‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (02.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

தமது வாழ்விடங்களில் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம் . அதனை விடுத்து விட்டு பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களில் இருந்து அவர்களை வெறியேற்ற முயற்சிப்பது வேதனையானது. தீர்வு ஒன்றை காண்பதற்காககாசாபகுதியில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதனை ஐக்கிய நாடுகள் சபை ஆதரிக்குமா? என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கேள்வி எழுப்பியுள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அநுராதபுரத்தில் இருந்து 9 வீதியூடாக முதற்தடவையாக 600 இராணுவத்தினர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 1984 ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக இன்று 20 பஸ்களில் 600 இராணுவத்தினர் சீருடையுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் யுத்த அகதிகளாகத் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் தேச நிர்மாண அமைச்சு வழங்கும் வாராந்த உணவு நிவாரணத்தில் கடந்த 2 மாதங்களாக அரிசி வழங்கப்படவில்லை எனப் புகார்; தெரிவிக்கப்படுகின்றது . அரிசிக்குப் பதிலாகவும் கோதுமை மாவே வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. மேலதிக கோதுமை மாவை விற்பனை செய்தே தாங்கள் அரிசி வாங்கி சோறு சமைக்க வேண்டியிருப்பதாகவும் இக் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் தெரிவிக்கின்றனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்குமானால் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலை உருவாகும். தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். சீனா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளின் ஆதரவு எமக்கிருக்கின்றது. எனவே .நா. பாதுகாப்பு சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்தும் .நா. சபையில் ஹோம்ஸ் வெளியிட்ட தகவல்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கையிலேயே சுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: “விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் உள்ளனர். இந்தச் சூழலில் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. புலிகளின் யுத்த நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்துவது உலகளாவில் அந்நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும். இதற்கு முன்பும் இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகித்துப் பிரபாகரனைப் பாதுகாத்தது. அதே செயலை இன்றும் செய்வதற்கு முனைந்தால் 1987 ஆம் ஆண்டைப் போன்று தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். இந்திய எதிர்ப்புப் போராட்டங்கள் வெடிக்கும். இலங்கை இறையாண்மை கொண்ட சுயாதீனமான நாடு. எனவே எமது பிரச்சினையில் தலையிட பிரிட்டனுக்கோ அல்லது வேறெந்த மேற்குலக நாடுகளுக்கோ அதிகாரமில்லை. அவர்களது ஆலோசனைகளைக் கேட்க வேண்டிய தேவையும் எமக்கில்லை. இந்த மேற்குலக நாடுகள் தான் புலிகளுக்கு விமானங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கின. எனவே, மேற்குலக நாடுகளின் பேச்சைக் கேட்க நாம் தயாரில்லை.

.நா. பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராக எந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் நாம் கவலைப்படப் போவதில்லை. எம்மை அசைக்க முடியாது. சீனா, ரஷ்யா, வியட்நாம் போன்ற நாடுகளின் ஆதரவு எமக்கு இருக்கின்றது.” இவ்வாறு அவர் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்களில் நாளாந்தம் அதிக எண்ணிக்கையான மக்கள் கொல்லப்படுகின்றனர் ; 2 லட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கின்றனர்; எனவே உடனடியான போர் நிறுத்தம் அங்கு அவசியமானது என கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் இக்னாரீஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மைக்கேல் இக்னாரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
மனிதாபிமான நெருக்கடிகளை தவிர்ப்பதற்கும் பொதுமக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்குமான செயற்பாடுகளை சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்களில் நாளாந்தம் அதிக எண்ணிக்கையான மக்கள் கொல்லப்படுகின்றனர் . 2 லட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கின்றனர். எனவே உடனடியான போர் நிறுத்தம் அங்கு அவசியமானது.
இலங்கையில் அரசியல் செயற்பாடுகள் பலப்படவும், மனிதாபிமான பணிகள் முன்னெடுக்கப்படுவதற்குமான பணிகளை அனைத்துலக சமூகம் இணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் நான் கேட்டுக்கொள்கின்றேன் .
போர் காரணமாக ஆபத்தான சூழ்நிலையில் உள்ள பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மேலதிக உயிரிழப்புக்களை தடுப்பதற்கும், அங்கு ஒரு அரசியல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஒரு சிறப்பு பிரதிநிதியை அங்கு அனுப்ப வேண்டும்.
பொதுமக்களின் மீதான தாக்குதல்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் எந்த மன்னிப்பும் கிடையாது. பொதுமக்களை பாதுகாப்பதற்கான தமது அக்கறையை உலகம் காண்பிக்க வேண்டும். நாம் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுடனும், கனடாவில் உள்ள இலங்கை மக்களுடனும் எமது உணர்வுகளை பகிர்ந்து கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று நேபாளத்திற்குப் பயணமானார். நேபாள ஜனாதிபதி ராம்பரன் யாதவின் அழைப்பை ஏற்றே ஜனாதிபதி அங்கு பயணமானார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேபாள ஜனாதிபதி ராம்பரன் யாதவ், பிரதமர் புஷ்பா கமல்டால், வெளிவிவகார அமைச்சர் உபேந்திரா யாதவ் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி ஈடுபடுவார். அத்துடன் நேபாளத் தலைநகரான காத்மண்டுவிலுள்ள சார்க் செயலகத்திற்கும் விஜயம் செய்யவிருக்கின்றார் என்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இருதரப்பு அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்படவிருக்கின்றன
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் பாதுகாப்பு சபையில் தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், வன்னியில் பொது மக்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என அவர் அங்கு குறிப்பிடவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்தார். தற்போதைய நிலைமையில் புலிகள் வசமுள்ள பகுதியை முழுமையாக அழித்துவிட்டு அப்பகுதியை மீட்கும் சக்தி இராணுவத்தினரிடம் உண்டு. ஆனால் சிவிலியன்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக அவ்வாறான முயற்சியில் ஈடுபடாமல் இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வட பகுதியில் மோதல்களுக்கு மத்தியில் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி செயலாளர்நாயகம் ஜோன் ஹோம்ஸ் பாதுகாப்பு சபையில் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தகவல் தருகையில் கூறியதாவது : “ ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி செயலாளர்நாயகம் ஜோன் ஹோம்ஸ் பாதுகாப்பு சபை உறுப்பினர்களை அறிவுறுத்தியுள்ளார். மாறாக அங்கு எந்த அறிக்கையையோ அல்லது யோசனையையோ முன்வைக்கவில்லை. இதனை அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ளவேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்குவதாகவே ஜோன் ஹோம்ஸ் .நாவின் பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளார். அவர் அந்த கருத்தை இலங்கையில் வைத்தும் தெரிவித்திருந்தார் . அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். மோதல்கள் இடம்பெறும் பகுதியில் சிவில் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். ஜோன் ஹோம்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்து அனைத்து நிலைமைகளையும் பார்வையிட்டுவிட்டுர் சென்றார். ஆனால் அரசாங்கம் முடியுமானளவு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இந்த யுத்தத்தை நடத்துவதற்கு முயற்சிக்கின்றது. யுத்தம் இடம்பெறும் பகுதியில் பொதுவாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதனை தவிர்ப்பதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம் . அரசாங்கம் கடந்த காலங்களில் அவ்வாறு மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அதிகளவில் யுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. எதிர்காலத்திலும் அவ்வாறே அரசாங்கம் யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தற்போதைய நிலைமையில் புலிகளின் வசமுள்ள பகுதிகளை முழுமையாக அழித்துவிட்டு அந்தப் பகுதியை எம்மால் மீட்க முடியும். ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் நாம் அந்த முயற்சியை மேற்கொள்ளாமல் இருக்கின்றோம். என்றும் அவர் குறிப்பிட்டார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


“விடுதலை புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்காவிட்டால் போர்நிறுத்தம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்கவே தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் வேகத்தை தணித்துள்ளோம்” என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். “தமிழ்நாட்டின் அழுத்தம் காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் ஒரு சில கூற்றுக்களை வெளியிட நேர்கின்றது. ஆனால் இந்தியா எமக்குப் பாதகமாக செயற்படாது என்பது உள்ளார்ந்த ரீதியாக எமக்குத் தெரியும். வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தக் காலப் பகுதியில் மக்கள் பெருமளவில் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். விடுதலை புலிகளின் போர் நிறுத்தக் கோரிக்கையை அரசாங்கம் பயன்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது : “ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் விடுதலை புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் புலிகள் அண்மையில் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். அது நல்ல விடயம். அது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் புலிகள் அந்த அறிவிப்புடன் ஆயுதங்களைக் கீழே வைக்கின்றோம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படியானால் நாங்கள் சாதமான பதிலை வழங்கியிருப்போம்.

ஆனால் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க தயாரில்லை என்பது புலப்படுகின்றது. அவ்வாறான நிலையில் புலிகளின் போர் நிறுத்தக் கோரிக்கையை ஏற்க முடியாது. நாம் வரலாற்றைப் பார்க்கவேண்டும். விடுதலைப் புலிகள் போர்நிறுத்தக் கோரிக்கைகளை விடுத்த சந்தர்ப்பங்களும் அவற்றை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பங்களும் அரசாங்கத்துக்குப் பாதகமாகவே அமைந்துள்ளன. இதுதான் வரலாறு எமக்கு காண்பிக்கும் விடயமாக அமைந்துள்ளது. எனவே ஆயுதங்களைக் கீழே வைக்காத புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இந்தியாவுக்கு தமிழ்நாட்டின் அழுத்தம் காரணமாக ஒரு சில கூற்றுக்களை வெளியிட நேர்கின்றது. ஆனால் இந்தியா எமக்கு பாதகமாக செயற்படாது என்பது உள்ளார்ந்த ரீதியாக எமக்கு தெரிந்த விடயமாகும். அதன் அடிப்படையில் நாம் செயற்பட்டு வருகின்றோம். இதனை நாம் இதயபூர்வமாக நம்புகின்றோம்.

தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் வேகம் சற்று தணிந்துள்ளது. காரணம் பொது மக்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையாகும். அந்த மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும் என்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மிகவும் வேகமாக முன்னேறிவந்த இராணுவ நடவடிக்கைகள் சற்று தாமதித்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் பொது மக்கள் அதிகளவில் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவார்கள் என அரசாங்கம் வலுவாக எதிர்பார்க்கின்றது. அதேவேளை சர்வதேசமட்டத்தில் இருந்து கிடைக்கப் பெறும் மனிதாபிமான உதவிகளை அரசாங்கம் வரவேற்கின்றது. இந்திய அரசாங்கம் ஊடாக முறையாக கிடைக்கப்பெறும் உதவிகளை நாம் பெற்றுக்கொள்வோம். அந்தவகையில் இந்தியாவின் மருத்துவ உதவியையும் வரவேற்கின்றோம்.” இவ்வாறு அவர் கூறினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசம் நேற்று காலை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது. இதன்போது வெல்லாவெளியிலுள்ள வீடொன்றிற்குச் சென்ற விசேட அதிரடிப் படையினர் அங்கிருந்த 14 வயது சிறுமியை கதறக் கதற கற்பழித்துள்ளனர். அச்சிறுமியின் தாயை கட்டிப்போட்டபின் தாயின் முன்னாலேயே இச்சிறுமி கற்பழிக்கப்பட்டிருக்கிறார் .
இது பற்றி மேலும் தெரியவருவதாவது:-
நேற்று அதிகாலை களுவாஞ்சிக்குடிவெல்லாவெளிப் பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர். வீடுகளிலிருந்த ஆண்கள் அனைவரையும் ஆலயம் ஒன்றுக்குச் செல்லுமாறு ஒலிபெருக்கிமூலம் அறிவித்தனர். பின்னர் வீடு வீடாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
விட்டிலுள்ள உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் விட்டிலிருக்கின்ற பெண்களின் விபரங்களையும் அவர்களின் வயதுகளையும் கேட்டு குறித்துக் கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டிற்கு 5 விசேட அதிரடிப்படையினர் வந்ததாகவும் தாயைக் கட்டிப்போட்டபின்னர் எனைய நால்வரும் வீட்டிற்கு வெளியே காவலுக்கு நிற்க ஒருவர் மட்டும் சிறுமியை கதறக் கதற கற்பழித்துள்ளார். 14 வயதடைய வை.புனிதவதி என்ற இச்சிறுமி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் 17 ஆம் இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவர் பருவமடைந்து 25 நாட்களே ஆகியிருப்பதாக இவரது தாயார் தெரிவித்தார்.
இன்று காலை மட்டக்களப்ப பொது வைத்தியசாலைக்குச் சென்ற வெல்லாவெளி பொலிஸார் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இச்சிறுமியை விசாரணை செய்துள்ளனர். எனினும் நேற்றையதினம் குறைந்தது 5 வீடுகளிலாவது பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . இது தொடர்பான மேலதிக தகவல்களை தர வைத்தியசாலை தரப்பினர் மறுத்துவிட்டனர்.
ஆனால் நேற்றைய சுற்றிவளைப்பின்போது சில வீடுகளில் இருந்து பெண்களின் கூக்குரல் சத்தங்கள் கேட்டதாகவும் உடனே அவ்விடத்திற்குச் சென்று தம்மால் பார்க்கமுடியாமல் விசேட அதிரடிப் படையினர் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாகவும் வெல்லாவெளி பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இது தொடர்பாக முதலமைச்சர் பிள்ளையானை நேரில் சந்தித்த மக்கள் பிரதிநிதிகள் இச்சம்பவம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு பிள்ளையான் இதற்காகத்தான் நான் சிவில் பாதுகாப்பை கேட்டிருந்தேன். கருணாதான் எல்லாவற்றையும் குழப்பினார். இப்பொழுது எனது கைகள் கட்டப்பட்டுள்ளன . கருணாவின் அடுத்த கூட்டத்தில் போய் கேளுங்கள் என கூறி நைசாக நழுவிவிட்டாராம் . இச் சம்பவம் மட்டக்களப்பு மக்களிடையே பெரும்பீதியை தோற்றுவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு பொருத்தமற்றதாக காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் Uk; MAjjhupAkhdவிநாயகமுர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் உருவான தமிழ் அரசியல் தலைவர்கள் எவரும் தமிழர் பிரச்சினையை சரியான முறையில் அணுகவில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிய ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதனைவிட தேசிய ரீதியில் வியாபித்துள்ள ஓர் அரசியல் கட்சியில் அங்கம் வகிப்பதன் மூலம் மாற்றங்களை
ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்ததாக
அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் எதிர்காலம் பற்றி தாம் கவலைப்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
22 வருடங்களுக்கு முன்னர் தமிழ் அரசியல்வாதிகளினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினையின் விளைவுகளையே நாம் இன்று எதிர்நோக்கி வருகின்றோம் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறுப்பிற்கு பிள்ளையானைவிட மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரன் பொருத்தமானவர் என MAjjhup fUzh குறிப்பிட்டுள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் மோதல்கள் இடம்பெறும் வலயங்களுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வன்னி மக்கள் குறித்த சர்வதேச அமைப்புக்களின் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதென்றால் அதனை நிரூபிக்க அரசாங்கம் சர்வதேச ஊடகங்களுக்கு மோதல்கள் இடம்பெறும் பிரதேசங்களுக்குச் செல்ல அனுமதியளிக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பக அவசர சேவைகள் பிரிவு ஆய்வாளர் எனா நீஸ்டெட் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு வவுனியா அகதி முகாம்களின் நிலவரம் குறித்து அய்வு நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறான ஆய்வுகளை நடத்த மனித உரிமைகள் அமைச்சோ அல்லது வெளிவிவகார அமைச்சோ அனுமதியளிக்கவில்லை என மனித உரிமைகள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதியின்றி இவ்வாறான ஆய்வுகளை மேற்கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நோர்வே பாராளுமன்றத்தில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நோர்வேயின் வெளிவிவகாரச் செயலாளர் ரேமன் ஹென்சன்கே தலைமையில் நாளை மறுதினம் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நோர்வேயின் வெளிவிவகார கமிட்டித் தலைவர் மெரீட் னைபெட் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கையின் உள்விவகாரத்தில் நோர்வே பாராளுமன்றம் நேரடியாக தலையீடு செய்ய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்து இதுவரை திருகோணமலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கப்பல் மூலம் 2,396 பேர் கூட்டி வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவில் இடம்பெறும் தாக்குதல்களில் படுகாயமடைந்தோரும் அவசர நோயாளிகளும் இவர்களுக்கான உதவியாளர்களுமே இவ்வாறு கப்பல் மூலம் திருகோணமலைக்கு கூட்டிவரப்பட்டுள்ளனர்.
திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 12 தாய்மாருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் முல்லைத்தீவுக்குச் சென்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்கிறீன் ஓசன்கப்பலில் 282 பேர் புதுமாத்தளன் பகுதியிலிருந்து ஆறாவது தொகுதியாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக திருமலை சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பில் நடைபெற்று முடிந்த பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க் ) 31 ஆவது வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ளல் மற்றும் நாடு கடத்தல் தொடர்பாக பிராந்திய ரீதியில் பிரத்தியேகமான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொள்வது பற்றி பேசப்பட்டுள்ளது.
சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 31 ஆவது மாநாடு நேற்று முன்தினம் சனிக்கிழமையுடன் கொழும்பில் நிறைவடைந்தது.
“நாம் இந்த விடயம் பற்றி கலந்துரையாடினோம். கைதிகள் பரிமாற்றம், நாடு கடத்தல் என்பது இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இருக்கின்றன. எனினும் ஒரு குழுமமாக இவ்விடயத்தில் பிராந்தியமொன்றுக்குள் முன்செல்வதையும் மேம்படுத்துவதையும் தடுப்பதற்கு ஒன்றுமில்லை’ என்று வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்திருக்கிறார்.
எனினும், இதை எழுத்து மூலம் கொண்டு வரக் கூடிய வகையில், நிச்சயமான அடிப்படைக் கொள்கைகளின் உதவியும் பல சட்ட முறைமைகளின் ஒற்றுமையும் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் போகொல்லாகம இதன் போது சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அத்துடன், கடந்த 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சார்க் மாநாட்டில் செய்து கொள்ளப்பட்டு நடைமுறையிலிருக்கும் பரஸ்பர உதவிகளுக்கான உடன்படிக்கையை சுட்டிக்காட்டியிருக்கும் அமைச்சர் போகொல்லாகம, அதன் பல சரத்துக்களில் நாடுகள் ரீதியான பரிமாற்றங்களின்போது பயங்கரவாதத்துக்கு வழி வகுக்கும் குற்றச் செயல்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக குறிப்ப்பிடிருக்கிறார்.
இதேநேரம், இது தொடர்பான இறுதி தீர்மானமொன்றுக்கு வரும் முன்னர் பல விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹண தெரிவித்திருக்கிறார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு,திம்பிரிகஸ்யாய பகுதியில் இரு பஸ்களும் ஜீப் வண்டியொன்றும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 17 பேர் வரை காயமடைந்துள்ளனர். இரு பஸ்களுக்கிடையே ஜீப் வண்டி சிக்குண்டதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை இந்திய கிறிஸ்தவமக்களின் புனிதயாத்திரைத் தலமாக விளங்கும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயவருடாந்த உற்சவம் எதிர்வரும் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் கச்சதீவு ஆலயத்துக்கு பக்தர்கள் சென்று திரும்பக்கூடிய சூழ்நிலையில்லாததால் கடந்த வருடம் போல் ஆலயமூப்பனார் குழு ஆலயத்திற்குச் சென்று வருடாந்த வழிபாடுகளை நிறைவு செய்ய படையினர் அனுமதி வழங்கவுள்ளனர்.
ஆலய மூப்பனார் மற்றும் குருவானவர் அடங்கிய குழுவினரை நெடுந்தீவில் இருந்து கடற்படையினர் அழைத்துச் சென்று அமைதியான முறையில் சனிக்கிழமை நற்கருணை வழிபாடும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை வருடாந்தத் திருப்பலியும் திருச்சொரூப பவனியும் இடம்பெறவுள்ளது. இது குறித்து ஏற்பாடுகளைச் செய்வதற்காக விசேட கலந்துரையாடல் நாளை செவ்வாய்க்கிழமை யாழ். செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக பக்தர்கள் அங்கு சென்றுவர அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது . இதேபோல தமிழகத்தில் இருந்தும் பக்தர்கள் வரமாட்டார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!
தே‌சிய ஒருமை‌‌ப்பா‌ட்டு‌க்கு‌ம், பொது அமை‌தி‌க்கு ப‌ங்க‌ம்விளை‌வி‌‌க்கு‌ம் வகை‌யி‌ல் பே‌சியதாக கூ‌றி பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியை காவ‌ல்துறை‌யின‌‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

கடந்த மாத‌ம் 26ஆ‌ம் தேதி திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் , தேசிய ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் அவ‌ர் பேசியதாகதிண்டுக்கல் காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ந்த நடவடி‌க்கையை எடு‌த்து‌ள்ளன‌ர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் பொன்நகரில் உள்ள தனது வீட்டில் இருந்த போது அவரை கைது செ‌ய்த கா‌வல‌ர்க‌ள் திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்றனர்.

கொளத்தூர் மணி கைது செய்ததை அறிந்த பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோ‌ர் அவரது வீட்டு முன்பு திரண்டு காவ‌ல்துறையை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இரு‌ந்த காவ‌ல்‌நிலைய‌த்தை எ‌ரி‌த்தவ‌ர்களை கைது செ‌ய்ய‌‌க் கோ‌ரியு‌ம், அ‌த்து‌‌‌மீ‌றிய வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌‌ள் ‌‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌க் கோ‌ரியு‌ம் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று காவல‌ர்க‌ள் குடு‌ம்ப‌த்‌தின‌ர் உ‌ண்ணா‌விரத‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற வளாக‌த்‌தி‌ல் கடந்த 19ஆம் தேதி வழ‌க்‌க‌றிஞ‌ர்களு‌க்கு‌ம், காவ‌ல்து‌றை‌யினருக்கும் இடையே பய‌ங்கர மோதல் நடந்தது. இது தொட‌ர்பாக உ‌ச்சநீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தொட‌‌ர்‌ந்த வழ‌க்‌கி‌ல் ஓ‌ய்வு பெ‌‌ற்றநீ‌திப‌தி ஸ்ரீ‌கிரு‌ஷ்ணா தலைமை‌யி‌ல்விசாரணை குழு அமை‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்தவிசாரணை குழு கட‌ந்த 2 நா‌ட்களாக செ‌ன்னை‌யி‌ல்விசாரணை நட‌‌த்‌தி முடி‌‌த்தது. இ‌ந்தவிசாரணை குழுவிரை‌வி‌ல் உ‌ச்சநீ‌திம‌‌ன்ற‌த்‌தி‌ல் அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்ய உ‌ள்ளது.

இ‌ந்தநிலை‌யி‌ல் செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் உ‌ள்ள காவ‌‌ல்நிலைய‌த்தை எ‌ரி‌த்த‌வ‌ர்க‌ளை கைது செ‌ய்ய‌க் கோ‌ரியு‌ம், அ‌த்து‌மீ‌றி நட‌ந்து கொ‌ண்ட வழ‌க்க‌றி‌ஞ‌ர்க‌ள்மீது நடவடி‌க்கை எடு‌க்க‌க் கோ‌ரியு‌ம் செ‌ன்னை சே‌ப்பா‌க்க‌ம் அர‌சி‌ன் மா‌‌ளிகை மு‌ன்பு காவ‌ல‌ர்க‌ள் குடு‌‌ம்ப‌த்‌தின‌ர் இ‌ன்று உ‌ண்ணா‌விரத‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
”உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற உத்தரவிட்டபடி ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்து விடுவேன்” என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நிக‌ழ்வு தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை குழு‌த் தலைவர் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறினார்.

செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வளாக‌த்‌தி‌ல் கடந்த 19ஆ‌ம் தேதி வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளு‌க்கு‌ம், காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம் இடையே ஏற்பட்ட மோதல் கு‌றி‌த்து ‌விசாரணை நட‌த்த ஓ‌ய்வு பெ‌ற்ற உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி ஸ்ரீ‌கி‌‌ரு‌ஷ்ணா தலைம‌ை‌யிலான குழு ஒ‌ன்று அமை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த குழு கட‌ந்த 2 ந‌ா‌ட்களாக ‌விசாரணை நட‌த்‌தி முடி‌‌த்தது.

‌பி‌‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற சம்பவம் பற்றி விசாரித்து ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து நாட்கள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது. சென்னையில் 2 நாட்கள் விசாரணை நடத்தினேன். வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள், காவல‌ர்க‌ள் மற்றும் பலர் அளித்த ஆவணங்களைப் பார்க்க வேண்டும்.

அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியாது. எப்படியானாலும் ஒருவாரத்திற்குள் உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் அறிக்கை தாக்கல் செய்துவிடுவேன். அது நாளையாகவோ அல்லது நாளை மறுநாளாகவோ இருக்கலாம். இதைத்தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை எ‌ன்றா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உய‌‌‌ர்நீ‌திம‌ன்றநிக‌ழ்வு தொடர்பாக விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதனடிப்படையில் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவு பிறப்பிக்கும் வரை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சங்கத் தலைவர்கள் கூ‌றின‌ர்.

சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற வளாகத்திற்குள் வழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு‌ம், காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம் இடையே நட‌ந்த மோதல் குறித்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமை‌யி‌லான விசாரணை குழு 2-வது நாளாக விசாரணை நடத்தி முடித்தது.

இதில் கலந்துகொண்டு வெளியே வந்த செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல் , ”தனக்கு சூட்கேஸ் நிறைய போதுமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக விசாரணை குழு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறினார். உய‌ர் ‌‌நீ‌‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் நடந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் அவர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார் என்று நம்புகிறோம். அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுநீ‌‌திம‌ன்ற‌ம் உத்தரவு பிறப்பிக்கும் வரைநீ‌திம‌ன்ற‌த்தை புறக்கணிப்போம். உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபடுவோம்எ‌ன்றா‌ர்.

தமிழ்நாடு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன் கூறுகை‌யி‌ல், ‌நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல் செய்யப் போவதாக கூறியுள்ளார். நாங்கள்நீ‌திம‌‌ன்ற‌த்துக்கு செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். வழ‌க்க‌றிஞ‌ர்களை தாக்கிய காவ‌ல்துறை‌யின‌ர் மீது நடவடிக்கை எடுத்த பிறகுதான்நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு செல்வோம் என்று கூறிவிட்டோம் . உ‌ச்சநீ‌திம‌ன்ற‌த்‌தில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா சமர்ப்பிக்கும் அறிக்கை இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும் எ‌ன்றா‌ர்.

சென்னை அம‌‌ர்வுநீ‌திம‌ன்ற‌ம், குடும்ப நலநீ‌‌திம‌ன்ற‌ம், சிறுவழக்குகள் ‌‌நீ‌திம‌ன்ற‌ம், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், தொழிலாளர் நலநீ‌திம‌ன்ற‌ம் ஆகியவை உய‌ர்நீ‌திம‌ன்ற உத்தரவுப்படி இன்று (2ஆ‌ம் தே‌தி) திறக்கப்படுகின்றன
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாராளுமன்ற தே‌ர்‌த‌லி‌ல் கூ‌ட்ட‌ணி க‌ட்‌சிகளுட‌ன் தொகுதி பங்கீடு ப‌ற்‌றி பே‌சி ‌‌தி.மு.. குழு ஒ‌ன்றை அமை‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தி.மு .. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட பொருளாளர் மு..ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

இந்த குழுவில் முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் வீரபாண்டி எஸ். ஆறுமுகம், .பொன்முடி ஆகியோர் இடம் பெற்று உள்ளன‌ர் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ...தி.மு.. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளைப் பங்கீடு செய்வதற்கான குழு உறுப்பினர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் , ...தி.மு.. கூட்டணியில் இடம் பெறும் அரசியல் கட்சிகளுக்கு , மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிகளை ஒதுக்குவது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி முடிவு செய்யப்பட உள்ளது. இதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது .

இக்குழுவில் ...தி.மு.. அவைத்தலைவர் .மதுசூதனன், பொருளாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் .பன்னீர் செல்வம், அனைத்துலக எம் .ஜி.ஆர் மன்றச் செயலர் டி.ஜெயக்குமார், கொள்கைப் பரப்புச் செயலாளர் மு.தம்பித்துறை ஆகியோர் இடம்பெறுவர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சோழிங்கநல்லூர் பேரூராட்சியில் 11-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பேரூராட்சி 11-வது வார்டு சுயேட்சை உறுப்பினராக பதவி வகித்த கஜேந்திரன் மரண மடைந்ததை அடுத்து அந்த வார்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜோதி மற்றும் 6 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். .

இடைத்தேர்தலில் மொத்தம் உள்ள 1077 வாக்குகளில் 850 வாக்குகள் பதிவானது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் ஜோதி 395 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர்கள் அனுசுயா 344, வேணுகோபால் 104, அப்பாத்துரை 2, கௌரி 1, சூரியபிரகாசம் 2, ரஞ்சன் 2 வாக்குகள் பெற்றனர்.

!!!!!!!!!!!!!!!

mj;Jld; திருவொற்றியூர் நகராட்சி 32-வது வார்டுக்கான இடைத்தேர்தலிYk; திமுக வெற்றி பெற்றுள்ளது. திருவொற்றியூர் நகராட்சி 32-வது வார்டு உறுப்பினராக பதவி வகித்த திமுகவைச் சேர்ந்த வீராசாமி மரணமடைந்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அந்த வார்டுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. .

இதில் வீராசாமியின் மகன் சதீஷ் குமார் மற்றும் 3 சுயேட்சைகள் போட்டியிட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சதீஷ்குமார் 1800 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சுயேட்சை வேட்பாளர் சுரேஷ்பாபு 454 வாக்குகளும், மற்ற 2 சுயேட்சை வேட்பாளர்கள் தலா 9 வாக்குகளும் பெற்றனர்.

!!!!!!!!!!!!!!!

ஹாலிவுட் இசையமைப்பாளர் களால் சாதிக்க முடியாததை இரட்டை ஆஸ்கர் விருதுகளை பெற்ற .ஆர்.ரஹ்மான் சாதித்திருப்பதாக இசை ஞானி இளையராஜா பாராட்டியுள்ளார் . .

ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்காக இரட்டை ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்த இசைப்புயல் .ஆர்.ரஹ்மானுக்கு திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இசைக்கலைஞர்கள் பெருந்திரளாக உற்சாகத்தோடு கலந்து கொண்ட இந்த விழாவில் கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசை ஞானி இளையராஜா, இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் .வி.எம்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாராட்டி பேசினர்.

இசை ஞானி இளையராஜா தனது குடும்பத்தினரோடு , .ஆர்.ரஹ்மானுக்கு தங்க சங்கிலி அணிவித்து ஆஸ்கர் விருது வென்றதற்காக வாழ்த்து கூறினார். முன்னதாக அவர் ரஹ்மானை பாராட்டி பேசியபோது கூறியதாவது:-
எல்லாம் மொட்டுகளுமே மலர்ந்து, காய்ந்து, கனியாவதில்லை. ஒரு சில மொட்டுக்கள் மட்டுமே மலர்ந்து , காய்ந்து கனியாகின்றன.
நம்மில் ஒருவரான .ஆர்.ரஹ்மான் சர்வதேச அளவில் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளார். இறைவன் சரியான பாத்திரத்தை தேர்வு செய்து இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளார்.

ஹாலிவுட் இசையமைப்பாளர்கள் ஜான் வில்லியம்ஸ் போன்றோர் நான்கு ஆஸ்கர் விருதுகளை வாங்கியிருந்தாலும் ஒரு விருதுக்கும் , மற்றொரு விருதுக்கும் இடையே இடைவெளி இருக்கிறது. ஆஸ்கர் விருதை நினைத்ததும் வாங்க முடியாது. ஆனால் நம்முடைய .ஆர்.ரஹ்மான் அங்கே சென்று ஒன்றல்ல இரண்டு விருதுகளை வாங்கி வந்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

கே.பாலச்சந்தர் பேசும்போது, .ஆர்.ரஹ்மான் இந்த விருதின் மூலம் இந்திய இசை மீது உலகளாவிய ஆர்வத்தை ஏற்படுத்தி இந்திய சினிமாவுக்கு புதிய கதவுகளை திறந்து விட்டிருப்பதாக பாராட்டினார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பேசும்போது, தன்னுடைய குழுவில் வாசித்த ஒருவர் சர்வதேச அளவில் புகழ் பெற்றிருப்பது தமக்கு பெருமை தருவதாக தெரிவித்தார். தயாரிப்பாளர் .வி.எம்.சரவணன், ஆஸ்கர் மேடையில் ரஹ்மான் தமிழில் பேசியதை குறிப்பிட்டு பாராட்டினார்.

பாலமுரளி கிருஷ்ணா, ஆஸ்கரை விட மதிப்பு வாய்ந்த விருதுகள் வந்தால் அதையும் ரஹ்மான் வெல்வார் என்று கூறினார் .
வாழ்த்து மழைக்கு பின்னர் ஏற்புரை வழங்க வந்த .ஆர்.ரஹ்மான், இந்தியாவுக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் தமக்கு இருந்ததாகவும், எம்.எஸ் .விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரது உழைப்புக்கு பரிசாகவே தான் இந்த ஆஸ்கரை பெற்று வந்திருப்பதாக தெரிவித்தார். இளையராஜா, எம்.எஸ்.வி. மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு ஆஸ்கரை விட பெரியது என்று அவர் குறிப்பிட்டார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

world

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ருவாண்டாவில் நடைபெற்ற இனப் படுகொலைகளுடன் தொடர்புடைய பாதிரியார் ஒருவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையில் 100 நாட்களில் 8 லட்சத்திற்கும் அதிகமான துத்சி இன மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது இராணுவ ஆதரவு பாதிரியாக இருந்த இமானுவல் ருகுண்டோ என்பவரிடம் அடைக்கலம் தேடி ஏராளமான துத்சி மக்கள் வந்தனர்.
அவர்களுக்கு அடைக்கலம் தருவதற்கு பதிலாக அவர்களை கடத்துவதற்கு ருகுண்டோ உதவியோடு ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரமும் செய்ய முற்சித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கை விசாரணை செய்த .நா. சபையின் போர்க் குற்றங்களுக்கான சர்வதேச நீதிமன்றம் இக்குற்றச் செயலில் ஈடுபட்ட பாதிரியார், ருகுண்டோவிற்கு 25 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
2009 ஆம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் உலகம் முழுவதிலும் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சமாகும். அதாவது, ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 5 பேர் வேலை இழந்துள்ளனர்.
சில நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பணியாளர்களை வேலையைவிட்டு நிறுத்துவது மற்றும் பணிநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சில நிறுவனங்கள் தானாக முன்வந்து ஓய்வுபெற்றால் சலுகை அளிப்பது போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன.
சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிறுவனங்கள் தங்களது செலவைக்குறைக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதன் தொடர்ச்சியாக 2008 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பணியிடங்களை சர்வதேச நிறுவனங்கள் குறைத்துள்ளன.
ஒவ்வொரு ரூபாவைவும் பாதுகாக்க சர்வதேச நிறுவனங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் , தற்போதைய நெருக்கடிக்கு உடனடி நிவாரணம் ஏதும் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
2009 ஆம் ஆண்டின் ஜனவரி 26 ஆம் திகதி ஒருநாள் மட்டும் 80,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டன. பெப்ரவரியில் அதைவிடக் குறைவான அளவிலேயே வேலை இழப்பு ஏற்பட்டது.
பெப்ரவரியில் சுரங்கத்துறையில் பெரும் நிறுவனமான ஆங்லோ அமெரிக்கன் 19,000 பணியாளர்களைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்தது. ஜப்பானின் பனாசோனிக் நிறுவனம் 15,000 பணியிடங்களைக் குறைத்தது. இதுதவிர ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 10,000 பணியாளர்களையும் நோர்ட்டல் நிறுவனம் 3,200 பணியாளர்களையும் வேலையை விட்டு நிறுத்தியது.
இதேபோன்று குட் இயர் நிறுவனம் 5,000 பணியாளர்களையும் மைக்ரான் 2,000 பணியாளர்களையும் யு. பி.எஸ். 1,600 பணியாளர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த பணிநீக்கம் தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
உலகில் உள்ள அனைத்து முன்னணி பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் புகழிடமாக விளங்குவதாகவும் , இதனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியே பயங்கரவாத அமைப்புகளுக்கு புகழிடம் அளிக்கிறது. அங்கு அல்கய்டா மட்டுமின்றி தாலிபான், ஹக்கானி , குல்பாதின் ஹெக்மத்யர் ஆகிய அமைப்புகள் மட்டுமின்றி அவற்றுடன் தொடர்புடைய குழுக்களும் அங்கு கூட்டாக இயங்குகின்றன.

மேற்கூறிய அனைத்து குழுக்களும் தனித் தனியானவை என்றாலும், பாகிஸ்தானில் அவை கூட்டாக இயங்குகின்றன. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகழிடம் அளிக்கும் வரை பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரில் அது பின்னடைவையே ஏற்படுத்தும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்ட போது சி...வின் துணை இயக்குனராக தாம் பணியாற்றியதைக் குறிப்பிட்ட அவர், அப்போதைய காலத்தில் சி... அமைப்புக்கு பாகிஸ்தான் புகழிடம் அளித்தது. அது எங்களுக்கு அளித்த பலன்களைப் பற்றி அறிந்ததால்தான் , பயங்கரவாதிகளுக்கு புகழிடம் அளிக்கக் கூடாது எனக் கூறுகிறேன்.

பாகிஸ்தான் தளபதியுடன் கடந்த வாரம் நடத்திய பேச்சின் வாயிலாக, அந்நாட்டு எல்லையில் நிலவும் அபாயம் குறித்தும், அதனால் நாட்டின் நிலைத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பாகிஸ்தான் அரசு அறிந்துள்ளது எனத் தெரிய வருவதாகவும் கூறினார்.

கடந்த வாரம் வாஷிங்டனுக்கு வருகை தந்த பாகிஸ்தான் தளபதி பர்வேஸ் கயானியை ராபர்ட் கேட்ஸ் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ªVôuUo _]SôVLl TôûRdÏ §ÚmT úYiÓm Guß RônXôkÕ ©WRUÚm, B£Vôu (ùRu¡ZdÏ B£V SôÓL°u áhPûUl×) RûXYÚUô] Al¶£h ®_ô´Yô Y#Ùßj§Ùs[ôo.
B£Vô²u YÚPôk§Wd áhPm RônXôk§p Oô«tßd¡ZûU ¨û\YûPjRÕ.
CkR áhPj§p ªVôuUo Sôh¥p _]SôVL E¬ûU úYi¥ úTôWôÓTYoLs LXkÕ ùLôs[ AkSôhÓ
©WRUo Rônu ùNnu RûP®§jRôo.
CÕ Ï±jÕ ùNn§Vô[oLs Nk§l©u úTôÕ RônXôkÕ ©WRUo ®_ô´Yô á±VÕ:
B£Vôu áhPûUl×dÏ ¿iP LôXUôL RûXY# RÚm ©Wfû]VôL ªVôuUo Es[Õ.
AkSôh¥p ÁiÓm _]SôVLm UXW úYiÓm. AW£Vp ûL§VôL £û\ ûYdLlThÓs[YoLs ®Ó®dLlTP úYiÓm.
CÕ Tt± ªVôuUo WôÔYj RûXûU«Pm úTN B£Vôu AûUl× RVôWôL Es[Õ. CÕ Ï±jÕ I.Sô. AûUl×Pu úTNÜm B£Vôu RûXYoLs ®Úmסu\]o Gu\ôo.
ªVôuU¬p 2010-m BiÓ ùTôÕj úRoRp SPjRlTÓm Guß AeÏ Bh£ ׬kÕ YÚm WôÔY AWÑ ùR¬®jÕs[Õ.
B]ôp G§oLh£j RûXYo Be Nôu ã ¡ûV ùRôPokÕ ÅhÓLôY#p ûYjÕ ®hÓ úRoRp SPjR ØVt£lTÕ HUôtß úYûX Guß _]SôVLYô§Ls G§ol×j ùR¬®jÕs[]o.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில், கராச்சி நகரை எந்நேரமும் அவர்கள் கைப்பற்றக் கூடும் என கராச்சி நகர சி. .டி. சிறப்புப் பிரிவு காவல்துறையினர் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்து மாகாண காவல்துறைத் தலைவர், அம்மாகாண அரசுக்கு சமர்ப்பித்துள்ள அந்த அறிக்கையில் , இஸ்லாமாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் ஏற்கனவே தாக்குதல் நடத்தியுள்ள தாலிபான்கள் , கராச்சியில் ஏராளமான பதுங்கு இடங்களை உருவாக்கி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் வசம் ஏராளமான ஆயுதங்களும் தற்போது உள்ளதால் எந்த நேரமும் கராச்சி நகருக்கு நுழைந்து புரட்சி ஏற்படுத்தி நகரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரசல்ஸ் நகரத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் அவரசக் கூட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது . பொருளாதார நெருக்கடி இறுக இறுக, ஐரோப்பிய ஒன்றியம் பிளவு பட்டுக்கொண்டு போகிறது என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில் இந்த மேநிலை மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
மாநாட்டுக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய நாடுகளின் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்களுள் ஒருவரான போலந்துப் பிரதமர் டொனால்ட் டஸ்க் அவர்கள் ஒன்றியத்து உறுப்பினர்கள் தற்பாதுகாத்துக் கொள்ள எழும் ஆவலைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற ஹங்கரியின் பிரதமர், ஐரோப்பாவின் மத்தியில் மேலும் ஒரு தடைவ இரும்புத் திரை வீழக் கூடிய அபாயமுள்ளது என்றார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அமெரிக்கப்படையினரால் ஏவப்பட்டதாக நம்பப்படும் ஏவுகணை தாக்கியதில், 7 பேர் கொல்லப்பட்டதாக, பபாகிஸ்தானின் வடமேற்கு மாநில உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆப்கானுடனான எல்லையில் அமைந்துள்ள தெற்கு வஸிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தலிபான் கிளர்ச்சிக்காரர்கள் இயங்கும் இடம் என்று உள்ளூர் வாசிகளால் கூறப்படும் ஸ்ரரோகா என்னும் இடத்தில் உள்ள ஒரு வீட்டை இந்த ஏவுகணை தாக்கியுள்ளது.
பாகிஸ்தானிய அரசாங்கத்தின் அதிகார பூர்வ கண்டனத்துக்கு மத்தியிலும், இந்த பிராந்தியத்தில் தலிபான் மற்றும் அல்கைதா கிளர்ச்சிக்காரர்களின் நிலைகள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது அமெரிக்க இராணுவம் திரும்பத்திரும்ப தாக்குதல் நடத்தி வருகின்றது .

!!!!!!!!!!!!!!!!!!!

லெபனிய முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரி அவர்களின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களை விசாரரிக்கும் சர்வதேச விசாரணை மன்றம் நெதர்லாந்தில் அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது .
பெய்ரூட் நகரத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஹரிரி அவர்களும், மேலும் 22 பேரும் உயிரிழக்கக் காரணமான குண்டுத் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களின் விசாரணைகளை பதினொரு சர்வதேச மற்றும் லெபனானிய நீதிபதிகள் கேட்கவுள்ளனர்.
அரசுதரப்புத் தலைமை வழக்கறிஞரான டனியேல் பெல்மேர் அவர்கள் இந்த விசாரணையை, பழிவாங்கும் நோக்கிலமைந்த ஒன்றல்ல என்றார். உண்மையைக் கண்டறிவதற்காகவும் நம்பக் கூடிய நீதி கிடைப்பதற்காகவும் அமைக்கப்பட்ட விசாரணை இதுவென்றார்.
ஹரிரி அவர்களுடைய மகன் சாத் ஹரிரி உட்படப் பல லெபனியர்கள் இந்த தாக்குதலுக்குப் பின்னால் சிரியாவும் அதன் கூட்டாளிகளும்; தான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.
ஆனால் சிரியா நாட்டு அரசினர் தமக்கும் இந்தப் படுகொலைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றே கூறிவருகிறார்கள்.

!!!!!!!!!!!!!!!!!!!!!

வங்கதேசத்தில் 140 க்கும் அதிகமானோர் பலியாகக் காரணமான கலகத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் அதிகமான எல்லைக்காவல் படையினர் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருப்பதாக வங்கதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்களில் கொல்லப்பட்ட 70க்கும் அதிகமான அதிகாரிகளின் சடலங்கள் இன்னமும் மீட்கப்படவில்லை.
”பங்காளதேஷ் ரைபிள்ஸ்” எனப்படும் எல்லைக்காவல் படையின் ஆயிரத்துக்கும் அதிகமான சிப்பாய்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருப்பதை வங்கதேச பொலிஸார் உறுதி செய்துள்ளனர.
மேலதிக வேலைக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலான வாதங்களால் ஆரம்பமானதாக கருதப்படும் இந்த கலகம் 137 இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்துள்ளது.
அத்துடன் இந்த இராணுவ அதிகாரிகளின் மனைவிமார் உட்பட சுமார் 20 பொதுமக்களும் இதில் கொல்லப்பட்டதாக அஞ்சப்படுகின்றது.
இந்த கலகத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பிரதமர் ஷேக் கசீனாவுடன் பேச்சு நடத்திய கலகக்காரர்கள் 6 பேரது பெயர்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
ஆனால், இதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் மேலும் 1000 பேரது விபரங்கள் பொலிஸாருக்கு இன்னமும் கிடைக்கவில்லை.
அதிகாரிகளையும், பொதுமக்களையும் கொல்வதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டமை, ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் பயன்படுத்தியமை, பதற்றத்தை ஏற்படுத்தியமை, சூறையாடல், சடலங்களை மறைக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
70க்கும் அதிகமான சடலங்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள் ஒன்றில் இந்த கலகம் நடந்த மத்திய டாக்காவின் எல்லைக்காவலர்களின் குடியிருப்புக்கள் அமைந்துள்ள பாரிய மைதானத்தில் இருந்தோ, அல்லது நிலத்துக்கு கீழே ஓடுகின்ற பெரும் பாதாள சாக்கடையில் இருந்தோதான்.
எரிந்துபோன சடல எச்சங்களில் இருந்தும் சில எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் குற்றவாளியாக இவர்கள் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று இராணுவம் கூறுகிறது.
பல நூறு சிப்பாய்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், மேலும் பலர் தப்பிச் சென்று விட்டார்கள
!!!!!!!!!!!!!!
sports
பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 452ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணியின் சங்கக்காரா, சமரவீரா இருவரும் சதம் விளாசியுள்ளனர்.

இன்று துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, இலங்கையை பேட் செய்யக் கேட்டுக்கொண்டது . துவக்க வீரர்களாக களமிறங்கிய வர்னபுரா 8 ரன்கள், பரனவிதனா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் . அணித்தலைவர் ஜெயவர்த்தனே 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

எனினும் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சங்கக்காரா, சமரவீரா உடன் இணைந்து நிதானமாக விளையாடினார். இந்த ஜோடியை பிரிக்க பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது .

இதில் சமரவீரா 306 பந்துகளில் 28 பவுண்டரிகளுடன் தனது சதத்தை கடந்J 190 Xl;lq;fSld; MLfpwhh;. இதைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களிலேயே 193 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் சங்கக்காராவும் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். எனினும் சங்கக்காரா 104 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார் .

இன்னிங்சின் 116வது ஓவர் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 452 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. சமரவீரா 190 ரன்கள், தில்ஷான் 76ரன் எடுj;J களத்தில் உள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ÙRÁB‘¡eLÖ- B͇ÚW¦VÖ ÚUÖ‡V ˜R¥ ÙPÍy f¡eÙLy ÚTÖyz Ú^ÖLÁÍTÖŸef¥ SÛPÙT¼¿ Y£f\‰.

B͇ÚW¦VÖ ˜R¥ CÁÂjp¥ 466 WÁ h«†R‰. ÙRÁB‘¡eLÖ ˜R¥ CÁÂjp¥ 220 WÁÂ¥ Ml;lk; ,oe;jJ.
259 WÁL· ˜ÁÂÛX›¥ 2-Y‰ CÁÂjÛN BzV B͇ÚW¦VÖ 207 WÁÂ¥ Ml;lk; ,oe;jJ
CR]Ö¥ ÙRÁB‘¡eLÖ°eh 454 WÁ CXeh ŒŸQ›eLTyP‰
ÚS¼Û\V ByP ÚSW ˜z«¥ ÙRÁB‘¡eLÖ 2 «eÙLy CZ”eh 178 WÁ G|†‰ C£‹R‰
CÁ¿ LÛPpSÖ· ByP• SPef\‰. ÙRÁB‘¡eLÖ ÙY¼½eh ÚU¨• 276 WÁ ÚRÛY
!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.