பிரான்சில் ஈபிள் கோபுரம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

பிரான்சின் உலகப் புகழ் வாய்ந்த பகுதியான ஈபிள் கோபுரம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 6 மணிவரை சிறிலங்கா அரசின் இனப்படுகொலையை அடையாளப்படுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் வெளிநாட்டவர்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈபிள் கோபுரம் முன்பாக அங்கு திரண்ட தமிழர்கள் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் உடைகளை அணிந்த வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பரப்புரைப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் விடுதலைப்புலிகளே எமது ஏகப்பிரதிநிதிகள். அவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துவதனூடாகவே இனப்படுகொலையை நிறுத்த முடியும். என்ற கருத்துக்களை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளனர்.

இப்பகுதியைச் சுற்றிப் பல்வேறு இடங்களிலும் மாறிமாறி கவனயீர்ப்புப் பரப்புரையினை மேற்கொண்ட இந்நூற்றுக்கணக்கிலான தமிழர்களுக்கும் பிரெஞ்சுக் காவல்துறையினர் தமது கணிசமான பாதுகாப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.