இலங்கைக்கான நிதி உதவியை நிறுத்த ஜப்பான் முடிவு

ஜப்பான் அரசு இலங்கை உட்பட பல நாடுகளுக்கு வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. நிதிஉதவிகளுக்கு பதிலாக கடன்களை வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளது.

உலக பொருளாதார நெருக்கடியில் ஜப்பானும் சிக்கியுள்ளமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் வேறு நாடுகளுக்கு உதவியளிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது.

இலங்கைக்கு அதிகளவு நிதி உதவிகள் உள்ளிட்ட ஒத்துழைப்புகளை வழங்கி வரும் ஜப்பான் நிதி உதவிகளை நிறுத்தியுள்ளதால் இலங்கை பெரும் பாதிப்புகளை சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உலக பொருளாதார நெருக்கடி மேலும் சில மாதங்களில் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தகூடும் என கருதப்படுகிறது. இலங்கை அரசாங்கம் போர் நடவடிக்கைகளுக்காக அதிகளவு பணத்தை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமை தொடருமானால், இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க கூடும் என கூறப்படுகிறது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.