ஐக்கிய முற்போக்கு அரசு என்னை சிறைக்கு அனுப்ப திட்டமிட்டு சதி செய்கிறது : முலாயம் குற்றச்சாட்டு

எடாவா : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்னை சிறைக்கு அனுப்ப தீவிரமாக முயற்சி செய்கிறது என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். முலாயம் கூறியதாவது :

இந்தியா – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்‌தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியபோது , எங்கள் கட்சி தான் ஆதரவு கரம் நீட்டியது . ஆனால் இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு , என்னை சிறையில் தள்ள தீவிரமாக திட்டம் தீட்டி வருகிறது. மத்திய அரசின் கைப்பாவையாக விளங்கும் சி.பி.ஐ., இதற்கு உதவுகிறது . சி.பி.ஐ., எனக்கு எதிராக போலி ஆவணங்களை சேகரித்து வருகிறது . இவ்வாறு முலாயம் குற்றம் சாட்டியுள்ளார். இதனை கண்டுபிடித்த கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் , சி.பி.ஐ., யின் இந்த நடவடிக்கையை கண்டுபிடித்து ‌குறிப்பிட்டார் . எல்லாம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது . மத்திய அரசின் வெளியுறவு கொள்கைகள் இந்தியாவை உலக அரங்கில் தனித்து நிறுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். ஏற்கனவே காங்., சமாஜ்வாடி கட்சிக்கு இடையே சர்ச்சை நடந்து வரும் நிலையில், முலாயமின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.