சுப்பிரமணிய சா‌மியை கைது செய்ய வேண்டும்: திருமாவளவன்

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாக‌த்‌தி‌ற்கு‌ள் கு‌ண்ட‌ர்களுட‌ன் வ‌ந்த சு‌ப்‌பிரம‌ணியைசா‌மி ‌மீது இதுவரை எ‌ந்த நடவடி‌க்கையு‌‌ம் எடு‌க்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்த ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவ‌ன், அவரை கு‌ண்ட‌ர் ச‌‌ட்ட‌த்‌தி‌ன் ‌‌கீ‌‌ழ் கைது செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌மிழக அரசை வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

நாக‌ர்கோ‌வி‌லி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியா‌ள‌ர்க‌‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கை தமிழர்களை பாதுகாக்கக்கோரி மா‌ர்‌ச் 4, 5ஆ‌ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம். ”நாம் தமிழர் நடைபயணம்” என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நடைபயணம் ஒன்றியம், நகரம், குக்கிராமங்கள் தோறும் நடைபெறும் எ‌ன்றா‌ர்.

நடைபயணத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு குழுவிலும் 500 முதல் 1000 பேர் வரை பங்கேற்பார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ‌திருமாவளவ‌ன், ஒவ்வொரு குழுவும் அந்த 2 நாட்களிலும் 50 கி.மீ. தூரம் நடப்பார்கள் எ‌ன்று‌ம் இந்த நடைபயணம் மூலம் 2 கோடி மக்களை சந்திக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் எ‌ன்றா‌ர்.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட தாக்குத‌ல் எ‌ன்று‌ம் சுப்பிரமணிய சாமி மீது நடந்த முட்டைவீச்சு தாக்குதலுக்காக காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டது கண்டித்தக்கது எ‌ன்றா‌ர்.

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாக‌த்‌தி‌‌ற்கு‌ள் குண்டர்களுடன் வந்த சுப்பிரமணிய சா‌மி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எ‌ன்று கூ‌றிய அவ‌ர், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அவரை கைது செய்ய வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா விரைவில் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற பேராசை தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருப்பதின் மூலம் அம்பலமாகியுள்ளது எ‌ன்று கூ‌றிய ‌திருமாவளவ‌ன், ஒரு அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் அந்த அரசை ஆள விடவேண்டும், அதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கு அழகு எ‌ன்றா‌ர்.

Source & Thanks : /tamil.webdunia

Leave a Reply

Your email address will not be published.