ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூம் ரிலையன்ஸ் பெட்ரோலியமும் இணைகின்றன

மும்பை : சந்தை முதலீட்டு அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டும் ( ஆர் ஐ எல் ) அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்டும் ஒரே நிறுவனமாக இணைக்கப்படுகின்றன.

இந்த தகவல் நேற்று மும்பை பங்கு சந்தைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு நிறுவனங்களின் போர்டும் தனித்தனியாக மார்ச் 2 ம் தேதி அன்று கூடி இது குறித்து முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு சொந்தமாக, ரிலையன்ஸ் பெட்ரோலியம் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்று இருந்தது. 2001ல் உற்பத்தியை துவக்கிய அந்த நிறுவனம், 2002 இலேயே ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் இணைந்து விட்டது. இப்போதிருக்கும் இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து விட்டால் பின்னர் அந்த நிறுவனத்தில் மொத்த சந்தை முதலீடு ( மார்க்கெட் கேபிடலைஷேசன் ) ரூ.2,33,000 கோடியாக <உயர்ந்து விடும். அப்போது அது, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரி ய நிறுவனமான என்.டி.பி.சி.,யின் சந்தை முதலீட்டை விட 35 சதவீதம் அதிக சந்தை முதலீட்டை கொண்டதாக இருக்கும். இரண்டும் ஒன்றாக இணைந்து விட்டால், உலகின் அதிகம் லாபம் சம்பாதிக்கும் 50 நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டும் வந்து விடும்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.