தென்பகுதியை பாதுகாக்க போதியளவு படையினர் இல்லை: வீதி பாதுகாப்பு பணியில் ஊர்காவல் படை

தென்பகுதியையும் கிழக்கு மாகாணத்தையும் பாதுகாப்பதற்கு போதியளவு சிறிலங்கா படையினர் இல்லாததால் அவற்றின் பாதுகாப்பினை ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

சிறிலங்காவின் படை பலத்தில் பெருமளவானவை வடபகுதியில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய பகுதிகளின் பாதுகாப்புக்களை ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மணலாறில் இருந்து ஜனகபுர பகுதி வரையிலுமான வீதிகளின் பாதுகாப்பு ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அம்பாறை மற்றும் பொலநறுவை பகுதிகளிலும் 500 ஊர்காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமது கிராமங்களுக்கு வெளியில் நிறுத்தப்படும் ஊர்காவல் படையினருக்கு மேலதிக கொடுப்பனவுகளும் இலவச உணவும் வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.