பிபிஓ: ஆபத்தான 8 நகரங்கள் பட்டியலில் சென்னை!!

உலகில் அவுட்ஸோர்ஸிங் செய்வதில் மிகவும் ஆபத்தான, பாதுகாப்பற்ற பகுதிகள் என 8 இந்திய நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஆபத்தான நகரங்களில், ஒன்றாக வளர்ந்து வரும் ஐடி நகரமான சென்னையும் இடம்பெற்றுள்ளது.

2009-ம் ஆண்டு ஆஃப்ஷோர் அவுட்ஸோர்ஸிங் செய்ய பாதுகாப்பான நகரங்கள் எவை, ஆபத்து நிறைந்த நகரங்கள் எவை என சமீபத்தில் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவுட்ஸோர்ஸிங் குறித்த ஆராய்ச்சி மையமான ப்ரவுன் – வில்சன் குரூப்தான் இந்த பட்டியலைத் தயாரித்துள்ளது.

முன்பெல்லாம் அவுட்ஸோர்ஸிங் என்பது ‘சிறப்பாக, விரைவாக மற்றும் மலிவாக’ இருக்க வேண்டும் என்பதே நிறுவனங்களின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் தொடர் பயங்கரவாத நிகழ்வுகள், மோசடிகள், நிலையற்ற தன்மை இந்தத் துறையில் பெருகிவிட்டதாகவும், இதனால் அவுட்ஸோர்ஸிங்கை ‘பாதுகாப்பான, நிலையான மற்றும் நீடித்த நம்பிக்கை’ அடிப்படையில் செய்தால் போதும் என பல நிறுவனங்களும விரும்புகின்றனவாம்.

குறிப்பாக மும்பை தீவிரவாத தாக்குதல், சத்யம் மோசடி போன்றவற்றால், இந்திய நிறுவனங்களைக் கொண்டு அவுட்ஸோர்ஸிங் செய்ய பல்வேறு நாட்டு நிறுவனங்களும் தயங்குவதாக இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் முதல் தர நகரங்களான டெல்லி (குர்கான், நொய்டா உள்பட), மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய 4 நகரங்களுமே அவுட்ஸேர்ஸிங்க்குக்கு பாதுகாப்பற்ற நகரங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

அடுத்து இரண்டாம் கட்ட நகரங்கள் எனப்பட்ட, பெங்களூரு, புனே, ஹைதராபாத் மற்றும் சண்டிகர் நகரங்களும் அவுட்ஸோர்ஸிங் செய்ய இன்றைய தேதிக்குப் பாதுகாப்பானவை அல்ல என கண்டறிந்துள்ளனர். இங்கு போதிய உள்கட்டமைப்பு வசிதிகளும் இல்லை என இந்த கணக்கெடுப்பு கூறுகிறது.

இந்தியாவின் இந்த 8 நகரங்களைத் தவிர மற்ற நாடுகளில் ஆபத்தான நகரங்கள் பட்டியல்:

பகோடா – கொலம்பியா, பாங்காக் – தாய்லாந்து, ஜோகன்னஸ்பர்க் – தென் ஆப்பிரிக்கா, கோலாலம்பூர் – மலேஷியா, கிங்ஸ்டன் – ஜமைக்கா, மணிலா – பிலிப்பைன்ஸ், ரியோடி ஜெனிரோ – பிரேஸில், ஜெருசலேம் – இஸ்ரேல், கரிடிபா – பிரேஸில், பிரேஸிலியா – பிரேஸில், கொழும்பு -இலங்கை, ஹோ சி மின் சிட்டி – வியட்நாம், க்வெஸான் சிட்டி – பிலிப்பைன்ஸ், அக்ரா – கானா, ஹனோய் – வியட்நாம்.

இந்த 25 நகரங்களிலும் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பல நிறுவனங்கள் இப்போது தங்கள் அவுட் ஸோர்ஸிங் வேலையை உள்நாட்டிலேயே ரொடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளன.

சிவப்புப் பட்டியலிலிருந்து இந்த சிட்டிகளுக்கு எப்போது பச்சை சிக்னல் கிடைக்குமோ?

Source & Thanks : hatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.