டாடாவின் ஜெனான் எக்ஸ்டி கார் அறிமுகம்

இந்திய கார் சந்தைக்கு டாடா தனது புதிய தயாரிப்பான ஜெனான் எக்ஸ்டி மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐந்து இருக்கைகளுடன் வந்துள்ள இந்த கார் 2.2 லிட்டர் டைகோர் டீசல் இன்ஜினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப இதை இரண்டு அல்லது நான்கு சக்கரங்களில் இயக்கக் கூடிய வகையில் உருவாக்கியுள்ளது டாடா நிறுவனம்.

வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் விலை ஆகியவற்றில் இது இந்திய கார் சந்தையில் ஒரு முன்னோடியாக இருக்கும்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையை மனதில் வைத்து இந்நிறுவனம் இந்த மாடலை இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட 39 நகரங்களில் உள்ள 58 ஷோ ரூம்களில் மட்டும் அறிமுகம் செய்யவிருக்கிறது. மாதம் 2000 வீதம் ஆண்டுக்கு 24 ஆயிரம் கார்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது.

இதன் விலை ரூ 7.3 லட்சம் முதல் ரூ 8.6 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே பிரேசில், சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, இத்தாலி, போலந்து மற்றும் தாய்லாந்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார் அங்கு ஆண்டுக்கு 6,000 வரை விற்பனையாகிறது.

ஜெனான் மற்றும் நானோவை தவிர்த்து மேலும் 5 மாடல் கார்களை டாடா நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யவிருக்கிறது. டாடாவை பற்றி தெரிந்தவர்களுக்கு அவர்கள் செய்வது சரியாக தான் இருக்கும் என்பது தெரியும்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.