ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் – ரிலையன்ஸ் பெட்ரோலியம் இணைந்தன

மும்பை : முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனமும் , அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனமும் ஒன்றாக இணைந்தன.

மும்பை பங்கு சந்தைக்கு இன்று அந்த நிறுவனம் தெரிவித்த தகவலில், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூம் ரிலையன்ஸ் பெட்ரோலியமும், இந்திய கம்பெனி சட்டம் 1956 ன் 391 முதல் 394 வரையிலான பிரிவுகளின் கீழ் ஒன்றாக இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த இணைப்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அது தெரிவித்திருக்கிறது. இதன்படி ரூ.10 மதிப்ள்ள 16 ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட் பங்குகளுக்கு ஒரு ரூ.10 மதிப்புள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டின் பங்கு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணைப்பு, அதன் பங்குதாரர்கள் மற்றும் மும்பை, ஆமதாபாத் ஐகோர்ட்களின் ஒப்புதலை அடுத்தே அமையும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இணைப்பு குறித்த தகவல் வெளியானதை அடுத்து, பிப்ரவரியில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் பங்கு மதிப்பு 4.5 சதவீதமும், ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் மதிப்பு 12 சதவீதமும் குறைந்திருக்கின்றன.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.