இலங்கையில் இடம்பெற்று வரும் சிவில் யுத்தம் எயிட்ஸ் நோய் பரவக் கூடிய அபாயத்தை உருவாக்கியுளளது – உலக வங்கி

இலங்கையில் கடந்த சில தசாப்தங்களாக நீடித்து வரும் சிவில் யுத்தம் காரணமாக எயிட்ஸ் நோய் அதிகளவு பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் தொடரும் யுத்தம் இந்த நிலையை உருவாக்கக் கூடும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக யுத்தம் காரணமாக இராணுவ நடவடிக்கைகளுக்காக படையினர் அடிக்கடி வௌவேறு இடங்களுக்கு செல்லல் மற்றும் நேரிடுதல் இடம்பெயர் மக்கள் அடிக்கடி வேறு இடங்களில் தங்குதல் போன்ற காரணிகளினால் பாலியல் ரீதியான நோய்கள் உருவாகக் கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எயிட்ஸ் நோய் தொற்று பரவினால் அது நீண்டகால சமூகப் பொருளாதார பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை எயிட்ஸ் நோய்த் தொற்று மிகவும் குறைந்தளவு காணப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை சாதகமான நிலையில் காணப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.