சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி: 54 ஆயிரம் பேர் வேலையிழப்

சிறிலங்காவின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் 54 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலக பொருளாதார நெருக்கடி சிறிலங்காவை கடுமையாக பாதித்து வருகின்றது.

சிறிலங்காவில் உள்ள 53 ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 54 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.

ஆடை உற்பத்தி, கட்டுமானத்துறை, வெப்ப ஆடை உற்பத்தி, சீமெந்து உற்பத்தி, இரத்தினக்கல் ஏற்றுமதி, நிதி முகாமைத்துவ நிறுவனங்களே அதிகளவில் மூடப்பட்டுள்ளன.

எதிர்வரும் மாதங்களில் மேலும் பலர் வேலை இழப்புக்களை சந்திக்கலாம் என வர்த்தக சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்டுநாயக்க, பியகம, கோகல பகுதிகளில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள பல நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கு ஊதியங்களை வழங்குவதற்கு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளன.

பணியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள், பயண கொடுப்பனவுகள், மேலதிக நேர வேலை போன்றவற்றை இந்த நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. சில நிறுவனங்கள் தமது பணியாளர்களை விடுமுறையில் அனுப்பியுள்ளன.

கம்பகா மாவட்டத்தில் உள்ள சினோரெக்ஸ் ஆடை உற்பத்தி நிறுவனம் மூடப்பட்டதனால் 3 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்ற் லங்கா மூடப்பட்டதனால் 2 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.