உக்கிரமடைகின்றது வன்னிப் போர்! 3 நாட்களில் 900 படையினர் பலி: முன்னேற முடியாமல் சிங்களப் படைகள் முடக்கம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் முன்நகர்வுப் படையெடுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை-மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ‘புதினம்’ செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் கடந்த ஆறு நாட்களாக தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சிறிலங்கா படையினரின் 4 டிவிசன் படையினர் பெருமளவிலான சூட்டு வலுக்களை பாவித்து முன்நகர்வுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் சிறிலங்கா படையினர் தரப்பில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.