‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (03.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

லாகூர் கடாபி மைதானத்தில் இடம்பெற்று வரும் பாகிஸ்தானுடனான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வாகனத்தில் உட்பிரவேசித்துக் கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை அணி வீரர்கள் ஆறுபேர் காயமடைந்துள்ளனர் .

திலான் சமரவீர, தாரங்க பரணவித்தான, அஜந்த மெண்டிஸ், சங்ககார, மகேல ஜெயவர்தன மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் 3 பொலிஸார் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது லாகூர் கடாபி மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகேல ஜெயவர்தன தனது காலில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவிடம் தொலைபேசியில் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. .

இதனையடுத்து பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்களில் நால்வர் சிகிச்சைப்பெற்று வெளியேறி உள்ளனர்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என காவல்துறையினருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை மைதானத்திற்கு வரும் வழியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை அழைத்து வந்த பேருந்து லிபர்டி சௌக் பகுதியில் முகமூடி அணிந்த மர்ம நபர்களா‌ல் துப்பாக்கிச்சூட்டிற்கு உள்ளானது .

இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து காவல்துறையினருக்கு ஏற்கனவே ரகசியத் தகவல் கிடைத்ததாகவும், அதன் காரணமாகவே இன்று கிரிக்கெட் வீரர்கள் மாற்று வழியில் மைதானத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாற்ற வழியில் அழைத்து வரப்பட்ட போதும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது அந்நாட்டில் இலங்கை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு உள்ளதை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், முகமூடியணிந்த 2 மர்ம நபர்கள் மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தாலும், இத்தாக்குதலை வெற்றிகரமாக நடத்த 12 பேர் மைதானத்திற்கு வந்ததாக லாகூர் காவல்துறைத் தலைவர் ஹபீப்உர்ரஷ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தான் லாகூரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை வீரர்கள் காயமடைந்ததையடுத்து ,வீரர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை வீரர்களான அஜந்த மெண்டிஸ், திலான் சமரவீர, தரங்க பரணவித்தான, குமார் சங்ககார, மகேல ஜெயவர்தன, சமிந்தவாஸ் மற்றும் அணியின் துணைப் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் அவசர விமானம் மூலமாக இலங்கை அணி வீரர்களை வெகு விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கிரிக்கட் சபை பிரதம நிறைவேற்று அதிகாரி டுலிப் மெண்டிஸ் தெரிவித்தார் .

அத்துடன் தோற்பட்டையில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து காயமடைந்த பரணவித்தான, திலான் ,துணைப் பயிற்றுவிப்பாளர் போல் ஆகியோர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் , விரைவில் அவர்கள ஹோட்டலுக்கு அழைத்துவரப்பட்டு நாட்டிற்கு இன்று இரவிற்குல் அழைத்துவரப்படுவர் என டுலிப் மெண்டிஸ் கிரிக்கட் சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

இத்துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து லாகூர் கடாபி மைதானத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன். பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை அணி வீரகள பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தமையை இட்டு தாம் அதிர்ச்சி அடைவதாகவு, இலங்கை வீரர்களிற்கு முக்கிய பிரமுகர்களிற்கான பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்த பின்பே வீரகள் பாகிஸ்தான் சென்றுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
போரை முடிவுக்கு கொண்டு வந்து தமிழ் மக்களின் துன்பங்களைப் போக்கி அவர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு நிரந்தர தீர்வைக் காண்பதற்கு இந்தியா, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகும் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு திங்கட்கிழமை அளித்த மெயில் பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு முன்வைக்கப்பட்ட இந்த போர் நிறுத்தக் கோரிக்கை தமக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனக் கூறி இலங்கை அரசு ஏற்கனவே நிராகரித்து விட்டது.

தமிழ் நாடு தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜி இதனை சொல்லியிருப்பதை அரசியல் அழுத்தத்தால் சொல்லப்பட்ட ஒரு விடயமாகவே கொழும்பு பார்க்கின்றது. அத்தோடு மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான போர்நிறுத்தம் தொடர்பாக இந்தியா தொடர்ந்து சொல்லி வருவதை ஒரு தற்காலிக நடவடிக்கையாகவும், தமிழர் தாயகம் மீதான இலங்கை அரசின் படையெடுப்புக்கு வழங்கப்படும் ஓர் ஆசீர்வாதமாகவுமே நாம் கருத முடியும்.

அத்தோடு பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கு பதில் வழங்கியிருக்கும் இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பதே போர்நிறுத்தத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்று சொல்லியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆயுதங்களைக் கீழே வைப்பதற்கான எந்தக் கோரிக்கையையும் நாம் நிராகரிக்கின்றோம். ஏனெனில் இந்த ஆயுதங்கள் எமது அரசியல் போராட்டத்தின் கருவிகள் மட்டுமன்றி, அவையே எமது மக்களின் பாதுகாப்பு கவசங்களுமாகும்.

இந்தியா இப்போது, போரை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின் துன்பங்களைப் போக்கி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு நிரந்தரத் தீர்வு காணவே இலங்கையை வலியுறுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஏகாதிபத்திய ஆட்சியானது, இந்நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து விட்டது. மக்களுக்குப் பொருத்தமே இல்லாத குடும்ப ஏகாதிபத்தியத்தைக் கவிழ்ப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி விட்டது என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஒழிந்து விட்டதாக பண்டாரநாயக்க பரம்பரை தம்பட்டம் அடித்தது. ஆனால், அது நடைபெறவில்லை.

இன்று மஹிந்த குடும்பம் அதற்கான சதியில் இறங்கியிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அசைத்துப் பார்க்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கனவு துடைத்தெறியப்படும் என்றும் அவர் கூறினார். மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களைச் சந்திக்கும் விஷேட நிகழ்வு நேற்று மாலை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது.

. எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில், “இந்நாட்டை ஆட்சி செய்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் சவாலாகவும் நிற்பது ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே. அதனால், எப்படியாவது எமது கட்சியை சின்னா பின்னமாக்கிவிட வேண்டும் என்ற தோரணையில் அவர் பல சதித் திட்டங்களைத் தீட்டி வருகின்றார்.

நூற்றுக்கு மேற்பட்ட அமைச்சுக்களை கொண்டிருக்கின்ற அரசாங்கத்தில் அதன் அதிகாரங்கள் அமைச்சர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது அது தனது குடும்பத்தின் கையிலேயே பகிரப்பட்டிருக்கின்றது என்பது நாடறிந்த விடயம். இதனை வெளிப்படுத்துவது பாரிய குற்றம் என்பதால் ஊடக அடக்கு முறையும் அச்சுறுத்தல், கொலைகளும் கடத்தல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் மறுக்கின்றனர். இவ்வாறு மக்கள் ஏமாற்றும் அரசாங்கமே இன்று அதிகாரத்தில் இருக்கின்றது.

சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்காது அரசியலமைப்பையே மீறச் செயற்படுகின்ற குடும்ப அரசியல் இந்நாட்டில் இருந்தே தூக்கியெறியப்பட வேண்டும். இதனையே ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்துகின்றது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க முதல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரையில் கூறிய ஒரே விடயம் ஐக்கிய தேசியக் கட்சி ஒழித்து விட்டது. இனி அதனால் எழ முடியாது என்பதாகும். அது நடந்ததாக இல்லை. தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரக் கம்பனியுமு“ சதித்திட்டங்களின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியை ஒழித்துக்கட்ட காணுகின்ற கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியயை எவராலும் அசைத்துவிட முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தை பொறுப்பெடுத்ததில் இருந்து ஏகாதிபத்திய ஆட்சியே இடம்பெற்று வருகின்றது. இதன் விளைவாக நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டன. நாட்டின் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்துக்கும் ஏற்றதான நல்லாட்சியைக் கொடுக்கும் ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சிதான். எமது தாய்நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவே ஐக்கிய தேசியக் கட்சி இருக்கின்றது. அரசின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நிற்பது நாம் மட்டுமே. அதனாலேயே இந்நாட்டின் ஜனநாயகத்தை இல்லாதொழித்துள்ள ராஜபக்ஷவின் ஏகாதிபத்தியத்தியம் ஐக்கிய தேசியக் கட்சியையும் அழித்து விட நினைக்கின்றது . அந்த நினைப்புக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

நடைபெறவிருக்கும் மேல்மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டு அரசாங்கத்தை கவிழ்க்க களத்தில் இறங்கியுள்ளது . எனவே, ஜனநாயகத்தை வெற்றிகொள்ளும் தேர்தலாக மேல்மாகாண சபைத் தேர்தலை பயன்படுத்துவோம் . நாடு எதிர்பார்க்கும் நல்லாட்சியை வழங்கும் அருகதை ஐக்கிய தேசியக் கட்சியிடம் மாத்திரமே இருக்கின்றது. எனவே, மேல்மாகாண சபை அதற்கான வாய்ப்பாக அமைய வேண்டும்என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிரடிப்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயதான சிறுமியின் தாய் நேற்று இரவு படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரின் வீட்டுக்கு சென்ற அதிரடிப்படையினர் சிறுமியின் தந்தையை கட்டி வைத்து விட்டு தாயை கிணற்றில் வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் சிறுமியின் தாய் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

தமது மகள் படையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக குறித்த தாய் வாக்குமூலம் வழங்கவிருந்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மண்டூர் கூமாவடி பிள்ளையார் கோயிலடி பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்த இரண்டு காவல்துறையினரும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அம்பாறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விபரங்கள் கிடைக்கவில்ல
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதல் 10 தமிழ் இளைஞர்கள் கைது
கொழும்பு பகுதியில் இராணுவம் மற்றும் காவல்துறையிர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் 10 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தொழில் பயிற்சி பிரதியமைச்சர் பி.இராதாகிருணனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று திங்க்கிழமை அதிகாலை வேளையில் களுவோவிலா, மற்றும் கொகுவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் தெகிவல காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் உடறவினர்கள் பிரதியமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மொரட்டுவப் பகுதியிலும் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் எத்தனைபேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் ஏதும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேபாளம் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு , தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக அந்நாட்டில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டிற்கு வெளியிலும் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ட்ரைபுவான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தலைநகர் காட்மண்டு வரையில் சுமார் 1500 நேபாள பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் மாவோயிச தீவிரவாத அமைப்பினால் தற்போது நேபாளத்தில் ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
லண்டனில் நாளை ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கை அரசுக்கு , மனித உரிமைகள் விடயத்தில் அக்கறை கொள்ளுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டு மென வலியுறுத்தப்படவுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இணை இயக்குநர் கரோல் பொகேர்ட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பொதுநலவாயத் தலைவர்கள், இலங்கை அரசை மனித உரிமைகள் விடயங்களில் முன்னேற்றத்தைக் காணுமாறு வலியுறுத்த வேண்டு மென அவர் தெரிவித்துள்ளார்.
மோதல்களிலிருந்து தப்பியோடும் பொதுமக்கள் இரு தரப்பிலிருந்தும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.
“இலங்கை அரசின் செயற்பாடுகள் மற்றும் மனித உரிமை விடயங்களில் மோசமான நிலைமைக்காக அந்த அரசைப் பொறுப்பாளியாக்க வேண்டும்.
அதற்காக பொதுநலவாய அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டும்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அமைத்துள்ள பாதுகாப்பு வலயத்தை விஸ்தரித்து இடம்பெயர்ந்து தவிக்கும் இரண்டு இலட்சம் மக்களுக்குரிய சேவைகளைச் செய்வதற்கு மட்டுமே அமெரிக்க அரசாங்கம் உதவவேண்டும். சிறிலங்காவில் சமத்துவத்துக்கும் நிவாரண உதவிக்குமான மக்கள் இயக்கம் (People for Equality and Relief in Srilanka – PEARL) அமெரிக்க அரசாங்கத்துக்கு மேற்கண்ட அவசர வேண்டுகோளை விடுத்திருக்கிறது.
அத்துடன் அங்கு சிக்குண்டுள்ள மக்களை அமெரிக்க பசுபிக் கட்டளை அணியின் (PACOM) உதவியுடன் வெளியேற்றி இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் திட்டத்துக்கு எந்த வகையிலும் துணை போகவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

முல்லைத்தீவில் போரில் சிக்குண்டுள்ள 2 இலட்சம் மக்களையும் யு.எஸ்.பசுபிக் கட்டளைப் பிரிவின் உதவியுடன் வெளியேற்றி இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் திட்டம் ஒன்று குறித்து அறியவருகிறது. அந்தத் திட்டத்துக்கு துணை போக வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று வாஷிங்ரனில் இயங்கும் சிறிலங்காவில் சமத்துவத்துக்கும் நிவாரண உதவிக்குமான மக்கள் இயக்கம்பேர்ள்நேற்று விடுத்த அறிக்கையில் கேட்டுள்ளது.
இரண்டு இலட்சம் மக்களும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு வலயத்தின் பிரதேசத்தை விஸ்தரித்து மக்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கும் வண்ணம் தொண்டர் நிறுவனங்கள் அங்கு பணிபுரியவும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் தாராளமாக சென்றுவரவும் அனுமதிக்க வசதி செய்யப்படவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது .
போரில் சிக்கித் தவிக்கும் மக்கள் நெருக்குண்டு வசிக்காமல்மூச்சு விடும்வகையில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கேட்கப்பட்டுள்ளது.
போரில் சிக்குண்டுள்ள மக்களை அவர்களின் இடங்களில் இருந்து வெளியேற்றி இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது அந்த மக்கள் தமது மரணத்துக்குரிய பிடியாணையில் ஒப்பம் இடுவதுக்கு நிகராகும். அத்தோடு அரசின் இன அழிப்பை நிறைவேற்றுவதாகவும் அது அமையும் என்றுபேர்ள்அமைப்பின் பேச்சாளர் றோஷா ஹெப்ஸர் கருத்து வெளியிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
இடம்பெயரும் மக்களின் தங்குமிட வசதிகருதி குடாநாட்டில் நலன்புரி முகாம்களை மேலும் அமைக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கிணங்க புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள இரு நலன்புரி முகாம்கள் உட்பட குடாநாட்டில் உள்ள முகாம்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரிக்கப்படவுள்ளது.
கோப்பாய், மிருசுவில், கொடிகாமம் மற்றும் குருநகர் ஆகிய இடங்களில் 2000 இற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .
இடம்பெயர்ந்தோருக்காக, கொடிகாமத்தில் உள்ள நலன்புரி நிலையத்தை விஸ்தரிக்கவுள்ளதோடு, கைதடியில் புதிதாக ஒரு நலன்புரி முகாம் நிறுவப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குடாநாட்டில் உள்ள 4 முகாம்களில் பாடசாலை சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார் உட்பட 2,333 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனினும், மேலும் கூடுதலானோர் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து குடாநாட்டுக்கு வரவுள்ளதாக எதிர்பார்ப்பதுடன், அவர்களுக்காக மேலும் இரு முகாம்களை அமைக்கவுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளை மதிப்பீடு செய்யவும் கண்காணிக்கவும் என பிரதேச செயலாளர், கிராம சேவகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் வாராந்த கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்சமயம் வரட்சியான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் வயிற்றோட்ட நோய் பரவியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .
குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில், தொற்றுநோய் அபாயத்தை அங்குள்ள மக்கள் எதிர்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அம்பாறை மாவட்டம்திருக்கோவில் பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுச் சந்தைக் கட்டிடம் MAjjhup கருணாவினால் திறந்து வைக்கப்பட்டு பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது .
இன்று காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்ட மகிந்தவின் இணைப்பாளரும் MAjjhupAkhd கருணாவின் தளபதியுமான இனியபாரதியின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு கெடுபிடிக்குள்ளாகியிருந்தனர்.
இப்பொதுச் சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு சந்திரகாந்தன் நாட்டியிருந்ததுடன் இந்நிகழ்வில் வைத்தே இனியபாரதியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலிருந்து இவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்கட்டிடமே இன்று கட்டப்பட்டு MAjjhupகருணாவினால் திறந்துவைக்கப்பட்டிருந்தது .
இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளும்பொருட்டு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் துப்பாக்கிமுனையில்MAjjhup கருணா குழுவினர் அச்சுறுத்தல் விடுத்திருந்ததுடன் வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலாத்காரமாக வாகனமொன்றுக்குள் ஏற்றப்பட்டு இலங்கையின் சிங்கக்கொடியை நிகழ்வில் பிடித்துக்கொண்டு நிற்குமாறும் பணிக்கப்பட்டிருந்தனர்.
அலுவலகங்களில் வேலைசெய்யும் இளம்பெண்கள் துப்பாக்கிமுனையில் கொண்டுவரப்பட்டு MAjjhupகருணாவிற்கும் அவரது பிரதிநிதிகளுக்கும் மாலை அணிவிக்கப் பணிக்கப்பட்டனர்.
சுற்றுப்புற சூழலிலுள்ள மக்கள் அனைவரும் MAjjhupகருணா குழுவினரால் வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததுடன் நிகழ்வுக்கு வருகைதராதோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இனியபாரதியின் குழுவினரால் நேற்று வீடுவீடாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் MAjjhupகருணாவினால் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் தாம் நிராயுதபாணிகளாய் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொள்ளப் போவதாகவும், சுதந்திரக் கட்சியின் கொடியே தமது கொடியெனவும்MAjjhup கருணாவினால் அறிவிக்கப்பட்டது.
திருக்கோவில் பிரதேச சபை ஊறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலகவேண்டுமென்றும் . இல்லாவிடில் தாம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுமெனவும் MAjjhupகருணாவினால் மிரட்டல் விடுக்கப்பட்டது.
மேலும் விரைவில் வேலையில்லாதோருக்கு தான் வேலை பெற்றுக்கொடுப்பதாகவும்MAjjhup கருணா தெரிவித்தார் . இந்நிகழ்வை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசம் முழுவதும் நீலக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் கல்முனைபாண்டிருப்பு எல்லைவீதியிலுள்ள பிரதர் ஹவுசில் MAjjhupகருணாவினால் ஊர்பொதுமக்களுக்கு பொதுக்கூட்டமொன்றுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் வருகைதராதோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் MAjjhupகருணாகுழுவினரால் வீடுவீடாகச் சென்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு பாண்டிருப்பு எல்லைவீதி நீலக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இப்பகுதி பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணத்திலே இத்தகைய நிகழ்வுகளை இவர்கள் நடத்துவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தாம் நிராயுதபாணிகளாக அரசாங்கத்துடன் இணைவதாகக் கூறிக்கொண்டு ஆயுதமுனையில் அப்பாவி தமிழ்மக்களை துன்புறுத்திவருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்து சுமார் 150 பொதுமக்களை ஏற்றிக்கொண்டுசேருவிலபயணிகள் கப்பல் நேற்று திங்கட்கிழமை இரவு திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, நேற்று திங்கள் நண்பகல் வரை, திருகோணமலைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட காயமடைந்தவர்களில் 25 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. திருகோணமலை ஆஸ்பத்திரியில் 16 பேரும் கண்டி ஆஸ்பத்திரியில் 7 பேரும் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் 2 பேரும் உயிரிழந்தனர் என்று சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் வாழும் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை தடை செய்வதையே குறிக்கோளாக கொண்டு செயற்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் இந்த துரோகத் தனத்தை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் மன்னிக்காது என்று மீள் குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
புத்தளம், தில்லையடியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலாசார புனர்வாழ்வு அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .
வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்களின் கலாசார விழுமியங்களை முன்னெடுப்பதே இந்த அதிகாரிகளின் பணியாகும்.
இங்கு மேலும் அமைச்சர் றிசாட் பதியுதீன் பேசுகையில் கூறியதாவது;
“”மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கியது சமூகத்தின் விடுதலைக்காக. அன்று அரசாங்கத்திலும் சரி, எதிர்க்கட்சியிலும் சரி இருந்த போது முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கும் உரிமைக்கும் எந்தவித களங்கமுமின்றி மிகவும் நேர்மையாக செயற்பட்டதால் தான் கட்சி தழைத்தோங்கியது.
ஆனால், தற்போதைய தலைவராக இருக்கும் ரவூப் ஹக்கீம் தலைவர் வழி மறந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை விசுவாசிக்கும் ஒருவராக மாறியுள்ளதானது, இலங்கை முஸ்லிம்களின் எதிர் காலத்தை, அடகு வைத்து விடும் செயலாகும் .
வட மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிபெறும் என ஆருடம் கூறி வந்த ரவூப் ஹக்கீம், 13 ஆவது தேர்தலிலும் தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு பின்னால் தொடர்ந்தும் சேவகம் செய்வதற்கு புறப்பட்டுள்ளதானது சிறு பிள்ளைத் தனமான செயலாகும்.
உலக வங்கி வீடமைப்புத் திட்டமானது நாம் அமைச்சராக வந்த போது பல சிரமங்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுவரப்பட்டது.
இன்று எனக்கெதிராக போலி குற்றச்சாட்டுகளையும் பொய்களையும் புனைத்து மக்கள் மத்தியிலும் உலக வங்கி பிரதிநிதிகளிடத்திலும் கூறி இந்த வீடமைப்புத் திட்டத்தை தாமதப்படுத்தும் பணியில் முஸ்லிம் சமூகத்தின் தலைவர் என்று கூறும் ரவூப் ஹக்கீம் செயற்படுவதானது வேதனை தரும் செயலாகும்.
இவ்வாறு வட புலத்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு செய்யும் அநியாயத்துக்கு வட மாகாணத்து அரசியல்வாதிகள் சிலரும் துணை போயுள்ளதானது வரலாற்று தவறை செய்கின்றனர்.
ஏனைய அரசியல்வாதிகளுக்குள்ள பிரச்சினை அபிவிருத்தி மட்டுமே, ஆனால், எம்மை பொறுத்தவரையில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்கின்ற பிரதேசத்திலும் அம் மக்கள் மீளக் குடியமரும் பிரதேசங்களிலும் அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியுள்ளதுஎன்றும் அவர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பக (Human Rights Watch) அணியொன்று உரியமுறையில் அனுமதி பெறாமல் எவ்வாறு வவுனியாவுக்கு சென்று இடம்பெயர்ந்த மக்களை சந்தித்துப் பேசி ஆய்வு நடத்தியது என்பது தொடர்பாக அரசாங்கம் விசாரணையொன்றை ஆரம்பித்திருக்கிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் இலங்கை சென்று வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பாக ஆய்வொன்றை நடத்தியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அவசர நிலைமைகள் தொடர்பான சிரேஷ்ட ஆய்வாளரான அன்னா நெய்ஸ்டற், கடந்த வாரம் நடைபெற்ற இலங்கை தொடர்பான அமெரிக்க செனட் குழு விசாரணையில் தெரிவித்ததுடன், அதன் பின்னர் வார இறுதியில் விடுத்த ஊடக அறிக்கையொன்றிலும் அவர் இதை சுட்டிக்காட்டியிருந்தார் .
அத்துடன், தான் இலங்கை வந்ததை ஆங்கில நாளேடு ஒன்றுக்கு மீள உறுதிப்படுத்தியிருக்கும் அன்னா நெய்ஸ்டற், “”வைத்தியசாலை மற்றும் முகாம் பகுதிகளில் நான் இருந்தேன். எனினும் முகாமின் உட்புறத்தில் நான் செல்லவில்லை. இருந்த போதிலும் முகாம்களுக்கு வெளியில் இருந்த இடம்பெயர்ந்த மக்களிடமும், முகாம்களில் பணிபுரிபவர்களிடமும் நான் கருத்துக்களை கேட்டறிந்தேன்என்றும் கூறியிருக்கிறார்.
இதேநேரம், இலங்கையில் இவ்வாறானதொரு ஆய்வை நடத்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாவென வினவியபோது, இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் வெளிநாட்டமைச்சரும் அவ்வாறான அனுமதிகள் எதுவும் வழங்கப்படவில்லையென மறுத்திருக்கின்றனர்.
அத்துடன், இது தொடர்பான விசாரணையொன்று ஆரம்பிக்கப் படவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர் .
“”இங்கு வந்து ஆய்வு நடத்த அன்னா நெய்ஸ்டற் என்ற பெயர் கொண்ட எவருக்குமோ அல்லது மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்கோ எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை. இவர்கள் சுற்றுலாப் பயணிகள் போல வந்து குடிவரவு சட்டவிதிகளை மீறி அவர்களது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு சென்றிருக்கலாம். இது பாரதூரமான விடயம் என்பதுடன், இது தொடர்பாக நாம் விசாரிப்போம்’ என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருக்கிறார்.
எனினும், தனது ஆய்வு நடவடிக்கைகளின் போது இலங்கையின் எந்தவொரு சட்டத்தையும் தான் மீறவில்லையென அன்னா நெய்ஸ்டற் வலியுறுத்தி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
“”அரசாங்கம் ஏன் இதில் மிகவும் கவலைப்படுகிறது என்பது வியப்பாக இல்லையா? எமது தகவல்கள் தவறென அவர்கள் (அரசாங்கம்) கூறுவார்களாயின், சுயாதீனமான ஊடகவியலாளர்களையும் ஏனைய குழுவினரையும் அந்தப் பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளை அறிய அனுமதிப்பதே மிகச் சிறந்த வழியாக இருக்கும். அதற்கான வழி அங்கு இல்லாத போது, அதிகாரிகள் எதை மறைக்க முயற்சிக்கின்றனர் என்பதே முதல் கேள்வியாக இருக்கும்’ என்றும் நெய்ஸ்டற் குறிப்பிட்டிருக்கிறார்.
உள்நாட்டு குடிவரவு சட்டங்களை மீறியதாக இலங்கை அரசாங்கத்தினால் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீது குற்றஞ் சுமத்தப்படுவது இது முதற் தடவையல்ல. கடந்த 2007 ஆம் ஆண்டிலும் இதேபோல் சுற்றுலாப் பயணிகள் போல இலங்கை வந்த மனித உரிமைகள் கண்காணிப்பக அணியொன்று இதையொத்த ஆய்வுகளை நடத்தி நாட்டை விட்டு செல்லும் முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தியிருந்தது.
இதேநேரம், பெயர் தெரிய வராத நிலையில் மனித உரிமைகள் கண்காணிப்பக அணியொன்று வவுனியா சென்று ஆய்வு நடத்தியிருக்குமென்றால், அவர்கள் தொண்டர் அமைப்பொன்றின் பணியாளர்கள் போல பாவனை செய்து சென்றிருக்கலாமென வெளிநாட்டமைச்சின் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியிருக்கிறார் .
அத்துடன், ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் நாட்டின் சட்டங்களை மீறுவது இது முதற் தடவையல்ல என்பதுடன், ஆய்வாளர்கள் கடத்தப்பட்டிருப்பதற்கான (ஆய்வுக்கென அழைத்துச் செல்லப்பட்டிருப்பதற்கான) சாத்தியங்கள் உட்பட அனைத்து வழிகளிலும் இவ் விடயம் குறித்து ஆராய வேண்டியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருக்கிறார் .
அமெரிக்க செனற் சபையின் வெளியுறவுகளுக்கான உப குழுவின் விசாரணை அமர்வில் அறிக்கை சமர்ப்பித்திருக்கும் அன்னா நெய்ஸ்டற், கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி மனித உரிமைகள் கண்காணிப்பகம் வவுனியா வைத்தியசாலைக்கு சென்றிருந்ததுடன், அங்கு மகப்பேற்று பிரிவிலுள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று பார்வையிட்டதன் பின்னர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து வந்திருந்த பல நோயாளிகளிடம் கருத்துகளை கேட்டறிந்ததாகதெரிவித்திருக்கிறார்.
இதேநேரம், வார இறுதியில் விடுத்த அறிக்கையில், “”வன்னிக்கு சென்றபோது அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் என்னை திகைப்படையச் செய்தன. அத்துடன், (.நா.) பாதுகாப்புச் சபையின் அவசர பதிவொன்றும் தேவைப்படுகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்தும் ஷெல் தாக்குதல்களிலிருந்தும் தப்பி வரும் போது, மக்கள் அரசாங்கத்தினால் முட்கம்பிகளால் வேலியடைக்கப்பட்டு வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்ட இராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்படுகின்றனர்என்று அன்னா நெய்ஸ்டற் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னதாக அமெரிக்க செனற் குழுவில் பேசியிருந்த நெய்ஸ்டற், இடம்பெயர்ந்து வந்தவர்களை 3 வருடங்களுக்கு நலன்புரி முகாம்களிலேயே வைத்திருப்பதே அரசாங்கத்தின் தீர்மானமாக இருந்தபோதும், அகதிகளுக்கான .நா.உயர்ஸ்தானிகராலயத்தின் (யூ.என்.எச்.சீ .ஆர்.) எதிர்ப்பை அடுத்து, இடம்பெயர்ந்து வந்தவர்களில் பெரும்பாலானவர்களை இந்த வருட இறுதியில் மீள்குடியேற்ற உத்தேசிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறியிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன், முகாம்களில் சிவில் உடைகளுடன் இராணுவ புலனாய்வு பிரிவினரதும் துணைப் படையினரதும் நடமாட்டங்கள் இருப்பதாக வடக்கிற்கு சென்றிருந்த போது பல தரப்புகளிலிருந்தும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
பல்வேறு முகாம்களிலும் துணைப்படை உறுப்பினர்கள் இருப்பதை தானும் தனது சக பணியாளர்களும் அவதானித்திருப்பதாக வவுனியாவிலுள்ள .நா பணியாளர் ஒருவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு கூறியதாகவும் அன்னா நெய்ஸ்டற் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன், இராணுவத்தினரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரும் தொடர்ச்சியாக ஒவ்வொரு இரவுகளிலும் முகாம்களிலுள்ள இளைஞர், யுவதிகளை அழைத்து விசாரித்து வருவதாகவும் இவ்வாறான விசார ணைகள் முகாம்களில் பாதுகாப்புத் தரப்பினருக்கான பகுதிகளில் வைத்தே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நிதி உதவிக்காக சர்வதேச நாணய நிதியம் முன்வைத்திருக்கும்தெரிவுகளைபரி சீலித்து வருவதாக இலங்கை மத்தியவங்கி நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.
வெளிநாட்டு நாணயக் கையிருப்புகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வீழ்ச்சியின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய வங்கி தளர்த்தியிருப்பதாக இது தென்படுவதாக ராய்ட்டர் செய்திச்சேவை நேற்று தெரிவித்திருக்கிறது.
2008 டிசம்பரில் வெளிநாட்டு நாணய கையிருப்புகள் 1.75 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஜூலையில் இது 3.56 பில்லியன் டொலராக இருந்தது. இருமாத காலத்துக்கும் குறைவான காலப்பகுதிக்குரிய இறக்குமதிகளுக்கே இது போதுமானதாகும்.
“சர்வதேச நாணய நிதியம் கூறுவதில் ஏதாவது “தேர்வு’ இருந்தால் அதனை நாம் பரிசீலிப்போம் என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித்நிவாட் கப்ரால் நேற்று ராய்ட்டருக்கு தெரிவித்திருக்கிறார்.
தனது வருடாந்த மீளாய்வுக்காக கொழும்புக்கு தற்போது சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு வருகைதந்துள்ளது. அக்குழுவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றதை கப்ரால் உறுதிப்படுத்தியுள்ளார் .இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளுடன் இணங்கிச் செல்லாமல் சர்வதேச நாணய நிதியம் ஏதாவது நிபந்தனைகளை முன்வைத்தால் அது முழுமையாக நிராகரிக்கப்படும் என்று கடந்த நவம்பரில் இலங்கை மத்தியவங்கி தெரிவித்திருந்தது.
“மீட்சி பெறும் தீர்வுப் பொதி’ தொடர்பாக கலந்துரையாடப்பட்டதா என்று கேட்கப்பட்டபோது, இல்லை, மீட்சி பெறும் திட்டம் எதனையும் நாம் விரும்பவில்லை. நாம் சமாளித்து வருகிறோம்’ என்று கப்ரால் கூறியுள்ளார்.
1.5 பில்லியன் நிதி உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் முன் வந்திருப்பதாகவும் கடந்த காலத்திலும் பார்க்க குறைந்த அளவிலேயே நிபந்தனைகளை முன்வைத்திருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பாக இரு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. தொகை தொடர்பாக சர்வதேச நாணய நிதியமும் கப்ராலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். விடயத்தின் உணர்வுபூர்வத்தன்மையால் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள “வட்டாரங்கள்’ மறுத்துவிட்டன.
வருடாந்த மீளாய்வின் அடிப்படையிலேயே அதிகாரிகள் வருகைதந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
லங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நாட்டின் அண்மித்த பொருளாதார நிலைமை , அதிகாரிகளின் பரும்படியாக்க பொருளாதார கொள்கைகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரமானது தேயிலை, ஆடைத் தொழிற்றுறை ஏற்றுமதி சம்பாத்தியத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.
அத்துடன், வெளிநாடுகளிலிருந்து இலங்கையர் அனுப்பும் பணத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரக் கொள்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் முன்வைத்திருக்கும் தெரிவுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையா என்பது தொடர்பாக இப்போது கூறுவது மிகவும் முன் முதிர்ச்சியற்றது என்று கப்ரால் கூறியுள்ளார்.
கடந்த காலத்திலும் பார்க்க அவர்கள் சாதகமான தன்மையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நாணயப் பெறுமதியை பாதுகாக்க மத்திய வங்கி மேற்கொண்ட நடவடிக்கையானது கணிசமான அளவுக்கு வெளிநாட்டு நாணயக் கையிருப்பை சுருங்கச் செய்து விட்டது. உலக பொருளாதார நெருக்கடியால் திறைசேரி பாதுகாப்புச் சந்தையிலிருந்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறி விட்டதாலும் பாதிப்பு ஏற்பட்டது.
இதேவேளை, கடனை திருப்பிச்செலுத்தும் கடப்பாட்டிலிருந்து நாடு ஒருபோதும் பின்வாங்காது என்று மத்திய வங்கியின் பிரதம பொருளியலாளர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ரஜரட்டபிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா ஹோட்டல் கைத்தொழில் துறை வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக, கலாசார முக்கோண வலயத்தின் ஹோட்டல் உரிமையாளர் சங்கப் பொருளாளரான சாலிய தயானந்த தெரிவித்தார்.
இப்பிரதேசத்தின் சுற்றுலா ஹோட்டல் கைத்தொழில் வலயத்தினுள் 23 உயர்தர ஹோட்டல்கள் அமைந்திருப்பதாகவும் மேலும் 71 மத்தியதர ஹோட்டல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்த சாலிய தயானந்த; இவற்றுள் 30 ஹோட்டல்களை முழுமையாகவே நிர்வகிக்க முடியாத நிலையில் வருமானம் குன்றியிருப்பதாகவும் இதனால் ஹோட்டல் சிப்பந்திகளின் எண்ணிக்கையையும் பெருமளவில் குறைக்க நேர்ந்துள்ளதாகவும் கூறினார். உலகத்தில் தற்போது உருவாகியுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியே, சுற்றுலாக் கைத்தொழில் துறையில் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்குக் காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது வான் தாக்குதல் நடத்த வந்த விடுதலைப் புலிகளின் விமானி தொடர்பாக நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்திற்கு வெளியே அண்மையில் விடுதலைப் புலிகளின் விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணை நேற்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது .
இதன் போது அங்கு இருவர் சாட்சியமளித்தனர். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இருவரது விபரங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டாமெனத் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் இருவரும், தற்போது நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருக்கும் புலிகளின் விமானியின் உடலைப் பார்வையிட்ட பின்னரே உடலை அடையாளம் காட்டினர்.
இந்த விமானத் தாக்குதலின் பின்னர் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் புலிகளின் தலைவரின் இடப்பக்கமாக இருந்தவரது உடலும் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருப்பவரது உடலும் ஒன்றென அவர்கள் கூறியிருந்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இவர் அச்சுவேலி இடைக்காடு பகுதியைச் சேர்ந்த முருகப்பிள்ளை சிவரூபன் (வயது 32) என்றும் தெரிவித்தனர்.
இவரது தந்தை இறந்து விட்டதாகவும் இவருக்கு இரு சகோதரிகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இவர் புலிகளின் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்ததாகவும் தெரிவித்தனர் .
இதையடுத்து இறந்தவரது உடலை மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தனது கணவனை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மனைவிக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி கஹவத்தையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மனைவியான எதிரி கணவனை தீ மூட்டிக்கொளுத்தி கொலை செய்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
இறந்த கணவன் தினமும் குடித்துவிட்டு தன்னை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், சம்பவ தினம் இவ்வாறு அடித்தபோது தான் தனது குழந்தையுடன் வீட்டைவிட்டு ஓடியதாகவும் அதன் பின்னர் அவர் எரிந்ததாகவும் மனைவி தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி . ஹெலியந்தொடுவ முன்னிலையில் நடைபெற்றத
!!!!!!!!!!!!!!!!!
வைத்தியசாலைகளில் உள்ளக மருத்துவ பயிற்சியை முடித்துள்ள 376 மருத்துவர்கள் இன்று முதல் வடக்கு கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நாடெங்குமுள்ள வைத்தியசாலைகளுக்கு இம்முறை உள்ளகப் பயிற்சியை முடித்த 729 மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சு புதிதாக நியமனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை முடிந்தவரை தீர்ப்பதற்காகவே மருத்துவர்கள் மேற்படிப் பிரதேச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் விமல ஜயந்த தெரிவித்துள்ளார்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!
...‌தி.மு..வுட‌ன் நாளை தொகு‌தி ப‌‌‌ங்‌கீ‌ட்டு பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உ‌ள்ளோ‌ம் எ‌ன்று இ‌ந்‌திய க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌‌சி‌யி‌‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன் கூ‌றினா‌ர்
செ‌ன்னைதியாகராய‌ர் நக‌‌ரி‌ல் இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் அலுவலக‌த்‌தி‌ற்கு இ‌ன்று அடி‌க்க‌ல் நா‌‌ட்டிய அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌‌சிய போது இதனை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம் .. .‌தி.மு.. கூ‌ட்ட‌ணி வலுவாக உ‌ள்ளதாகவு‌ம், இ‌ந்த கூ‌ட்ட‌ணி வெ‌ற்‌றி கூ‌‌ட்ட‌ணி எ‌‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

பாராளும‌ன்ற தே‌ர்த‌‌லி‌ல் இ‌ந்த கூ‌ட்ட‌ணி அ‌திகஇட‌ங்களை ‌‌பிடி‌க்கு‌ம் எ‌ன்று ந‌ம்புவதாகவு‌ம், நாளை ...‌தி. மு..வுட‌ன் தொகு‌தி ப‌ங்‌கீ‌ட்டு பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உ‌ள்ளோ‌ம் என‌்று‌ம் தா.பா‌ண்டிய‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் தி.மு..-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று த‌மிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம்நபிஆசாத் கூறினார் .

த‌மிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், நேற்று மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதியை ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர். அ‌ப்போது கருணா‌நி‌தி‌யி‌ன் உடல்நலம் குறித்து அவ‌ர் விசாரித்தா‌ர்.

தொகுதி பங்கீடு, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தின‌ர்.

குலாம்நபிஆசாத்துடன் அகில இந்திய காங்கிரஸ் செயலர் சாந்தாராம் நாயக், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு , சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோரும் செ‌ன்‌றிரு‌ந்தன‌ர்.

பின்னர் வெளியில் வந்த குலாம்நபி ஆசாத் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், காங்கிரஸ் நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்ற , மாவட்ட, வட்டார தலைவர்களிடம் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்துகளை கேட்டறிந்தேன் .

தி.மு.. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கே‌ட்ட‌றி‌ந்தே‌ன். இப்போது அவர் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். ஓரிரு வாரங்களில் அவர் எழுந்து நடமாடவும், அவரது பணிகளை தொடரவும், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவும் தொடங்குவார் .

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.. வலிமையான கட்சியாக உள்ளது . இது வெற்றிகரமான கூட்டணி. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு..- காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பு தொடர்கிறது. இந்த ஒத்துழைப்பு இந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் தொடரும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையும் , தி.மு.. தலைமையும் தொகுதி பங்கீடுகள் பற்றி பேசுவதற்கு குழு அமைத்துள்ளது . தி.மு..வின் குழுவும், காங்கிரசில் அமைக்கப்பட்டுள்ள குழுவும் தொகுதி பங்கீடு குறித்து பேசும். மற்ற சில கட்சிகளுக்கும் காங்கிரஸ்தி.மு.. கூட்டணியில் சேர அழைப்பு விடுத்திருக்கிறோம். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ்நாட்டில் கடைசி கட்டமாக தேர்தல் நடப்பதால் போதுமான நேரம் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறது. தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அதிக நாட்கள் கிடைத்திருக்கிறது. அடுத்த முறையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்பது 100 சதவீதம் உறுதி எ‌ன்றா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

விஜயகாந்த் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் சேருமா? என்று கேட்டதற்கு, ”காங்கிரஸ் கூட்டணியில் சேர விருப்பமுள்ள கட்சிகளை வரவேற்போம்” என்றார் குலாந‌பி ஆசா‌த்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
YÚm UdL[ûYj úRoR#p Lôe¡Wv Lh£dÏ 15 ùRôϧLs úLhÓl ùT\ úYiÓm G] AdLh£«u úU#Pl TôoûYVô[o ÏXôm S© BNô§Pm, RªZL Lôe¡W^ôo Y#Ùßj§]o.
2004 úRoR#p RªZLm Utßm ×ÕûY«p Es[ 40 ùRôϧL°p §.Ø.L. 16 ùRôϧL°Ûm, Lôe¡Wv 10, Tô.U.L. 6, U.§.Ø.L. 4 ùRôϧL°Ûm úTôh¥«hP]. Lmë²vh Lh£Ls RXô 2 ùRôϧL°p úTôh¥«hP]. CdáhP¦«]o úTôh¥«hP 40 ùRôϧL°Ûm ùYt± ùTt\]o.
B]ôp ClúTôÕ U.§.Ø.L., Lmë²vh Lh£Ls §.Ø.L. RûXûU«Xô] áhP¦«#ÚkÕ ©¬kÕ, A.§.Ø.L. áhP¦«p úNokÕs[]. G]úY §.Ø.L. áhP¦«p AdLh£Ls úTôh¥«hP 8 ùRôϧLs ÁRØs[].
BLúY AkR 8 ùRôϧL°#ÚkÕ Ïû\kRÕ 5 ùRôϧLû[ Lôe¡Wv Lh£dÏ JÕdL úYiÓm. YÚm úRoR#p Lôe¡Wv Lh£ RªZLj§p 15 ùRôϧLÞdÏd Ïû\VôUp úTôh¥«P úYiÓm G] ùNuû]«p §eLs¡ZûU BúXôNû] SPj§V ÏXôm S© BNô§Pm, Lôe¡Wv Lh£«]o Y#Ùßj§]o.
“Lôe¡Wv Lh£ CmØû\ áÓRp ùRôϧL°p úTôh¥«P úYiÓm GuTÕ RªZL Lôe¡Wv ùRôiPoL°u EQoYôL Es[Õ, G]úY CÕ Ï±jÕ Lh£«u úU#Pm T¬º#dÏm G] Smסú\ôm’ Gu\ôo Uj§V CûQVûUfNo D.®.úL.Gv. C[eúLôYu.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மு‌ந்தைய சோதனை தோ‌ல்‌வியடை‌ந்ததை அடு‌த்து, ‌பிர‌ம்மோ‌ஸ் அ‌திவேக ஏவுகணை சோதனையை நாளை நட‌த்த பாதுகா‌ப்பு ஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌ம் மே‌ம்பா‌ட்டு‌நிறுவன‌ம்தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது .

இதுகு‌றி‌த்து பாதுகா‌ப்பு அமை‌ச்சக அ‌திகா‌ரிக‌ளி‌ட‌ம் கே‌ட்டத‌ற்கு, “பொ‌க்ரா‌‌ன் பாலைவன‌த்‌தி‌ல் உ‌ள்ள இராணுவ சோதனை மைய‌த்‌தி‌ல்பிர‌ம்மோ‌ஸ்-Block II Version அ‌திவேக ஏவுகணை‌யி‌ன் இர‌ண்டாவது சோதனையை மா‌ர்‌ச் 4ஆ‌ம் தே‌தி (நாளை) நட‌த்ததி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளோ‌ம்எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌ந்‌தியர‌ஷ்ய கூ‌ட்டு‌த் தயா‌ரி‌ப்‌பி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளபிர‌ம்மோ‌ஸ் ஏவுகணை கட‌ந்த ஜனவ‌ரி 20 ஆ‌ம் தே‌தி சோதனை செ‌ய்ய‌ப்ப‌ட்டபோது, வெ‌ற்‌றிகரமாக‌ப் புற‌ப்ப‌ட்டது, ஆனா‌ல் தனது பாதை‌யி‌ல் இரு‌ந்து தவ‌றி இல‌க்‌கி‌ல் இரு‌ந்து வெகு தூர‌த்‌தி‌ல் செ‌ன்றுவிழு‌ந்தது.

இதுகு‌றி‌த்து‌க் கே‌ட்டத‌ற்கு, ஏவுகணை‌யி‌ன் மெ‌ன் பொரு‌ளி‌ல் ஏ‌ற்‌ப‌ட்டசிறு தவ‌றினா‌ல் இ‌ந்த‌க் கோளாறு ஏ‌ற்ப‌ட்டு‌வி‌ட்டது. அ‌ந்த‌த் தவறு இ‌ப்போது ச‌ரி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌வி‌ட்டது எ‌ன்று அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
!!!!!!!!!!!!!!!!
இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காதீ‌க்கு‌ளி‌த்த தே.மு.‌தி.. ‌பிரமுக‌ர் ‌‌‌‌சீ‌னிவாச‌ன்சி‌கி‌ச்சை பல‌னி‌ன்‌றி மரண‌ம் அடை‌ந்தா‌ர். அவரது குடு‌‌ம்ப‌த்‌தி‌ற்கு அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் தலைவ‌ர்விஜயகா‌ந்‌த்நி‌தியுத‌வி அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தே.மு.‌தி.. ‌பிரமுகரான சீனிவாசன் (36) கடந்த 27ஆ‌ம் தேதி இரவு திடீரென்றுஇலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டும்என்று கூறிக்கொண்டே வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார் .

மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சை பெ‌ற்று வ‌ந்த அவ‌ர், நே‌ற்றுசி‌கி‌ச்சை பலனின்றி உ‌யி‌ரிழந்தார். அவரு‌க்கு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர்விஜயகா‌‌ந்‌த் இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்தோடு அவரது குடு‌‌ம்ப‌த்து‌க்குநி‌தியுத‌வி வழ‌ங்‌கியு‌ள்ளா‌ர்.
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து கடந்த 26ஆ‌ம் தேதி தீக்குளித்த , வேலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சியை சேர்ந்த தே.மு.தி.. கிளைச்செயலாளர் சீனிவாசன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சீனிவாசனை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

சீனிவாசன் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக அளிக்கிறேன். மேலும், அவரது மகனின் கல்வி மற்றும் மேற்படிப்பிற்கான செலவினையும் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஏற்கனவே, எனது அறிக்கையில் குறிப்பிட்டவாறு, இளைஞர்கள் சாதிக்க பிறந்தவர்களே தவிர, சாவதற்கு பிறந்தவர்கள் அல்ல என்பதை மனதில் கொண்டு , ஒவ்வொரு தொண்டனும் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்படுபவராக இருக்க வேண்டும் என்று அனைவரையும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்றுவிஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.
!!!!!!!!!!!!!!!!
போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்துள்ள இலங்கையுடன் பொருளாதார, கடன் உதவி திட்டங்கள் அனைத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா... ‌நிறுவன‌ர் ராமதாஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சட்டப் பேரவை, மக்களவைத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு 33 சதவீதம் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் யோசனை கூறியுள்ளார் . மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் இதற்கு உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

டெ‌ல்‌லி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், தற்போது கிராம பஞ்சாயத்துகளில் இந்தியா முழுவதும் 12 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் உள்ளனர். இது மிகச் சிறந்த முன்னேற்றமாகும். இருப்பினும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது எ‌‌ன்றா‌ர்.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் சில பரிந்துரைகளும் வந்துள்ன. இவை அனைத்தும் எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட்டு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு வலுப்படுத்தப்படும் எ‌ன்றா‌ர் ம‌ணிச‌‌ங்க‌ர் அ‌ய்ய‌ர் .

தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக் காலம் முடியும் தருவாயில் உள்ளது. இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்து பரிந்துரைகளை நிச்சயம் நிறைவேற்றும் என்று‌ம் அ‌வ‌ர் கூறினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
‌சீனா‌வி‌ல் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம் பொ‌ம்மைக‌ள் ச‌ர்வதேச‌ப் பாதுகா‌‌‌ப்பு ‌வி‌திகளை ‌நிறைவு செ‌ய்வது உறு‌தி‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளதா‌ல், அவ‌ற்றை இற‌க்கும‌தி செ‌ய்வத‌ற்கான தடையை இ‌ந்‌தியா ‌நீ‌‌க்‌கியு‌ள்ளது.

‌சீன பொ‌ம்மைக‌ள் தர‌க்குறைவானவை எ‌ன்று எழு‌ந்த கு‌ற்ற‌ச்சா‌ற்றை அடு‌த்து, பொது ம‌க்க‌ளி‌ன் உட‌ல் நல‌ம், பாதுகா‌ப்பு ஆ‌கியவ‌ற்றை‌க் கரு‌தி அவ‌ற்றை 6 மாத‌ங்களு‌க்கு இற‌க்கும‌தி செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்று ஜனவ‌ரி 23ஆ‌ம் தே‌தி ம‌த்‌திய அரசு தடை உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்தது. Fwpg;gplj;jf;fJ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் பிஸ்ஹின் நகரில் உள்ள மதரஸாவில் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி தனது உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும் , காயமடைந்த 10 பேரில் ஒருவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜமாத் உலீமாஇஸ்லாம் கட்சியின் பலுசிஸ்தான் மாகாணத் தலைவர் மௌலானா மொஹம்மத் கான் ஷேரானி மீது தாக்குதல் நடத்த தற்கொலைப்படை பயங்கரவாதி திட்டமிட்டிருந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மலேசியாவின் இந்ராவ் அமைப்பின் உறுப்பினர்கள் சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாக பொலிஸில் புகார் செய்யச் சென்ற போது கலகத்தில் ஈடுபட்ட 17 மலேசிய இந்திய வம்சாவளியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய இந்திய வம்சாவளியினரின் உரிமைக்காகப் போராட்டம் நடத்திய இந்ராவ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான உதயகுமார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உதயகுமார் சிறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகக் கூறி பொலிஸில் புகார் செய்வதற்காக அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் பொலிஸ் நிலையம் முன் பெரும் திரளாகக் கூடியிருந்தனர்.
அவர்களில் 50 பேரை மட்டும் பொலிஸ் நிலையத்துக்குள் நுழைய அனுமதித்த பொலிஸார் மற்றவர்களை கலைந்து செல்லும் படி அறிவித்தும் அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே கூட்டமாக நின்றனர்.
இந்நிலையில் தண்ணீரைப் பாய்ச்சி அவர்களை கலைக்க முயன்றனர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து உதயகுமாரின் மனைவி, இந்து உரிமை நடவடிக்கை குழுத் தலைவர் வேதமூர்த்தியின் மனைவி ஆகியோர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகமும் சட்டத்துக்குப் புறம்பாகக் கூடியதாக கைது செய்யப்பட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
UúX£V AWNôp £û\ ûYdLlTh¥ÚkR ¶uhWôl (CkÕ E¬ûULs úTôWôhPd ÏÝ) AûUl©u RûXYo ©. ERVÏUôo UÚjÕYUû]«p AàU§dLlThÓs[ôo.
CÕ Ï±jÕ AkSôhÓ U²R Y[jÕû\ AûUfNo Gv. Ñl©WU¦Vu §eLs¡ZûU á±VÕ:
NodLûW úSôVôp LÓûUVôL Tô§dLlThÓs[ ERVÏUôo £¡fûNdLôL UÚjÕYUû]«p úNodLlThÓs[ôo Gu\ RLYûX EsÕû\ AûUfNo ûNVÕ aÁ§ G]dÏj ùR¬®jRôo. AYÚdÏ úRûYVô] UÚjÕY ER®Ls Aû]jûRÙm AWÑ YZeÏm Gu\ôo AYo.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ERVÏUôûW úTôÄ^ôo ªLd LÓûUVôL SPj§Ùs[]o Guß AYWÕ BRWYô[oLs Ït\mNôh¥Ùs[]o
.
!!!!!!!!!!!!!!!!!!!
பங்களாதேஷில் எல்லைக் காவல் படையினரின் கிளர்ச்சியின்போது 140க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்காவின் எப்.பி..யின் உதவியைப் பெற பிரதமர் ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பங்களாதேஷ் கலவரத்தின்போது இராணுவ அதிகாரிகளைச் சிறைபிடித்து அவர்களைச் சுட்டுக்கொன்றதாக ஆயிரம் எல்லை காவல் படையினர் மீது பங்களாதேஷ் பொலிஸார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாக உள்ள அதேவேளை இன்னும் பலர் அடையாளம் காணப்படவுமில்லை.
அத்துடன், இவர்களில் சிலர் இராணுவத்திலிருந்து திரும்பியவர்களெனவும் அஞ்சப்படும் அதேவேளை, இவர்கள் இந்தியாவிற்குள் இரகசியமாக ஊடுருவலாமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இக்கலகத்தினை பங்களாதேஷின் பிரபல வர்த்தகரான சலாவுதீன் குஆதீர் சௌத்ரி தூண்டிவிட்டதாக இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள எல்லைக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர் .
வர்த்தகரான சலாவுதீன் குஆதீர் சௌத்ரி பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா மற்றும் பிஎன்பி கட்சித் தலைவர் காலிதா ஷியா ஆகியோரது நெருங்கிய நண்பராக உள்ள அதேவேளை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருங்கிய உறவுகளையும் கொண்டிருப்பவர்.
இந்நிலையில் தெற்காசியாவுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சரிடம் பங்களாதேஷ் கலகம் தொடர்பான விசாரணைகளை எப்.பி.. மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஹசீனா தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இதன்போது டாக்கா இக்கலவரத்திற்கு பின்னணியில் சதித்திட்டமொன்று இருப்பதாகவும் இச்சதிக்கும்பலை அடையாளம் காண்பதற்கு எப்.பி.. உதவ வேண்டுமெனவும் ஹசீனா பௌச்சரிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பங்களாதேஷ் எல்லை காவல் படையினர் இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடை செய்வதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டுமென பங்களாதேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இக்கலகம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு பங்களாதேஷ் உள்நாட்டமைச்சரைத் தலைவராகக் கொண்டு 10 உறுப்பினர்கள் கொண்ட ஆணைக்குழு ஒன்றை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.
இதேவேளை, இக்கலகத்தின்போது பலியான இராணுவ அதிகாரிகளின் குடும்பத்தவருக்கு தலா 10 இலட்சம் ரூபா சிறப்பு உதவித் தொகையாக வழங்கப்படுமென பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!
எகிப்தில் நடக்கின்ற சர்வதேச கொடையாளிகள் மாநாட்டில் கலந்துகொண்டிருப்பவர்கள், பாலத்தீனர்களுக்கு நிதியாக மூன்று பில்லியன் டாலர்களை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த நிதியில் பெரும்பகுதி, அண்மைய இஸ்ரேலிய தாக்குதலில் நிர்மூலமான காசாவை கட்டியெழுப்ப உதவும்.
தமது நாடு 900 மில்லியன் டாலர்களை வழங்கும் என்று கூறியுள்ள அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹில்லாரி கிளிங்டன் அவர்கள், மத்திய கிழக்கில் அமைதியேற்பட தனது நாடு மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்யும் என்றும் கூறினார்.
அங்கு முக்கிய தேவை பணம் அல்ல என்றும், அந்தப் பிராந்தியத்தில் தொடருகின்ற இஸ்ரேல் தலைமையிலான தடைதான் அங்கு மிகவும் முக்கிய பிரச்சினை என்றும் காசாவுக்கான . நாவின் உதவி நிறுவனப் பிரதிநிதி ஜோண் ஜிங் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!
மேற்கு ஆப்பிரிக்க நாடான ஹினி பிசுவின் அதிபரான ஜோவ் பெர்னார்டோ வெய்ரா அவர்கள் படை சிப்பாய்களால் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவரது மரணம் குறித்த செய்தி, பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் இருந்தும் , வெளியுறவுகளுக்கான இராணுவப் பேச்சாளர் ஒருவரிடம் இருந்தும் வந்துள்ளன.
தலைநகர் பிசுவில் நடந்த ஒரு குண்டுத்தாக்குதலில் இராணுவ தளபதி, ஜெனரல் தாக்மே நா வெய் அவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த செய்திகள் வந்துள்ளன.
அதிபரும், இராணுவ தளபதியும் கொல்லப்பட்ட இந்த சம்பவம் அந்த நாட்டில் ஏற்பட்ட ஜனநாயகப்ப் படுகொலை என்று மேற்கு ஆப்பிரிக்க பிராந்திய அமைப்பான எக்கோவாஸ் விபரித்துள்ளது .
!!!!!!!!!!!!!!!
sports
!!!!!!!!!!!!!!!!

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 38 ஓவரில் 273 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே இரண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளது. அந்த இரண்டிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. .

மேலும் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி நியூசிலாந்தில் விளையாட இருக்கிறது. அதன்படி முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் விளையாட தீர்மானித்தது. விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் சுமார் 2 மணி நேரம் தடைபட்டது. அதன் பின்னர் போட்டி மீண்டும் தொடங்கிய போது, ஓவர்கள் தலா 38ஆக குறைக்கப்பட்டது .

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 38 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது .

,e;jpa mzpia njhlHe;J Ml;lj;ij Muk;gpj;j epArpyhe;J mzp 18.4 Xtupy; 3 tpf;Nfl; ,og;gpw;f;F 97 Xl;lq;fis vLj;Js;sJ

!!!!!!!!!!!!!!!!
1euro =144.56 sl /65.44in
1 us $ = 114.22 sl /51.71in
1 swiss fr = 97.57 sl /44.20in
1 uk pound =160.86 sl72.88 in
1 saudi riyal =30.46sl /13.80in

Leave a Reply

Your email address will not be published.