தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல்: நாடு முழுவதும் ஐந்து கட்டங்களாக தேர்தல்

புதுடில்லி : தமிழகத்தில் , மே 13ம் தேதி லோக்சபா தேர்தல் ‌ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது எனவும், நாடு முழுவதும் தேர்தல் ஐந்து கட்டங்களாக நடக்கிறது எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .

ஏப்ரல் 16ம் தேதி முதல் கட்ட தேர்தல் துவங்குகிறது. மே 13ம் தேதி தேர்தல் முடிவடைகிறது. புதுடில்லியில் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி மற்றும் தேர்தல் ஆணையர்கள் நவீன்சாவாலா, குரேஷி ஆகியோர் இத்தகவலை வெளியிட்டனர். தலைமை தேர்தல் ஆணையகத்தில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் லோக்சபா தேர்தல் தேதி, தேர்தல் விதிமுறைகள் ஆகியன குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. அதன் பிறகு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களுககு அளித்த பேட்டியில் கூறியதாவது : 14வது லோக்சபா காலகட்டம் ஜூன்1ம் தேதி 2009ம்ஆண்டுடன் முடிவடைகிறது . ஜூன் 2ம் தேதி முதல் புதிய லோக்சபா அமைக்கப்பட வேண்டும். இதுவரை நடந்த ஆலோசனைகளின் படி தேர்தல் பாதுகாப்பு பணியில் 21 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். சுமார் 40 லட்சம் பேர் தேர்தல் பணியாற்றவுள்ளனர். இந்த தேர்தலின்போது சுமார் 714 மில்லியன் வாக்காளர்கள் ஓட்டு ‌போடுகிறார்கள், இது கடந்த 2004ம் ஆண்டு தேர்தலை விட 43 மில்லியன் அதிகம். மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில், முதல் கட்டமாக ஏப்ரல் 16ம் தேதி 124 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 23ம் ‌தேதி 141 தொகுதிகளுக்கும், 3வது கட்டமாக ஏப்ரல் 30ம் தேதி 107 தொகுதிகளுக்கும் , 4வது கட்டமாக மே 7ம் தேதி 85 ‌தொகுதிகளுக்கும் , கடைசி கட்டமாக மே 13ம் தேதி 86 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுக்கள் மே 16ம் தேதி எண்ணப்படுகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை மே 13ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்திவு நடைபெறும். தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ஏப்ரல் 14ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். மனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24ம் தேதி. மறுசீர‌மைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்டையில் தேர்தல் நடைபெறும்.

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.