வக்கீல்கள் மோதல் விவகாரம் : விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி :சென்னை ஐகோர்ட் மோதல் விவகாரம் தொடர்பான விசாரணை 6ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 19ம் தேதியன்று , வக்கீல்களுக்கும் போலீசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது . இதில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தது . சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரணையை நாளை மறுநாள் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது . சென்னை ஐகோர்ட் மோதல் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நியமித்த ஸ்ரீகிருஷணா குழு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை . அறிக்கை 5ம் தேதியன்று தான் தாக்கல் செய்யப்படுகிறது, எனவே வழக்கு விசாரணை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி வக்கீல்கள் ஏன் பணிக்கு திரும்பக்கூடாது என கேள்வி எழுப்பினார்கள் . அதற்கு வக்கீல்கள் , சென்னை ஐகோர்ட்டில், தங்களுக்கு பாதுகாப்பான சூழல் இன்னும் ஏற்படவில்லை எனவும் , அலுவலகங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை எனவும் கூறினர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.