வன்னியில் பட்டினிக்கொடுமை: அடம்பன் கொடி இலைகளை வறுத்து உண்ட அறுவர் மருத்துவமனையில் அனுமதி

வன்னியில் சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் பலியாகும் அப்பாவித்தமிழர்கள் ஒருபுறபுறமிருக்க, பட்டினி கொடுமையால் பலியாகும் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

சிங்கள அரசின் போர் முனைப்பினால் வன்னயில் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கப்பட்டுள்ள மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் பட்டினி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்து 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

The Adampan creeper (Ipomoea pes caprae)

சந்தனம் விசலாட்சி (72),
ஆறுமுகம் இராமையா 66),
சின்னையா தர்மலிங்கம் 65),
ஆகியோருடன் வீதியில் சென்று கொண்டிருந்த மேலும் இரண்டு வயோதிபர்கள் பட்டினிக் கொடுமையால் மயங்கி விழுந்து, உடனடியாக மாத்தளன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்கள் அங்கே உயிரிழந்துள்ளனர்.

பட்டினி காரணமாக அடம்பன் கொடியை கீரை என நினைத்து வறுத்து உண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மயக்கமுற்று விழுந்து ஆபத்தான நிலையில் மாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்,
சி.வசந்தபவன் (46),
வ.பத்மதேவி (38),
வ.யசித்திரன் ( 14),
வ.சத்தியா (3),
வ.சமர்வேந்தன் (08),
வ.கீர்த்திகா (06)
ஆறு பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.