கிளிநொச்சி வதைமுகாமில் வைத்து ஆண்கள், பெண்களை படையினர் கொடுமையான சித்திரவதை

வன்னியில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வருகின்ற தமிழ் மக்களில் இளைஞர், யுவதிகளை இலங்கை இராணுவம் வேறாகத் தெரிவுசெய்து கிளிநொச்சி வைத்தியசாலையில் நிறுவி உள்ள வதைமுகாமில் வைத்து பெண்களை துஸ்பிரயோகப்படுத்தியும், ஆண்களை கொடுமையான சித்திரவதைகளுக்குட்படுத்தியும் வருகின்றனர்.

முல்லைத்தீவில் இருந்து படையினரின கட்டுப்பாடடுப் பிரதேசத்துக்குள் வந்த தமிழ் பொதுமக்களில் ஆண்கள், பெண்கள் என வேறுபடுத்தி அதில் இளைஞர்களையும் , யுவதிகளையும் கிளிநொச்சி வைத்தியசாலையில் இயங்கும் இலங்கைப்படையினரின் வதைமுகாமிற்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு ஆண்களை தமது பணிகளைச்செய்ய துன்புறுத்துவதோடு சித்திரவதைப்படுத்தி கொலையும் செய்து வருன்றனர். பெண்கள் கட்டடத்தின் மேல்பகுதியில் வைத்து இரவுநேரங்களில் தற்காலிக விடுமுறையில் உள்ள படைவீரர்களினால் கற்பழிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் இரவு நேரங்களில் கற்பழிக்கப்படுகின்ற பெண்களின் கூக்குரல் சத்தம் கேட்டுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மற்றும் விசுவமடு இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களால் இலங்கை இராணுவத்தினரின் திரைமறைவிலான இந்தக்கொடுமைகளால் தமது பல பிள்ளைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பிள்ளைகள் தொடர்பாக பெற்றோர் இராணுவத்தினரை வினவியபோதும் அவர்களுக்கு எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

வவுனியா இடைத்தங்கல் முகாமிற்கு ஐ.நா. பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் விஜயம் செய்தபோது தாய் ஒருவர் தனது மகனை இராணுவத்தினர் கடத்திச் சென்றுள்ளதாகத் தமிழில் தெரிவித்தார். ஆனால் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் விடுதலைப் புலிளே தமது மகனை கடத்திச் சென்றுள்ளனர் என அத்தாய் தெரிவிப்பதாக கோல்ம்ஸிடம் மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வன்னிப் பிரதேசங்ளில் அகப்படுககின்ற பொதுமக்கள் தொடர்பில் எந்தத்தடையும் இன்றி இராணுவத்தினர் தமது விருப்பத்திற்கேற்ப செயற்படும் வகையில் இராணுவத் தலைமைகளினால் இராணுவத்தினருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ உயர்மட்ட அதிகாரி ஒருவரிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.