சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை இழுத்து மூடும் போராட்டம்: 150 பேர் கைது

இலங்கையில் நடைபெற்று வரும் தமிழின அழிப்பு போரை உடனே நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழீழ விடுதலை ஆதரவு கூட்டமைப்பு சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை இழுத்து மூடும் போராட்டம் நேற்று நடந்தது.

இந்த போராட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவேந்தன் தலைமை தாங்கினார்.

காலை 11.30 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் பூட்டு, சங்கிலியுடன் அவர்கள் வந்தனர். அப்போது,

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இந்திய அரசு தலையிடக் கூடாது,

இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

தமிழீழத்தை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும்.

இந்தியாவும், உலக நாடுகளும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்

என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அவர்களை பொலிஸார் வழிமறித்து கைது செய்தனர். மொத்தம் 150 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.