கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு

நாமக்கல்: இந்தியாவில் கமர்ஷியல் காஸ் சிலிண்டர் ரூ.94.43 அதிகரித்து ரூ.884.75ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 19.2 கிலோ எடை கொண்ட கமர்ஷியல் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்வது வழக்கம்.

கடந்த பிப்ரவரியில் ரூ.790.32க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கமர்ஷியல் காஸ் சிலிண்டர், இம்மாதம் ரூ.94.43 விலை உயர்த்தி ரூ.884.75 ஆக எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ளன. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையிலும் கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு வணிக நிறுவன உரிமையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ‘உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக கமர்ஷியல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது’ என, காஸ் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.