மாணவியுடன் குடித்தனம்-தலைமை ஆசிரியர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே 8 -ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருக்கோட்டை அருகே உள்ளது வில்லிபத்திரி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணபிரான். இவரது மகள் மாலா. 14 வயதாகும் மாலா, அங்குள்ள அரசு நடு நிலைப்பள்ளியில் 8 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 23 -ம் தேதி அவர் திடீரென காணாமல் போனார்.
இது குறித்து மாலாவின் தந்தை மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மாலா படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகத்திற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் 23 -ம் தேதி பள்ளிக்கு வந்த மாலாவை பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அருப்புக்கோட்டை அருகே ஒரு வீட்டில் வைத்துக் குடும்பம் நடத்திய ஆறுமுகம், மாலாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக கூறி தலைமை ஆசிரியர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.

ஆறுமுகத்திற்கு ஏற்கனவே திருணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.