விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்ற பெண்ணை ஆஜர்படுத்த மனு: ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை: திருச்சி மாவட்டம் மானூரில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட மகளை ஆஜர்படுத்த கோரி தாயார் தாக்கல் செய்த மனு குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மானூர் அருகே சீதக்குறிச்சியை சேர்ந்த ஹபீப் நிஷா தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: என் மகள் அபிஸினா, அவரது கணவர் சாதிக்குடன் வசித்து வருகிறார். பிப்., 24ம் தேதி அவரது வீட்டிற்கு விருந்தினர் ராமு, அவர் மனைவி ஜமுனா வந்தனர்.


இந்நிலையில் சாதிக் வேலை விஷயமாக மதுரைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த அபிஸினாவையும், ஜமுனாவையும் மானூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பிப்., 27ம் தேதி இரவு வலுக்கட்டாயமாக வேனில் ஏறும்படி கூறினர். மேலும் போலீசார் முன்னிலையில் அவர்களை உடைமாற்றும்படி இன்ஸ்பெக்டர் மிரட்டினார். பிறகு இருவரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். ஆனால் ஸ்டேஷனில் அவர்களை காணவில்லை. என் மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரினார். இம்மனு நீதிபதிகள் சித்ராவெங்கட்ராம“ன், பி.முருகேசன் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நேரில் ஆஜரானார்.

போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனை அரசு வக்கீல்ஐசக் மனுவேல் பெற்றுகொண்டார். அதனையடுத்து விசாரணையை மார்ச் 6க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். மற்றொரு வழக்கு: திருச்சி வாரகனேரியை சேர்ந்த கிருஷ்ணவேணி தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவில், ” மாயமான கணவர் பாலசுப்ரமணியத்�“த கண்டுபிடித்து ஆஜர்படுத்தும்படி’ கோரினார். நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது பாலசுப்ரமணியம் ஆஜரானார். விசாரணையில் வேறுஒரு பெண்ணுடன் சென்றிருந்தது தெரிந்தது. ஐகோர்ட் கிளையில் மனைவியுடன் செல்வதாக பாலசுப்ரமணியன் தெரிவித்தார். அதனை பதிவு செய்த நீதிபதிகள், அவரை மனைவியுடன் செல்ல உத்தரவிட்டனர்.

Source & Thanks ; dinamalar

Leave a Reply

Your email address will not be published.