அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமென இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும் என்பதே புதுடெல்லி அரசாங்கத்தின் நிலைப்பாடு என இந்திய
மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் இதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட இந்திய மத்திய அரசு பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.