தரையில் படுத்து உயிர் தப்பினோம்: ஜெயவர்த்தனே

லாகூர்: தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்ததும், பஸ்சிலிருந்து கீழே குதித்து தரையில் படுத்து உயிர் தப்பினோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

லாகூர் பயங்கரம் குறித்து திகில் மாறாத உணர்வுடன் ஜெயவர்த்தனே விவரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,நாங்கள் கடாபி ஸ்டேடியத்திற்குப் போய்க் கொண்டிருந்தபோது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது.

எங்களது பஸ்சை நோக்கி கையெறி குண்டுகள் வீசப்பட்டன. தொடர்ந்து துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டனர். முதலில் பஸ்சின் சக்கரங்களை குறி வைத்து சுட்டனர். இதனால் பஸ் போக முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பஸ்ஸை நோக்கி சுட ஆரம்பித்தனர்.

இதையடுத்து பஸ்சுக்குள் இருந்த அனைவரும் வேகமாக வெளியே குதித்து தரையில் படுத்துக் கொண்டோம்.

இந்த சம்பவத்தில் ஐந்து வீரர்கள், உதவிப் பயிற்சியாளர் பால் பேர்பிரேஸ் ஆகியோர் காயமடைந்தனர். அனைவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டது. அவையும் கூட கீழே விழுந்ததாலும், குண்டுச் சிதறல்களாலும் ஏற்பட்டவை என்றார் ஜெயவர்த்தனே.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.