அமெரிக்க பொருளாதாரம் சரிந்ததால் 50,000 பேருக்கு போலீஸ் வேலை

வாஷிங்டன் : அமெரிக்காவில் நிலவும் கடும் பொருளாதார சீர்கேட்டால் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையை இழந்தாலும், புதிதாக 50,000 பேருக்கு போலீஸ் வேலை கிடைக்கப்போகிறது.

அதிபர் பாரக் ஒபாமா தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிதாக 50,000 போலீஸ் ஆபீசர்களை வேலைக்கு எடுப்பதற்கு தேவையான நிதியை ஓதுக்கி யிருக்கிறார்.பொருளாதார மந்த நிலை காரணமாக ஆங்காங்கே நிகழ்த்தப்படும் குற்றங்களை தடுக்க இவர்கள் புதிதாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று அமெரிக்க அரசு தெரிவித்திருக்கிறது. மாகாணங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க, தேசிய பாதுகாப்பு, மற்றும் மற்ற குற்றங்களை தடுக்கும் எஃப்.பி.ஐ.யின் சேவை போன்றவைகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்கும் தொகை 26.5 பில்லியன் டாலர்கள்

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.