பிரித்தானியா மில்ரன்கீன்ஸ் தமிழர் நலன்புரி அமைப்பினர் ஆர்ப்பாட்ட பேரணி

பிரித்தானியா மில்ரன்கீன்ஸ் தமிழர் நலன்புரியமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு ஆரம்பமானது

குறித்த நேரத்திற்கே மக்கள் அனைவரும் மில்ரன்கீன்ஸ் புகையிரத நிலையத்திற்கு முன்னால் கூடி அங்கிருந்து மத்திய வர்த்தகக் கட்டிடம் முன்பாக கூட்டம் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்ட அடத்திற்கு ஊர்வலமாக கோசங்கள் எழுப்பியவாறு மக்கள் உணர்வெழுச்சியுடன் சென்றனர்.

அங்கு குறித்த அளவிற்கு அதிகமாக மக்கள் வந்தடைந்ததன் காரனமாக காவல் துறையினர் அந்த இடத்தில் அனுமதி மறுத்து பின்னர் உடனடியாகவே புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள வெளியை ஒழுங்கு பண்ணினர்.

அதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் ஊர்வலமாகவே புகையிரத நிலையம் முன்பாக கூடினர். சுமார் 1500க்கும் அதிகமான மக்கள் முன்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பிலிப் ஸ்ராக்கி அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் தனது ஆதரவு தொடர்ந்து தமிழ் மக்களுக்கு இருக்கும் எனவும் அத்துடன் தனது அரசாங்கத்திற்கு அதனை அறிவிப்பதாகவும் உடனடியாக அங்கு போர்நிறுத்தம் வேண்டும் எனவும் வலியுறுத்திக் கூறினார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.