ஒரிஸாவில் 2 இரயில் நிலையம் தகர்ப்பு: மாவோயிஸ்ட்கள் அட்டகாசம்

ஒரிஸாவின் சுந்தர்கார்ஹ் மாவட்டத்தில் உள்ள 2 இரயில் நிலையங்கள் மீது மாவோயிஸ்டுகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிஸ்ரா காவல்நிலைய ஆ‌ய்வாள‌ர் மொஹந்தி கூறுகையில், ரூர்கேலாவில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பலுலடா இர‌யில் நிலையத்தின் மீது இன்று அதிகாலை 60 மாவோயிஸ்டுகள் கொண்ட கும்பல் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

இதில் இரயில் நிலையக் கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்து விட்டதாகக் கூறினார். இதன் காரணமாக ஹௌரா-மும்பை இரயில் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல் ரூர்கேலாவில் இருந்து 30 கி.மீ தொலைவில், ரூர்கேலா-பாராசுவான் வழித்தடத்தில் அமைந்துள்ள சாந்திபோஷ் இரயில் நிலையத்தின் மீது 50 பேர் அடங்கிய மாவோயிஸ்டுகள் குழு தாக்கியுள்ளது.

அப்போது பணியில் இருந்த இரயில் நிலைய அதிகாரி எஸ்.கே.சிங், துணை அதிகாரி சமீர் முகர்ஜி ஆகியோரையும் காணவில்லை என்பதால் மாவோயிஸ்டுகள் அவர்களை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

Source & Thanks : tamil.webdunia

Leave a Reply

Your email address will not be published.