிக்குமென தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நெருக்கடிகளுக்கு மத்தியில் பதவியேற்றுள்ள ஒபாமா பொருளாதாரம் தொடர்பில் மிகவும் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ள பிறவுண் பிரிட்டனில் தாம் எடுக்கும் நடவடிக்கைகளைப் போன்றதொரு நடவடிக்கைகளையே ஒபாமாவும் எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிரியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான அமெரிக்க புதிய ஜனாதிபதி ஒபாமாவின் அரசின் முயற்சிகளின் புதிய படிநிலையாக இரண்டு உயர் மட்ட தூதர்களை அங்கே அனுப்பப் போவதாக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிங்டன் அறிவித்துள்ளார்.
தான் அரசுத்துறை செயலராக பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவையாக மத்திய கிழக்குக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ஹிலாரி அவர்கள், ஒரு பாலத்தீன நாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை கடுமையாக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் இடையிலான முரண்பாட்டுக்கு இரு நாடுகள் என்ற தீர்வு தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
sports
!!!!!!!!!!!!!

பாகிஸ்தானில் தற்போது நிலவும் ஆபத்தான நிலையில் அங்கு உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது . .

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் இணைந்து நடத்த உள்ளன.
பாகிஸ்தானில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவது உலகக் கோப்பை இங்கு நடத்தப்படுவது குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் கிரிக்கெட் உலகை நிலைகுலைய வைத்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானில் உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவது கேள்விக்குறியாகி உள்ளது.

தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான இடமாக தோன்றுவதாகவும், எனவே உலகக் கோப்பை உள்ளிட்ட எந்த சர்வதேச போட்டிகளையும் பாகிஸ்தானில் நடத்த முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோர்கன் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் ஏதாவது அதிசயம் நடந்து நிலைமை மாறினால் மட்டுமே உலகக் கோப்பையை அங்கு நடத்த முடியும் என்று அவர் கூறினார். அடுத்த 48 மணி நேரத்தில் இது குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது.

!!!!!!!!!!!!!!!!

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு மத்தியில் நிலைகுலையாமல் துணிச்சலோடு செயல்பட்டு பஸ் டிரைவரின் வீரம் இலங்கை வீரர்களின் உயிரை காப்பாற்றியது. அந்த டிரைவரின் வீரச்செயலுக்கு இலங்கை வீரர்கள் நெகிழ்ச்சியோடு நன்றி கூறியுள்ளனர். .

லாகூரில் நேற்று இலங்கை வீரர்களின் பஸ்சை வழிமறித்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர். இதனால் அனைவரும் திகைத்துப் போயினர். இருந்தும் இந்த நெருக்கடியான நிலையிலும் பஸ் டிரைவர் முகமது கலீல் பதட்டமடைந்து விடாமல் பஸ்சை நிறுத்தாமல் வெகு வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் இலங்கை வீரர்கள் அனைவரும் உயிர் தப்பினர். ஒரு சில வீரர்கள் காயத்தோடு தப்பினர்.

பஸ் டிரைவரின் இந்த துணிச்சலான செயல் இலங்கை வீரர்களை நெகிழச் செய்தது. அவசரமாக பாகிஸ்தானி லிருந்து விமானத்தின் மூலம் புறப்பட்டுச் சென்ற அவர்கள் அதற்கு முன்னர் டிரைவரை அழைத்து அவருக்கு நேரில் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளீதரன் தன்னுடைய சட்டையை டிரைவருக்கு பரிசாக வழங்கினார்.

இலங்கை வீரர்கள் தனது நாட்டின் விருந்தாளிகள் என்றும், அவர்களுக்கு ஆபத்து நேராமல் காப்பாற்றுவது தனது கடமை என்றும் பஸ் டிரைவர் கூறியுள்ளார். இலங்கை வீரர்கள் அனைவரும் உயிர் தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!!

1euro =143.01 sl /64.91in
1 us $ = 114.25 sl /51.86in
1 swiss fr = 96.80 sl /43.94in
1 uk pound =160.22 sl/72.72 in
1 saudi riyal =30.46sl /13.80in

Leave a Reply

Your email address will not be published.