‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (28.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

இலங்கையில் தற்போது தோன்றியுள்ள மனித அவலங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

இலங்கை தொடர்பான விவாதங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை தலைவர் யூகியோ ரகாசோ கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இலங்கை விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான விவாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் நிகழ்ச்சி நிரலில் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐந்து நிரந்தர உறுப்புரிமை உள்ள நாடுகளில் ஒரு நாட்டைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பது குறித்து கடந்த புதன்கிழமையே உறுதி செய்யப்பட்டுள்ளது .

இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபையில் சேர்க்கப்பட்டது இலகுவான காரியம் அல்ல . சிறிலங்கா அரசுடனும் இது குறித்து தொடர்பு கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு அறிவித்தலும் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலை குறித்தான விவாதம்ஏனைய விவாதங்கள்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கி நாடுகள் சபை பலாத்காரமாக எமது பிரச்சினையில் தலையிட முனைந்தால் .நா. அங்கத்துவத்திலிருந்து வெளியேறி இலங்கை சுயாதீனமான நாடாகச் செயற்படும் தீர்மானத்தை இலங்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
சுயாதீனமான நாடுகளை ஆக்கிரமித்து மனிதப் படுகொலைகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுக்கு எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அதிகாரமில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது .
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் அமெரிக்க செனற் சபையில் ஆராயப்பட்டதுடன் .நா . போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருவது தொடர்பில் ஹெல உறுமய கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்துகையிலேயே அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.
நாடில்லாது நாடோடிகளாகத் திரிந்தவர்கள் செவ்விந்தியர்களை விரட்டியடித்து பலாத்காரமான ரீதியில் அமெரிக்காவை உருவாக்கினார்கள்.இவ்வாறானவர்கள் மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்பது கேலிக்கூத்தாகும் .
பல தசாப்த காலங்களாக எமது நாட்டில் அழிவுகளை ஏற்படுத்திய பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலி பயங்கரவாதத்தை அழித்தொழிக்கும் இறுதித் தறுவாயில் நாம் இருக்கின்றோம். இந்தச்சூழ்நிலையில் அமெரிக்கா எமக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தகக்கூடாது.
அப்பாவித் தமிழ்மக்களை பணயக்கைதிகளாக பிரபாகரன் பிடித்து வைத்துள்ளார். அவர்களை மீட்டு ஜனநாயகத்தை வழங்கவே இலங்கை அரசாங்கம் போராடி வருகின்றது. அம்மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் யுத்த சூனியப் பிரதேசங்களையும் அறிவித்துள்ளது.
அமெரிக்காவும், .நா.வும் ஏனைய நாடுகளும் அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டும். அதைவிடுத்து இறையாண்மை உள்ள எமது நாட்டுப் பிரச்சினையில் பலாத்காரமாகத் தலையிட முனையலாகாது.
இராஜதந்திர ரீதியிலான அமெரிக்காவின் நட்புறவை நாம் வரவேற்கின்றோம். அதைவிடுத்து பலாத்காரத்தைப் பிரயோகிக்க முனைந்தால் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.
.நா.வுக்கும் இதே செய்தியையே தெரிவிக்க விரும்புகின்றோம். பலாத்காரம் பிரயோகிககப்பட்டால் .நா. அங்கத்துவத்திலிருந்து வெளியேறி தனித்துவமான சுயாதீனமான இராஜ்ஜியமாக இலங்கையை பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அண்மையில் ஆங்கில சினிமாவின் அதியுயர் விருதானஓஸ்கார்விருதினை பெற்றுக்கொண்ட இசையமைப்பாளர் . ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
‘ஓஸ்கார்’ விருது வழங்கும் விழாவோ அல்லது இந்த மேடையோ அரசியல் விடயங்களுக்கான இடமல்ல. இருந்த போதும், எந்த உயிரினத்திற்கும் துன்பம் ஏற்படக்கூடாது என்றே நான் விரும்புவது உண்டு.

இலங்கையில் அமைதியான சூழலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன்; நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு திரும்பியுள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானத்துறை பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நேற்று தமது விஜயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதன்போது அவர் இலங்கையில் தாம் கவனித்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதுவும் இந்த வருட ஆரம்பம் முதல் ஏற்பட்டுள்ள நிலைமை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெறும் யுத்த சூழலில் வன்னியில் அதிகமான மக்கள் சிக்குண்டுள்ளனர். அத்துடன் அங்கிருந்து அவர்களை வெளியேறுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தடுத்து வருவதற்கான உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக ஹோம்ஸ் தமது உரையின் போது தெரிவித்தார்.

இந்த நிலையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 14 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் அவர்கள் தற்போது தங்கியுள்ளனர் .அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் 70 ஆயிரம் மக்களே உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. எனினும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய தமிழ் தரப்புகளும் வன்னியில் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் சிக்குண்டுள்ளதாக தெரிவித்துள்ளன. யுத்தத்தினால் அதிகம் பொதுமக்களே அங்கு பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. எனினும் தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் அங்கு செயற்படாமை காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பெறமுடியவில்லை . எனினும் நாள் ஒன்றுக்கு குறைந்தது பல பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்; பலர் காயமடைகின்றனர் எனத் தாம் நம்புவதாக ஹோம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தமது விஜயத்தின் போது அரசாங்க தரப்பு ஜனாதிபதி மற்றும் முக்கியமான தமிழ்க் கட்சி ஒன்றின் தலைவர் ஆகியோரை சந்தித்ததாகத் தெரிவித்த ஹோம்ஸ், இணைத்தலைமை நாடுகளின் பிரநிதிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு மேலும் 400 ஏக்கர் நிலத்தில் தற்காலிக இருப்பிடங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது 25 ஏக்கர் நிலப்பரப்பிலேயே 25 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வன்னியில் இருந்து வெளியேறுவோரை கண்காணிப்பதற்காக .நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினரை (UNHCR) அனுமதிப்பது என அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இடம்பெயர்ந்த நலன்புரி முகாமில் தங்கியுள்ளவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோரை சுதந்திரமாக நடமாடுவதற்கும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது .

அதேவேளை யுத்தம் முடிவடையும் நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் ஹோம்ஸ் குறிப்பிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு முன்பாக நேற்று ஒருவர் தீக்குளித்துள்ளதாக .எப். பி. செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று மாலை 4.00 மணியளவில் தமக்குத் தகவல் கிடைத்து பாராளுமன்ற வளவுக்குச்; சென்றதாகவும் தீக்குளித்தவரை தென் லண்டன் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும் அங்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் லண்டன் பொலிஸார் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

தீக்குளித்தவர் 43 வயதான தமிழர் என்ற விபரம் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்து யுத்தத்தில் காயமடைந்தவர்கள் உட்பட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக அழைத்து வரப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 32 சத வீதமானோர் சிகிச்சை முடிந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை வைத்தியசாலை தகவல்களின் படி கடந்த 11ஆம் திகதி முதல் 5 தடவைகளில் காயமுற்றவர்கள்,நோயாளர்கள்,கர்ப்பிணிகள் மற்றும் உறவினர்கள் என 1996 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 632 பேர் தவிர மிகுதி 1348 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . திருகோணமலை வைத்தியசாலையில் மட்டும் 796 பேர் சிகிச்சை பெற்று வரும் அதே வேளை ஏனையோர் மன்னார்,பொலன்னறுவை,கந்தளாய்,தம்பலகாமம்,கொழும்பு மற்றும்; கண்டி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனைத் தவிர இது வரை 16 பேர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 12 கர்ப்பிணித் தாய்மார் குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர். மேலும் அங்கிருந்து வந்தவர்களில் 85 சதவீதமானவர்கள் போஷாக்கின்மையால் பாதிப்புறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்று 6ஆவது தொகுதி நோயாளர்களுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் முல்லைத்தீவிலிருந்து புறப்படவிருப்பதாகவும்,இன்றிரவு வந்து சேரும் என்று எதிர் பார்க்கப்படுவதாகவும் திருகோணமலை வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமென இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும் என்பதே புதுடெல்லி அரசாங்கத்தின் நிலைப்பாடு என இந்திய
மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் இதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட இந்திய மத்திய அரசு பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரான்சின் உலகப் புகழ் வாய்ந்த பகுதியான ஈபிள் கோபுரம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 6 மணிவரை சிறிலங்கா அரசின் இனப்படுகொலையை அடையாளப்படுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் வெளிநாட்டவர்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈபிள் கோபுரம் முன்பாக அங்கு திரண்ட தமிழர்கள் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் உடைகளை அணிந்த வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பரப்புரைப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் விடுதலைப்புலிகளே எமது ஏகப்பிரதிநிதிகள். அவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துவதனூடாகவே இனப்படுகொலையை நிறுத்த முடியும். என்ற கருத்துக்களை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளனர்.
இப்பகுதியைச் சுற்றிப் பல்வேறு இடங்களிலும் மாறிமாறி கவனயீர்ப்புப் பரப்புரையினை மேற்கொண்ட இந்நூற்றுக்கணக்கிலான தமிழர்களுக்கும் பிரெஞ்சுக் காவல்துறையினர் தமது கணிசமான பாதுகாப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
mNjNtisapy; ,d;W gpw;gfy; 2 kzpf;F ,yq;if murpd; gLnfhiyfis fz;bj;J khNgUk; fz;ldNguzp bastile metroypUe;J Muk;gk;Mfp republique metrotpy; epiwTngWk;.vd njuptpf;fg;gLfpwJ.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகள் தெற்கில் எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தன நேற்றுக் கூறினார். இது தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார் .
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
புலிகள் இப்போது தோல்வியின் விளிம்பில் இருக்கின்றனர். அவர்களால் படையினருக்கு எதிராக எந்தவிதமான தாக்குதல்களையும் நடத்த முடியாது. விரக்தியிலும் கடும் கோபத்திலும் உள்ள புலிகள் தெற்கில் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். இது தொடர்பாகத் தென்பகுதி மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். கொழும்பு மக்களும் மிக விழிப்புடன் இருக்க வேண்டும்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு எம்மிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை . ஐரோப்பிய ஒன்றியம் கூட ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு புலிகளுக்கு அழுத்தங் கொடுக்கத் தொடங்கியுள்ளது. எமது நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எமது யுத்த நடவடிக்கை தொடர்பில் சர்வதேச நாடுகளும் திருப்தியடைந்துள்ளன என்பது இதன் மூலம் தெரிகின்றது.
தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென்றால் அதைத் தாம் வழங்குவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அப்படியென்றால் அக்கட்சி அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும். என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!india
பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு சார்க் நாடுகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.நேற்றுக் கொழும்பில் சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை இரட்டிப்பாக்க வேண்டிய தருணமிதுவென்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் ஜீப்பில் வரவேண்டிய தேவையில்லை என்றும் தாம் விரும்பிய எந்த வாகனத்திலும் வரலாம் என்றும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நேற்றுக் கூறினார்.
சுடர் ஒளிஆசிரியர் வித்தியாதரன் கைது செய்யப்பட்டாரே அன்றி கடத்தப்பட வில்லை என்பதால் இது குறித்து மக்கள் எவரும் கலவரமடையத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார் .
அரசு தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
சுடர் ஒளி ஆசிரியர் வித்தியாதரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டார் என்று சிலரால் கூறப்பட்டது. அது பொய். பொலிஸார் ஜீப்பில் வராமல் வேறு வாகனத்தில் வந்தார்கள் என்பதால் அதைக் கடத்தல் என்று சொல்ல முடியாது . பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைதுசெய்ய பொலிஸார் ஜீப்பில் வர வேண்டும் என்ற தேவையில்லை.
எந்த வாகனத்திலும் வரலாம். கடந்த 20 ஆம் திகதி விடுதலைப் புலிகள் தலைநகரில் நடத்திய விமானத் தாக்குதல் தொடர்பிலான தொலைபேசி இலக்கங்கள் குறித்தே வித்தியாதரனைப் பொலிஸார் கைதுசெய்தனர்.
தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான செயல்களில் இருந்து அரசு என்ற வகையில் நாட்டைக் காப்பாற்றும் பொருட்டு பல நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள நேரிட்டது.
அந்த வகையில் வித்தியாதரன் இருக்கும் இடத்தில் பல விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. விசாரணைகளின் பின்னர்தான் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதா அல்லது இச்சம்பவத்தில் அவருக்குத் தொடர்பில்லை எனில் அதற்கேற்ற நடவடிக்கைகளை தொடர்வதா என்பதை தீர்மானிக்க முடியும் என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னிப்பகுதியில் இருந்து காய மடைந்த நிலையில் திருகோணமலைக்குக் கொண்டு வரப்பட்ட ஐந்து சிறுமிகள் உட்பட பதினைந்து சிறுவர்கள் கொழும்பில் உள்ள சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல் நிலை நன்கு தேறிவருகின்றது எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித் திருக்கின்றது,
இந்தச் சிறுவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களே காணப்படுகின்றன எனவும், திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மருத்துவமனைகளில் இருந்து கொழும்புக்கு மாற்றப்பட்ட இந்தச் சிறுவர்கள் பூரணமாகக் குணமடைந்ததும், அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைப் பிரச்னை தொடர்பாக தமிழகம் எங்கும் கண்டனப் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் முடிவு செய்துள்ளது .
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்தி, அங்கே வாழும் தமிழர்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டுமென இலங்கை அரசை .நா. சபை வலியுறுத்த வேண்டும் .
இல்லையெனில் இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க .நா. சபை பொதுச்செயலர் பான் கி மூன் முன்வர வேண்டும்.
இதுதொடர்பாக .நா. சபை பொதுச்செயலர் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு , தேமுதிக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் மெயில் மூலம் வேண்டுகோள் விடுப்பது.
இலங்கையில் படுகொலை நடைபெறுவதைத் தடுத்த நிறுத்த முயற்சிக்காமல், நாடகமாடிவரும் மத்திய , மாநில அரசுகளை வன்மையாகக் கண்டிப்பது.
அங்கு போரை நிறுத்த வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் மாவட்ட தேமுதிக சார்பில் கண்டனப் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவது. போன்ற தீர்மானங்களை விஜயகாந்த தலைமையிலான தே.தி.மு.. கட்சி எடுத்துள்ளது.

இதேவேளை இலங்கை பிரச்சினைக்காக யாரும் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம்என்று கட்சி தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடர்ந்து இலங்கை தமிழர்களின் இன்னல்களை தீர்க்க ஜனநாயக முறையில் நடத்தி வரும் போராட்டங்களில் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் தீ வைத்து கொண்டு உயிரை மாய்த்து கொள்ளும் முயற்சியில் எக்காரணத்தை முன்னிட்டும் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன் .
இளைஞர்களின் செயல்கள், இலங்கை தமிழர்களுக்கு ஆக்க பூர்வமாக பயன்பட வேண்டும். அதற்கு மாறாக அவர்களது உயிரைத் தாங்களே மாய்த்து கொள்வதை கட்சி ஒரு போதும் ஊக்கப்படுத்தாது.
வேலூர் மாவட்டம், வள்ளி பட்டு ஊராட்சியை சேர்ந்த எனது உயிரினும் மேலான கட்சியின் கிளை செயலாளர் சீனிவாசன் தீக்குளித்தார் என்பதை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன் . அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.
இளைஞர்கள் சாதிக்க பிறந்தவர்களே தவிர, சாவதற்கு பிறந்தவர்கள் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொண்டரும் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்படுபவராக இருக்க வேண்டுமென்று நான் அடிக்கடி வலியுறுத்தி வரும் கருத்தாகும்.
தீக்குளிக்கும் முயற்சியில் தயவு செய்து கட்சியினர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் . தீக்குளிப்பது என்பது இதுவே முதலும், கடைசியுமாக இருக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தே.மு .தி.. தொண்டர் சீனிவாசன் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்தார்.
வேலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவரை, .தி.மு. . பொதுச்செயலாளர் வைகோ நேற்று நள்ளிரவு 11-30 மணிக்கு சந்தித்து ஆறுதல் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னையில் இன்று கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது . ரயில் மற்றும் தரைவழிப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

சென்னையில் இன்று அதிகாலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. குவைத் ஏர்வேஸ் விமானம் மற்றும் கொழும்பில் இருந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் ஆகியவை தரையிறங்க முடியாமல் , பெங்களூருவிற்கு திருப்பிவிடப்பட்டன. இதேபோல, ஷார்ஜாவில் இருந்து வந்த இன்டியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஓமன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டன. பின்னர், பனிமூட்டம் குறையத் தொடங்கியதும், விமானங்கள் படிப்படியாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன. பனிமூட்டம் காரணமாக, நகரின் மின்ரயில்களின் இயக்கங்களும் பெருமளவில் பாதிப்படைந்தன . போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் நகரமக்கள் இன்று காலை பெரும் அவதிக்குள்ளாகினர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரிஸாவின் சுந்தர்கார்ஹ் மாவட்டத்தில் உள்ள 2 இரயில் நிலையங்கள் மீது மாவோயிஸ்டுகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிஸ்ரா காவல்நிலைய ஆ‌ய்வாள‌ர் மொஹந்தி கூறுகையில், ரூர்கேலாவில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பலுலடா இர‌யில் நிலையத்தின் மீது இன்று அதிகாலை 60 மாவோயிஸ்டுகள் கொண்ட கும்பல் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

இதில் இரயில் நிலையக் கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்து விட்டதாகக் கூறினார். இதன் காரணமாக ஹௌராமும்பை இரயில் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல் ரூர்கேலாவில் இருந்து 30 கி.மீ தொலைவில், ரூர்கேலாபாராசுவான் வழித்தடத்தில் அமைந்துள்ள சாந்திபோஷ் இரயில் நிலையத்தின் மீது 50 பேர் அடங்கிய மாவோயிஸ்டுகள் குழு தாக்கியுள்ளது.

அப்போது பணியில் இருந்த இரயில் நிலைய அதிகாரி எஸ்.கே.சிங், துணை அதிகாரி சமீர் முகர்ஜி ஆகியோரையும் காணவில்லை என்பதால் மாவோயிஸ்டுகள் அவர்களை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உ‌ச்சநீ‌திம‌ன்ற கரு‌த்தை ஏ‌ற்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் மா‌ர்‌ச் 2ஆ‌ம் தே‌திநீ‌திம‌ன்ற‌ங்களு‌க்கு செ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்
இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு அற‌ப்போ‌ர் எ‌ன்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் தொட‌ங்‌கிபிறகு அ‌ந்தநீ‌திம‌ன்ற‌த்து‌க்கு‌ள் சு‌ப்‌பிரம‌ணியசா‌மிமீது வ‌ழக்க‌றிஞ‌ர்க‌ள் மு‌ட்டைவீ‌‌சியதாக வழ‌க்கு . அ‌ந்த வழ‌க்‌கி‌ன்வி‌ஸ்வரூபமாக காவ‌‌ல்துறை, வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் மோத‌ல் எ‌ன்று வ‌ன்முறைக‌ள் நடைபெ‌ற்று இறு‌தியாக உ‌ச்சநீ‌திம‌ன்ற‌ம் வரைபிர‌ச்சனை செ‌ன்று‌ள்ளது.

‌தி .மு.. ஆ‌ட்‌சியை கலை‌க்க வே‌ண்டு‌ம் என‌்று ஒரு கோ‌ரி‌க்கை. அதை உ‌ச்சநீ‌திம‌ன்ற‌ம் உத‌‌றி த‌ள்‌‌ளி‌வி‌ட்டது. ‌சில கா‌வ‌ல்துறை அ‌திகா‌ரிகளை உ‌ச்சநீ‌திம‌‌ன்ற உ‌த்தர‌வுபடி இ‌ந்த அரசு செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வேறு ஊ‌ர்களு‌க்கு மா‌ற்‌றியா‌கி‌வி‌‌ட்டது . இ‌ன்னு‌ம் எ‌ன்ன?

உ‌ச்சநீ‌‌திம‌ன்ற ஓ‌ய்வு பெ‌ற்றநீ‌திப‌தி ஸ்ரீகிரு‌ஷ்ணா க‌மிஷனை உ‌ச்சநீ‌திம‌ன்ற‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது. அ‌ந்த க‌மிஷ‌னி‌ன் அ‌றிவுரையை எ‌தி‌ர்பா‌ர்‌த்து அரசு கா‌த்‌‌திரு‌க்‌கிறது. வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ம‌ட்டு‌ம் அ‌தி‌ல் பொறுமை கா‌ட்டலாகாதா? கு‌றி‌ப்‌பி‌ட‌ப்படு‌ம் இழ‌ப்‌பீடு தருவத‌ற்கு‌ம் இருசாராரு‌ம் பெறுவத‌ற்கு‌ம் அரசு தொகையு‌ம் ஒது‌க்கு‌கிறது.

உ‌ச்சநீ‌திம‌ன்ற கரு‌த்தை ஏ‌ற்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் அனைவரு‌ம் மா‌ர்‌ச் 2ஆ‌ம் தே‌திநீ‌திம‌ன்ற‌ங்களு‌க்கு செ‌ல்வதுதானே முறையாகு‌ம். இ‌ல்லையே‌ல், இது இல‌ங்கை த‌மிழ‌ர்பிர‌ச்சனை‌க்கான போரா‌ட்டம‌ல்ல, இ‌‌ங்கு‌ள்ளதி.மு.. ஆ‌ட்‌சி‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் எ‌ன்று தானே உறு‌தி‌ப்படு‌த்த வே‌ண்டி‌யி‌ரு‌க்‌கிறது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வழ‌க்க‌றிஞ‌ர்களுக்குள் நக்சலைட், விடுதலைச் சிறுத்தைகள், விடுதலைப்புலிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 5 சதவீதம் பேர் ஊடுருவி உள்ளனர் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, அவர்களை வழ‌க்க‌றிஞ‌ர்களாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கையில், சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நடந்த சம்பவத்தை உ‌ச்சநீ‌திம‌ன்ற‌ம் விசாரித்து, காவ‌ல்துறை‌யின‌ர் நடத்திய தடியடி பிரயோகத்துக்கும், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மட்டும் வருத்தம் தெரிவித்தது.

கடந்த 17ஆ‌ம் தேதிநீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு‌ள் என் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தில், 20 வழ‌க்க‌றிஞ‌ர்களின் அநாகரீக நடவடிக்கை பற்றி உய‌ர்நீ‌திம‌ன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.சந்துரு ஆகியோர் எழுத்துபூர்வமாக பதிவு செய்துள்ளனர் என்பதையும் நினைவுபடுத்துகிறேன். இந்த சம்பவத்தை சி.பி. . விசாரிக்க உள்ளது. உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கை சி.பி.. விசாரிக்கும்.

சென்னையில் நடக்கும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா விசாரணையின் போது, வழ‌க்க‌றிஞ‌ர்களின் நடவடிக்கை பற்றி புகார் கொடுப்பதற்கு காவ‌ல்துறைக்கும் உரிமை உள்ளது. காவ‌ல்துறை அதிகாரி ஒருவரின் உடைகளை களைந்தது, பெண் காவல‌ரிட‌ம் தவறாக நடந்தது பற்றியும் காவ‌ல்துறை‌யின‌ர் புகார் தெரிவிக்கலாம்.

உண்மை நிலவரம் என்னவென்றால் , வழ‌க்க‌றிஞ‌ர்களுக்குள் நக்சலைட், விடுதலைச் சிறுத்தைகள், விடுதலைப்புலிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 5 சதவீதம் பேர் ஊடுருவி உள்ளனர். இப்படிப்பட்டவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி, அவர்களை வழ‌க்க‌றிஞ‌ர்களாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும். ஜனநாயகத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்பித்து ஓடவிடக் கூடாது எ‌ன்று சு‌ப்‌பிரம‌ணியசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
செ‌ன்னை‌யி‌ல் கட‌ந்த 19ஆ‌ம் தே‌தி நட‌ந்த மோ‌த‌ல் கு‌றி‌த்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா இ‌‌ன்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளிட‌ம்விசாரணை நட‌த்‌தினா‌ர் . அ‌ப்போது உட‌லி‌ல் ஏ‌ற்ப‌ட்ட காய‌ங்களை கா‌ட்டிநீ‌திப‌தி‌யிட‌ம் வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ள் வா‌க்குமூல‌ம் கொடு‌த்தன‌ர்.

செ‌ன்னை‌ உய‌ர்நீ‌திம‌ன்ற வளாக‌த்‌தி‌ல் கட‌ந்த 19ஆ‌ம் தே‌தி வழ‌க்க‌றிஞ‌ர்களுக்கும், காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம் இடையே பய‌ங்கர மோத‌ல் ஏ‌ற்ப‌ட்டது. இந்த மோதல் தொடர்பாக உ‌ச்சநீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்தநீதிபதிகள், சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நடந்த மோதல் சம்பவம் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உ‌ச்சநீ‌திம‌ன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டனர். விசாரணை குழு 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று‌ம் கூ‌றினர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா நே‌ற்‌றிரவு சென்னை வ‌ந்தா‌ர். அவர் விசாரணை நடத்துவதற்கு வசதியாக, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு `ஜூடிசியல் அகாடமிஅரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

அங்கு இரு தரப்பினரிடமும் இ‌‌ன்று விசாரணை நடத்‌தினா‌ர். முதலில் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளிடம் விசாரணை நடந்தது. வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ள் சங்க நிர்வாகிகளும், தாக்குதலில் காயம் அடைந்த வழ‌க்க‌றிஞ‌ர்களும் நேரில் சென்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் புகார் தெரிவித்தனர்.

19ஆ‌ம் தேதி நடந்த சம்பவம் பற்றி மட்டுமே விசாரணை நடந்தது. வழ‌க்க‌றிஞ‌ர்கள் ஒவ்வொருவராக சென்று நீதிபதியிடம் வாய்மொழி வாக்குமூலம் அளித்தனர். புகார் மனுவோ, ஆதாரங்களோ கேட்கப்படவில்லை.

இன்றும் நாளையும் விசாரணையை முடித்துக்கொண்டு அவர் நாளை இரவு டெல்லி திரும்புகிறார். அங்கு அவர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி உட்பட 9 பேர் மீது ஊழல் பிரிவின் கீழ் வழக்கு தொடருமாறு ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நீர்ப்பாசனத்துறையில் ஊழல் நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்தது . இதுதொடர்பாக ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், ராஜசேகரரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்படுவது குறித்து காங்கிரஸ் கட்சி பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதையடுத்து, நிதி பொறுப்பை வகிக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரிசர்வ் வங்கி கவர்னரை அவசரமாக சந்திக்க இருக்கிறார்.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 8.9 சதவிகிதமாகவும், நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் 7.6 சதவிகிதமாகவும் இருந்த வளர்ச்சி விகிதம், தற்போது வெகுவாக சரிவடைந்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது . இதனை சரிசெய்வது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவை, அமைச்சர் பிரணாப்முகர்ஜி இன்று அவசரமாக சந்திக்க இருப்பதாகத் தெரிகிறது. அவருடன், திட்டக்குழு துணைத்தலைவர் மான்டெக்சிங் அலுவாலியாவும் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!
மும்பையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் கடல் வழியாக சென்றதற்கான ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான் திடீரென்று அறிவித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .

கடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பல்வேறு மறுப்புகளைத் தெரிவித்து, பின்னர் ஒப்புக்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடல் வழியாக தீவிரவாதிகள் மும்பை சென்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் கடற்படை தளபதி நோமன் பஷீர் நேற்று தெரிவித்தார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் .சிதம்பரம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பாகிஸ்தான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என்றும், இதனடிப்படையில், பாகிஸ்தான் உரிய விசாரணை நடத்தி மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளைத் தண்டிக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். கடல் மார்க்கமாகவே தீவிரவாதிகள் மும்பை வந்து தாக்குதல் நடத்தியது விசாரணையில் உறுதிபடத் தெரியவந்துள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
அல் கொய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதியுதவியை அமெரிக்கா வழங்கக்கூடாது என்று இந்தியா கூறியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் எல்லைப்பகுதிகளில் செயல்பட்டுவரும் அல்கொய்தா தீவிரவாதிகளை அழிப்பதற்காக, பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதி வழங்கக் கோரும் மசோதாவை, அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆனந்த் சர்மா, பாகிஸ்தானுக்கு எந்தவொரு நாடும் நிதி உட்பட எந்த உதவியையும் வழங்கக்கூடாது என்று கூறினார். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கினால், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அந்நாடு, அதனை ஒடுக்க எந்த முயற்சியும் எடுக்காது என்றும் அவர் கூறினார். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இந்தியாவிற்கு மட்டுமன்றி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிற்கும் இருப்பதாகவும் ஆனந்த் சர்மா எச்சரித்தார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
வங்கதேசத்தில் உருவான கலகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மேலும் வன்முறைக்கு இடமளிக்காமல் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்களின் போராட்டதைக் கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக .நா வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறைக்கு வித்திட்டவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள .நா. பொதுச் செயலர் பான்கிமூன், கலகத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்கள், உறவினர்கள் மற்றும் வங்கதேச மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

இதேபோல் எல்லைப் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகள், ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசுக்கு உதவத் தயார் என அறிவித்துள்ளன.

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள பில்கானாவில் உள்ள வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்தில் உள்ள வீரர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதனன்று கலகத்தை துவங்கினர்.

அன்றைய தினமே பிரதமர் ஷேக் ஹசீனா எல்லைப் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதுடன் , கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலிப்பதாக கூறினார். அதற்காக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கலகத்தை கைவிட்டு சரணடைய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை ஏற்க மறுத்த ஒரு சில எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து 2ம் நாளாக வியாழனன்றும் கலகத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பிற பகுதிகளுக்கும் கலகம் பரவியதாகவும் செய்திகள் வெளியாகின.

கடந்த புதன், வியாழன் ஆகிய 2 தினங்களில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் ஷகீல் அகமதுவும் உயிரிழந்துள்ளார் எனத் கூறப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வங்கதேச எல்லைக்காவல் படையினரால் நடத்தப்பட்ட கலவரங்களில் கொல்லப்பட்ட 58 இராணுவ அதிகாரிகளின் சடலங்களைக் கொண்ட மனிதப் புதைகுழியை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
டாக்காவில் உள்ள எல்லைக்காவல் படையின் தலைமை முகாமின் வளாகத்துக்குள் இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ஐம்பதுக்கும் அதிகமான இராணுவ அதிகாரிகளைக் காணவில்லை என்று தேடப்படுகிறது.
கலகத்தை நிறுத்தியோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு, இந்தக்கொலைகளை செய்தவர்களுக்கு பொருந்தாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
சர்வதேச சந்தையில் இவ்வாண்டில் அரிசியின் விலை குறைவடையுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. விளைச்சல் கூடுதலாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது .
2008 இல் அரிசியின் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், சர்வதேச பொருளாதார வீழ்ச்சி காரணமாக சில நாடுகளில் விலை குறையாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் கடந்த ஆண்டு மசகு எண்ணெய் விலை மற்றும் உரத்தின் விலை உயர்ந்த போதிலும அதிக அளவில் அரிசி பயிர்ச்செய்கைக்கு அரசு ஊக்குவித்ததால் விளைச்சல் அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அனைத்துக்கும் மேலாக சாதகமான இயற்கை சூழல் நிலவியதும் விளைச்சல் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.
ஏழைகள் பாதிக்கப்படாமல் இருக்க விளைச்சலைக்கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்து விளைச்சல் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. அரிசி உற்பத்தியை அதிகரித்து அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை கடந்த ஆண்டு அரசு உறுதி செய்துள்ளது. இருப்பினும் 2009 ஆம் ஆண்டில் அரிசி விலை குறைந்தாலும் பொருளாதார தேக்கநிலை காரணமாக மக்கள் அதிக நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது .
எனவே இந்த விடயத்தில் அந்தந்த அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து அரிசியின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு அது அனைத்துத் தரப்பினருக்கும் கிடைப்பதற்கு உரிய வழியை செய்யவேண்டும் எனவும் .நா. வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நெல் உற்பத்தி 68 கோடி தொன்னாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 3.5 சதவீதம் கூடுதலாகும். உலகம் முழுவதும் 250 கோடிமக்கள் அரிசியைத்தான் பிரதான உணவாக உட்கொள்கின்றனர். பயிர்ச்செய்கை பரப்பளவு 2.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது . கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அரிசியின் விலை 80 சதவீதம் அதிகரித்ததாகவும் .நா. தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!
சோமாலியத் தலைநகரில் அரச படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட மேலும் அதிகளவானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆபிரிக்க ஒன்றிய அமைதிப் படைகளின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இரு நாட்களின் பின்பே இம் மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன.
இத் தாக்குதலுக்கு அல் ஷபாப் என்னும் தீவிரவாதக் குழு உரிமை கோரியுள்ளது .
இதேவேளை, அல்ஹைடாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பாக அல் ஷபாப்பை அமெரிக்கா கருதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நகரின் வெவ்வேறுபட்ட பகுதிகளிலிருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மொஹாடிசுவின் அவசர சேவைப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட காயமடைந்த 78 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் பெரும்பாலானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரச படைகளும் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் ஆபிரிக்க ஒன்றிய அமைதிப் படைகளும் தங்கியிருந்த இராணுவ முகாமொன்றின் மீது இஸ்லாமிய போராளிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன.
இரு தரப்பினரும் பரஸ்பரம் மோட்டார் தாக்குதல்களையும் துப்பாக்கிப் பிரயோகங்களையும் மேற்கொண்டதாக நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
!!!!!!!!!!!!!
நல்லிணக்கத்திற்கான சகாப்தமொன்றுக்குள் தாம் நுழைந்திருப்பதாக பாலஸ்தீனத்தின் எதிர்க் குழுக்களான ஹமாஸ் மற்றும் பதாஹ் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுகளைத் தொடர்ந்தே இவ்அறிவிப்பு வெளியாகியுள்ளது .ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தல் மற்றும் தேர்தல்களை நடத்துதல் போன்ற விடயங்களை ஆராய்வதற்கான சபையொன்றை அமைப்பதற்கு இவ்விரு அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஏனைய பாலஸ்தீனக் குழுக்களின் பிரதிநிதிகளும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சபை மார்ச் இறுதிக்குள் தமது நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருமென பதாஹ்வின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தம்மிடமிருக்கும் எதிர்க்குழுக்களின் கைதிகளை இரு தரப்பும் பரஸ்பரமும் விடுதலை செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மற்றொரு நல்லிணக்க நடவடிக்கையாக ஊடகங்களில் ஒருதரப்பு மற்றொரு தரப்பை விமர்சிப்பதை நிறுத்துவதற்கும் இரு அமைப்புகளும் இணங்கியுள்ளன.
பாலஸ்தீன குழுக்களினால் உருவாக்கப்படும் புதிய சபையானது பதாஹ்வின் கட்டுபாட்டிலுள்ள பாலஸ்தீன விடுதலை அமைப்புக்குள் ஹாமாஸை உள்வாங்குவது, பாதுகாப்பு சேவைகளை சீர்திருத்துவது தொடர்பில் ஆராயவுள்ளது.
எகிப்தின் புலனாய்வுத்துறை அதிகாரி ஓமர் சுலைமானின் அலுவலகத்திலேயே இப்பேச்சுகள் நடைபெற்றுள்ளன .
இந்நிலையில் பாலஸ்தீன பேச்சுவார்த்தைக் குழு மார்ச் 5 இல் மீண்டும் சந்திக்கவுள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!
காதல் தேவதையென அழைக்கப்படும் வெள்ளிக்கிரகத்தையும் (சுக்கிரன்) நிலவு தேவதை என வர்ணிக்கப்படும் சந்திரனையும் இன்று சனிக்கிழமை இரவு வானத்தில் ஒன்றாகப் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சூரியன் அஸ்தமனமாகும் போது வானத்தில் தென்மேற்கு பகுதியில் சந்திரன் வெள்ளியுடன் ( வீனஸ்) ஒன்றாக இணைவதை பார்க்க முடியும். பிரகாசமான கிரகங்களான இவை இரண்டும் ஒன்று சேரும். இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கமுடியும் என்று பி .ரி. செய்திச்சேவை நேற்று தெரிவித்தது. நெருக்கமாக இந்த இரு கிரகங்களும் ஒன்று சேர்வதால் வானத்தில் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருக்கும் என்று புதுடில்லியில் உள்ள நேரு பிளநெட்ரேரியம் பணிப்பாளர் என். இரட்ணசிறி பி.ரி. க்கு கூறியுள்ளார். வெள்ளியின் சரியான அமைவிடத்தை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக செயலமர்வொன்றை பிளனட் நெட்ரேரியம் நடத்தியது.
இரவு வேளையில் வானத்தில் பிரகாசமான இந்த கிரகங்களையும் நகரத்தின் மின்னொளியிலும் ஏன் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டாலும் கூட பார்க்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானில் இடம் பெறும் இந்த நிகழ்வை உலகின் சகல பகுதிகளிலும் பார்க்க முடியும் . பிரகாசமான மின் விளக்குகள் ஒளிவிடும் நகரங்களிலிருந்தும் இதனைக் காணமுடியும் .
கருமுகில், நள்ளிரவு சூரியன் என்பனவே இதனைப்பார்ப்பதற்கு இடையூறாக அமையும். இரு கிரகங்கள் ஒன்று சேரும் நிகழ்வு என்று வானசாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.