‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (27.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள தெமட்டகொட குற்றப்புலனாய்வுத்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளஉதயன்மற்றும்சுடொரொளிபத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலையிலும் காலிலும் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


வெள்ளை வானில் கடத்திய ஆயுததாரிகள் வித்தியாதரனை கடுமையாக தாக்கி விட்டு தெமட்டகொடவில் வீதியோரத்தில் வானில் இருந்து வெளியே தள்ளி விட்டு சென்றதாகவும் பின்னர் தெமட்டகொட காவல்துறையினர் அவரை கைது செய்து குற்றப்புலனாய்வு தலைமை அலுவலகத்தில் தடுத்து வைத்திருக்கின்றனர் என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, வித்தியாதரனின் மனைவி கலா வித்தியாதரனும் அவரது மூன்று பிள்ளைகளும் தெமட்டகொட குற்றப்புலனாய்வு அலுவலகத்திற்கு நேற்று வியாழக்கிழமை மாலை சென்று பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .
அவ்வாறு பார்வையிடுவதற்கான அனுமதியை காவல்துறையினர் வழங்கியதாக வித்தியாதரனின் மைத்துனரும் உதயன்மற்றும்சுடொரொளிபத்திரிகைகளின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான .சரவணபவன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதேவேளை, கல்கிசையில் உள்ளமகிந்தமலர்ச்சாலையில் வித்தியாதரன் கடத்தப்பட்டமை தொடர்பாகவும் மற்றும் வேறு சில விடயங்கள் குறித்தும் கல்கிசை இரகசிய காவல்துறையினர் நேற்று பிற்பகல் தன்னிடம் விசாரணை நடத்தியதாக் சரவணபவன் மேலும் கூறினார்.
இதேவேளை, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் வித்தியாதரனை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுககு அழுத்தம் கொடுத்து வருவதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரன் நேற்று வியாழக்கிழமை காலை கல்கிசையிலுள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைத்து பொலிஸ் மற்றும் சிவில் உடையில் வந்த சிலரால் பலவந்தமாக வெள்ளை வானில் ஏற்றி கூட்டிச்சென்ற முறை குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

விசாரணைகளின் பொருட்டு பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தேவைப்படும் பட்சத்திலோ அவரோ, அன்றேல் எந்தவொரு பிரஜையோ எதற்காக அவர் கைதுசெய்யப்படுகின்றார் என்று கூறப்படுவதுடன், அவரை கைது செய்யும் முன் நீதிமன்ற அனுமதியை காட்டி அமைதியான முறையில் கைதுசெய்து அழைத்துச் செல்ல முடியும். எனினும், இங்கு கடைப்பிடிக்கப்பட்டவை மிகவும் வருந்தத்தக்கதாகும். திரு . வித்தியாதரன் அழைத்துச் செல்லப்பட்டமை சரியான காரணத்திற்காகவா, அன்றேல் அவ்வாறு இல்லாமலா என்பது குறித்து எமக்குத் தெரியாது. அது தொடர்பான பூரண அறிவின்றி நாம் விமர்சிக்க முடியாது. எனினும், உண்மை யாதெனில் பொலிஸ் பேச்சாளர் முதலில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில், அவர் ஆயுதபாணிகளின் குழுவொன்றினால் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். எனினும், சிறிது நேரத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இதிலிருந்து இடது கை செய்வதை வலது கை அறியாத நிலையில் பொலிஸார் உள்ளனரா? என்ற தோற்றப்பாட்டை காட்டுகின்றது . கண்ணால் கண்ட சாட்சிகளின் படி குறித்த மலர்ச்சாலையில் சுடரொளி பிரதம ஆசிரியர் வித்தியாதரன், பத்திரிகை வெளியீட்டாளர் சகிதம் அவரது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் ஈடுபட்டிருந்த சமயம் பொலிஸ் சீருடையில் வந்த மூவர் குறித்த பிரதம ஆசிரியரை அங்கிருந்து கூட்டிச்செல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது, வித்தியாதரனும், மரணச் சடங்கில் கலந்துகொண்ட சிலரும் அதனைத் தடுக்க முற்பட்ட வேளை, சிவில் உடையிலிருந்த மேலும் மூவர் வித்தியாதரனை பலவந்தமாக வெள்ளை வானில் தூக்கிப் போட்டுச் சென்றுள்ளனர். இந்த விதமாக ஒருவரைக் கைதுசெய்வதையும், இதன் பொருட்டு வெள்ளை வானை பயன்படுத்துவதையும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வெகுவாகக் கண்டிக்கின்றது. இது மிகவும் கவலைக்குரியதாகும்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தற்காலிக யுத்த நிறுத்தமொன்றின் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டாதென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக யுத்த நிறுத்தமொன்றின் மூலம் வன்னி பொதுமக்களை மீட்க முடியும் என்ற கருத்து யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறுத்தமொன்று மேற்கொள்ளப்பட்டதால் அதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளே நன்மையடைவர் என அவர் தெரிவித்துள்ளார்.
சில வெளிநாட்டு சக்திகள் விடுதலைப் புலிகள் இறுதி மூச்சை எட்டியிருக்க நிலையில் அவர்களுக்கு ஒட்சிசன் வழங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் உள்ள பொதுமக்களது பாதுகாப்பை காரணம் காட்டி யுத்த நடவடிக்கைகள் முடக்கப்படக் கூடாதென ஆளும் கூட்டணி கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணி
கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்களுக்கு இழப்புக்கள் நேரிடும் என்ற காரணத்திற்காக விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படக் கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களுடன் ஊடுறுவினால் அதன் மூலம் படையினருக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்த வெற்றிகளை அடைய வேண்டுமாயின் சில தியாகங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பை காரணம் காட்டி படையினரின் வெற்றியை
தடை செய்யக் கூடாது எனவும் கட்சி தெரிவித்துள்ளது.
வன்னிப் பகுதியில் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு விடுதலைப் புலிகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சார்க் வலய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் 31 ஆவது மாநாடு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆரம்பமாகின்றது. சார்க் வலயத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

சார்க் வலய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்றுமுன்தினம் இலங்கை வந்தடைந்தனர். அத்துடன் பூட்டானின் வெளிவிவகார அமைச்சர் நேற்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார். எனினும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இந்திய மாநில அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை , இம்முறை மாநாட்டில் வலய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார, அரசியல் மற்றும் ஏனைய தொடர்புகள் குறித்து விரிவாக சார்க் நாடுகளிடையே கலந்துரையாடப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். தற்போதைய சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் தலைவராக அமைச்சர் போகொல்லாகம செயற்படுகின்றார். மாநாட்டின் அமர்வு நாளைய தினமும் நடைபெறும். இதேவேளை சார்க் வலய நாடுகளின் வெளிவிவகார செயலாளர்களின் மாநாடு கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற மனிதாபிமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பிரதிச்செயலர் ஜோன் ஹோம்ஸ் பாராட்டியுள்ள நிலையில் சர்வதேச நிறுவனங்கள் சில அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றன என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். விடுதலைப்புலிகளை யுத்தத்தின் மூலமாக தோல்வியடையச்செய்வதற்கான இறுதி நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன எனினும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில் சர்வதேச சார்ந்த நிறுவனங்கள் சில அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றன .

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பிரதிச்செயலாளர் ஜோன்ஸ் ஹோம்ஸிடம் விரிவாக எடுத்துரைத்தோம், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பாராட்டி அவர் அறிக்கையிட்டுள்ளார் எனினும் சர்வதேச நிறுவனங்கள் சில அரசாங்கத்திற்கு எதிராக செயற்படவும் அழுத்தங்களை கொடுக்கவும் முயற்சிக்கின்றன. வடக்கிற்கு தேவையான உணவுப்பொருட்கள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக அனுப்பிவைக்கப்படுகின்றன எனினும் மனிதாபிமான நடவடிக்கைகள் எனும்பெயரில் மனித உரிமை கண்காணிப்பகம் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது. சிவில் சமூகத்தின் மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் மீள் குடியேற்றம் உள்ளிட்ட விடயங்கள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன . இவ்வாறான தொரு நிலையில் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளகின்ற சர்வதேச நிறுவனங்கள் சில புலிகள் இழந்துள்ளதை மீள பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனவோ என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு பயங்கரவாதத்தை ஒழிப்பது இன்றியமையாததாகும் அத்துடன் சிவில் மக்களுக்கான பாதுகாப்பு சர்வதேச சட்டத்திற்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுகின்றது என்றார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தயார் என பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னாட் கோச்சுனர் தெரிவித்துள்ளார்.
வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த நிலவரங்கள் குறித்து பிரான்ஸ் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும், பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க தயார்
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் யுத்த நிலவரம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிடம் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்திய போது பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் பொதுமக்கள் சிக்குண்டு இருப்பதாகவும் , உடனடியாக பொதுமக்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பை கருத்திற் கொண்டு புலிகளுடனான ஆயுத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இடம்பெயர்ந்து வாழும் மக்களை பார்வையிட தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் அனுமதி
மறுக்கப்பட்டுள்ளதென கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் .
வன்னி மக்கள் பற்றியோ அல்லது வவுனியா மற்றும் மன்னார் இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பற்றியோ தகவல்களை அறிந்து கொள்ள தமது கட்சி
உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள்பிரதிநிதிகள் என்ற வகையில் தமது பிரதேச மக்கள் பிரச்சினைகளை நேரில்
கண்டறியும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர், சில அரசாங்க ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி சேவைகள் இரகசிய பொலிஸார்
தம்மிடம் மேற்கொண்ட விசாரணைகளை திரிபு படுத்தி செய்தி வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிக விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
இதனை தேசிய இனப்பிரச்சினை சார்பான ஓர் யுத்தமாக கருதப்பட முடியாதென சுட்டிக்காட்டிய அவர் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் இலங்கை
அரசாங்கம் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க செனட் சபையில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு சமாந்தரமாக இலங்கைத் தூதுவர் இந்த கருத்துக்களை
வெளியிட்டுள்ளார்.
யுத்த முன்நகர்வுகளின் போது பொதுமக்கள் பாதுகாப்பிற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், பெரும்பான்மையான தமிழர்கள் சிங்கள முஸ்லிம் மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாகவும், பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் அனைத்து தமிழ் கட்சிகளது பங்களிப்புடன் நிரந்தரத் தீர்வு குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்போதைக்கு சிறுவர் போராளிகள் எவரும் இல்லை என அதன் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பாக யுனிசெப், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு அதற்கான வேலைத் திட்டமொன்றும் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் இந்த வேலைத் திட்டத்திற்குப் பொறுப்பான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா இது பற்றி தெரிவிக்கையில்,

“எமது அமைப்பிலிருந்த சிறுவர் போராளிகள் சகலரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். இதனை அவர்களுடைய பெற்றோருடன் தொடர்பு கொள்வதன் மூலம் உறுதிப்படுத்த முடியும்என்றார்.

அதே வேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது அமைப்பிலுள்ள ஆயுதங்களைக் கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதன் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானா தெரிவித்தார்.

தமது அமைப்பிலுள்ள உறுப்பினர்களைத் தொழிற் பயிற்சி வழங்கி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மற்றும் இராணுவ சேவைகளில் இணைய விரும்புவோர் அவர்களது தகுதிக்கேற்ப சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ். பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நன்மை கருதி தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கான ஒலிப்பதிவு கலைக்கூடம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஊடகவள நிலைய பணிப்பாளர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.

கலைக்கூடத்தை போஜோ அமைப்பின் ஆலோசகர் கென்றிக் குரூனரும் யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கனும் திறந்து வைத்தனர். தொழில் நுட்பக் கூடத்தை யாழ். பல்கலைக்கழக ஊடகவள நிலையப் பணிப்பாளரும் வாழ்நாள் பேராசிரியருமான பொன். பாலசுந்தரம் பிள்ளை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளின் அதிபர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை விவகாரம் தொடர்பாக .நாவில் செய்தியாளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது எனஇன்னர் சிற்றி பிரஸ்செய்தியாளர் மத்தி யூஸ் ரஸல் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான விளக்கும் செய்தியாளர் மாநாடு நடத்தத் தேவையில்லை என்று அந்நாட்டுக்குச் சென்று திரும்பிய .நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் மூன்று தினங்களுக்கு முன்னர் ரஸலிடம் கூறியிருந்தார்.
பாதுகாப்பு கவுன்ஸிலின் இந்த மாதத்துக்கான தலைவர் யுக்கியோ ரக்காசோவும், இலங்கை விவகாரம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டுக்கான காத்திரமான கோரிக்கை வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
எனினும் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் மாநாடு நடைபெறும் என்று பாதுகாப்புக் கவுன்ஸிலின் ஐந்து நாடுகளில் ஒன்றின் பிரதிநிதி நேற்றுக்காலை தமக்குத் தெரிவித்ததாக மத்தியூஸ் ரஸல் தெரிவித்துள்ளார்.
தமக்கு தகவல் தெரிவித்த பாதுகாப்புசசபை உறுப்பு நாட்டின் பிரதிநிதி, இது விடயம் சம்பந்தமாக இலங்கைக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சமாதானத்தைக் கட்டி எழுப்புவது குறித்து கிரேக்கத்தின் வெளியுறவு அமைச்சர் செய்தியாளருக்கு விவரித்தபின்னர்வேறு விடயங்கள்என்ற தலைப்பின் இலங்கை விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வன்னிப் பிரதேச மக்களது மனிதாபிமான நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்படும் எனத் தெரியவருகிறது.
31 ஆவது சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் பிரணாப்முகர்ஜி கலந்து கொள்ளjh போதிலும், எதிர்வரும் நாட்களில் அவர் இலங்கைக்கு விஜயம்
செய்ய உள்ளதாகவும், இதேவேளை, வன்னி மோதல்கள் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேணன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னி மக்களுக்கு சிகிச்சையளிக்க விசேட இந்திய வைத்திய குழுவினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
மோதல்களில் காயமடையும் பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் இந்த அவசர சிகிச்சைப் பிரிவினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு செல்லவுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது .
மேலும் வடக்கு கிழக்கு அபிவிருத்திப் பணிகளுக்கு உதவியளிக்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது .
!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி மேற்பார்வையாளர் சடலமாக காவல்துறையினரால் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 23ம் திகதி திங்கக்கிழமை இரவு கிழக்கு பல்கலைக்கழகததின் விடுதியினுள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சித்தாண்டி 3ம் குறிச்சியைச் சேர்ந்த 28 அகவையுடைய மாரிமுத்து பிறேமலதா என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் தற்கொலை என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேற்பார்வையாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான அடையாளங்கள் சடலத்தில் காணப்படுவதாகவம் தெரிவிக்கின்றனர். எனும் பல்கலைக்கழக நிர்வாகம் இதுதொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது அசமந்தப் போக்கை கடைப்பித்துவருவதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்தினர்.
இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் கடமையில் இணைந்தள்ளார்.

இதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு தனி காவல்துறை குழு அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்காக நீதிமன்றம் செல்லப்போவதாக சிறிலங்காவின் ஜாதிக ஹெல உறுமயவின் மாகாண சபை உறுப்பினர் எச்சரித்துள்ளார் .
அக்காலப்பகுதியில் ஏற்பட்ட இழப்புக்களை ஆராய்ந்து மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்றையும் நியமிக்கப்படவுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாணசபை வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
1866 தொடக்கம் 1948ம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் இலங்கையிலுள்ள வளங்களைச் சூறையாடியதுடன், சிங்கள மற்றும் இந்துக் கலாச்சாரங்களைப் பின்பற்ற விடாமல் தடுத்து கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டிய அவர் இனங்களுக்கிடையில் பிரச்சினையைத் தோற்றுவித்ததுடன், நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
அண்மையில் கோர்டன் பிரவுண் மற்றும் டேவிட் பிலிபான்ட் ஆகியோரின் கருத்துக்கள் மீண்டும் ஒருமுறை நாட்டை ஆக்கிரமிக்க பல்வேறு வழிகளில் முயற்சிப்பதாக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உல்லாசப்பயணம் மேற்கொண்டு காலிநகரில் தங்கியிருந்த பிரான்ஸைச்சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரைக் காலி பொலிஸார் தேடிவருகின்றனர்.
காலி நகரில் வீடு ஒன்றில் வாடகைக்கு அமர்ந்திருக்கும் இப்பெண் உல்லாசமாக வெளியே போய்வருபவர் என்றும் அந்த வீட்டுக்கு அருகில் உள்ள ஹோட்டலில் உணவை அருந்திவந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
புதன்கிழமை இந்த வீட்டுக்கு வந்த ஒருவர் உட்புகுந்து ஆயுதத்தைக் காண்பித்து சத்தமிடக்கூடாது என்று கூறி அப்பெண்மீது குற்றம் புரிந்ததாக காலிப் பொலிஸ் நிலையத்தில் அவர் முறையிட்டுள்ளார்.
அத்துடன் வந்த நபர் அப்பெண்ணிடமிருந்து 1000 யூரோ நாணயத்தாள்களையும் எடுத்துசென்றுள்ளார். இப்பெண் சில மணி நேரங்களால் வீட்டுக்கு வெளியே வந்து அயலவர்களுக்கு நடந்த சம்பவத்தைக்கூறி காலி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார்.
தற்போது இப்பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புத்த பகவானின் புனித தந்தம் பொதுமக்கள் தரிசிப்பதற்காக காட்சிக்கு வைக்கப்படும் தினங்களில் கண்டி மாநகர பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து மது விற்பனை சாலைகள் மற்றும் இறைச்சிக்காக கால் நடைகள் அறுக்கப்படுவது இறைச்சிவகைகள் விற்பனை செய்யப்படுவது அனைத்தும் நிறுத்தப்படும் என தியவதன நிலமே நிலங்க தேவபண்டார தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக, போலீஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உச்சநீதிமன்றம், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு வழக்கறிஞர்களை பணித்தது . ஆனால், அதனை ஏற்க மறுத்த வழக்கறிஞர்கள், தங்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் , இன்று 5வது நாளாக தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். மேலும், போலீஸ் தடியடியைக் கண்டித்து இன்றைய தினத்தை கறுப்பு தினமாக அவர்கள் அறிவித்துள்ளனர் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தியாவின் தவறான அயலுறவு கொள்கை காரணமாக இலங்கை பிரச்சனையில் தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளது எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி தலைவ‌ர் அத்வானி , விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

புதுடெ‌ல்‌லி‌‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை வலிமையான, பெரும்பான்மை பலம் கொண்ட அரசால் மட்டுமே சமாளிக்க முடியும். கடந்த 1952-ம் ஆண்டு முதல் 2004 வரை 14 பாராளுமன்ற தேர்தலை நான் பார்த்து விட்டேன். முதல் மூன்று தேர்தல்களை பத்திரிகையாளராக சந்தித்தேன். அதன்பிறகு பாராளுமன்றத்தின் அனைத்து கூட்டத்தொடரிலும் பங்கேற்று வருகிறேன்.

ஆனால், எப்போதும் கண்டிராத வகையில் பொருளாதார பிரச்சனை, விவசாயம், பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு , விலைவாசி, பணவீக்கம் போன்றவற்றை நாடு எதிர்நோக்கி உள்ளது. அதற்கு மத்திய அரசின் செயலற்ற போக்கே காரணம். சுயமாக முடிவெடுக்க முடியாமல் இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி அரசின் அதிகாரம் முழுவதும் பிரதமர் இல்லத்தில் இல்லை. சோனியா வசிக்கும் இல்லத்தில்தான் உள்ளது.

இந்தியாவின் தவறான அயலுறவு கொள்கை காரணமாக இலங்கை பிரச்சனையில் தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் கருத்தை இலங்கை ஏற்று மதித்து வந்தது. ஆனால், தற்போது இலங்கையை நிர்ப்பந்தம் செய்ய மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் முடியவில்லை.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். போர் நடைபெறும் பகுதியில் இருந்து அப்பாவி மக்கள் வெளியேற அனுமதிப்பதோடு அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்க செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் எ‌ன்று அ‌த்வா‌னி கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் தமிழினப் படுகொலையை கண்டித்தும், அரசியல் தீர்வு காண .நா. சபை தலையிடக்கோரியும் மாவட்டந்தோறும் உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று தே.மு.‌தி .. தலைவ‌ர் விஜயகாந்த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் இலங்கையில் தமிழினப் படுகொலையை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில், எனது தலைமையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு மாபெரும் கண்டன பேரணியை நாம் நடத்தினோம் .

அதேபோன்று நம்முடைய மனிதாபிமான உணர்வையும், தமிழ் உணர்வையும் காட்டும் வகையில் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மாவட்டந்தோறும் மக்களை திரட்டி கண்டன ஊர்வலம் , ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்கள் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறு ஏற்படாத வகையில் போராட்டங்களை நடத்த கேட்டு கொள்கிறேன்.

மாவட்ட செயலாளர்கள் போராட்டத்திற்கான தேதியும், இடத்தையும் குறிப்பிட்டு காவல்துறையினரின் முன் அனுமதி பெற்று இத்தகைய ஆர்ப்பாட்டங்களை நடத்துவது அவசியம் என்று தெரிவித்து கொள்கிறேன்.என்றுவிஜயகா‌ந்‌த் கேட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி நடத்த காரணமாக இ‌ரு‌ந்த காவ‌ல்துறை அ‌திகா‌ரிகளை உடனடியாக இடமா‌ற்ற‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்ற உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற உ‌த்தர‌வி‌ன் எதிரொலியாக காவ‌ல்துறை இணை ஆணைய‌ர் சந்தீப்ராய் ரத்தோர், துணை ஆணைய‌ர்க‌ள் பிரேம் ஆனந்த் சின்ஹா, சாரங்கன் உள்பட 4 அதிகாரிகளை த‌மிழக அரசு இடமாற்றம் செய்து‌ள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி தாக்குதலை நடத்தியது தொடர்பாக 5 காவ‌ல்துறை உயர‌திகா‌ரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நே‌ற்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ச‌ம்ப‌ந்‌த‌ப்ப‌ட்ட காவ‌ல்துறை அ‌திகா‌ரிகளை இடமாற்றம் செய்து த‌‌மிழக அரசு இ‌ன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!
நா‌ன் ஆட்சிக்கு வந்தால் காவ‌ல‌ர்களை பழிவாங்குவேன்என்று ...‌தி .மு.. பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா பேசியதாக தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா பதில் அளிக்க தா‌க்‌கீது அனுப்ப மதுரை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டுள்ளது .

மதுரை அன்புநகரை சேர்ந்த பி.பாண்டித்துரை எ‌ன்பவ‌ர் மதுரை மாவட்டநீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அ‌ந்த மனு‌வி‌ல், .. .தி.மு. பொது செயலர் ஜெயலலிதா, .தி.மு. பொது செயலர் வைகோ ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ்நாட்டில் சட்டம்ஒழுங்கு சீரழிந்து விட்டதாக பேசி உள்ளனர். மேலும் அவர்கள் காவ‌ல்துறை அதிகாரிகள் சிலர் தி.மு. பிரமுகர்களுக்கு பின்னணியாக இருந்து செயல்படுவதாகவும், அவர்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழிவாங்குவோம் என்றும் பேசி உள்ளனர்.

இவர்களது பேச்சு ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பானதாகும். இவர்களது பேச்சால் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்து வன்முறை ஏற்படும். எனவே ஜெயலலிதா, வைகோ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று மனுவில் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்த மனுவை கட‌ந்த 20.12.2006 அன்று மதுரை ‌‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி செ‌ய்தது. இந்த உத்தரவை எதிர்த்து பாண்டித்துரை, மதுரை உய‌ர்நீ‌திம‌ன்றகிளை‌யி‌ல் அப்பீல் செய்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, எதிர்மனுதாரர்களான ஜெயலலிதா, வைகோ ஆகியோர் பதில் அளிக்க தா‌க்‌கீது அனுப்பநீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது .

இந்த நிலையில் இ‌ந்த வழக்கு நே‌ற்று நீதிபதி .செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ தரப்பில் தா‌க்‌கீது பெறப்பட்ட விடயம்நீ‌திம‌ன்ற அதிகாரிகள் மூலம் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் வைகோவுக்காக வழ‌க்க‌றிஞ‌ர் சுப்பாராஜ் ஆஜராக இருப்பதாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஜெயலலிதாவுக்கு அனு‌ப்ப‌‌ப்ப‌ட்ட தா‌க்‌கீது சேரவில்லை என்ற விடயம் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது . இதை தொடர்ந்து மீண்டும் ஜெயலலிதாவுக்கு தா‌க்‌கீது அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார் .

இது ப‌ற்‌றி தகவலை அறிந்த ...தி.மு. வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் தமிழ்செல்வன், ராமச்சந்திரன், முருகானந்தம் ஆகியோர் ஜெயலலிதாவுக்காக தாங்கள் ஆஜராக இருப்பதாக மனு தாக்கல் செய்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!
வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள், பணிகளை ஒப்பந்தம் செய்வது தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஒபாமா மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத், வெளிநாடுகளுக்குப் பணிகளை அளிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிவிகிதத்தில் மாற்றங்கள் கொண்டுவர அண்மையில் ஒபாமா தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும், எனவே, ஒபாமாவின் இந்த நடவடிக்கையில், தனது எதிர்ப்பை , இந்தியா அமெரிக்காவிற்கு முறைப்படி தெரிவிக்கும் என்றும் கமல்நாத் கூறினார்.
!!!!!!!!!!!!!!!
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி, 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட, பயன்படுத்தப்பட்ட ஊசிகளை 15 தனியார் மருத்துவமனைகளில் இருந்து பறிமுதல் செய்துள்ளது.

இதுதொடர்பாக 15 டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மொடாஸா நகரில் ஹெபடைடிஸ் பி நோய் தாக்கப்பட்டதால் இதுவரை 49 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அகமதாபாத் மாநகராட்சியினர், மொடாஸா நகரில் தனியார் மருத்துவமனைகளில் அதிரடி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது 10 ஆயிரம் கிகலோ எடை கொண்ட, பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மறுபயன்பாட்டிற்காக வாங்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பயோ மெடிக்கல் கழிவுகளும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 15 டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றை விநியோகம் செய்ததாக அங்குள்ள 3 மருந்து கிட்டங்கிகளையும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இது குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!!!
EXf¥ Y¿ÛUVÖ¥ YÖ|ÚYÖŸ T¼½ A½YR¼LÖL, N—T†‡¥ LQeÙL|” SP†RTyP‰. C‡¥ C‹‡VÖ«¥ 23 ÚLÖz ÚTŸ Y¿ÛU›¥ YÖ|Y‰ ÙR¡V Y‹‰·[‰. C‰ EXfÁ U¼\ SÖ|LÛ[ «P A‡L G‚eÛL Bh•.

C‹‡VÖ«¥ 15 XyN• hZ‹ÛRL· N¡VÖ] EQ° fÛPeLÖU¥ TÖ‡eLTy |·[]Ÿ. 15 ˜R¥ 49 YV‰ EÛPVYŸL¸Á C\” «fR˜• A‡LUÖL E·[‰. CR¼h 50 NR®R LÖWQ• EQ° N†‰ehÛ\° GÁ¿ LP½VTyz£ef\‰.

C‹‡VÖ«¥ 2008- 2009-¥ EQ° E¼T†‡ 228 –¥¦VÁ PÁ. UeL· ÙRÖÛL A‡L¡” LÖWQ UÖL 2015-• Bz¥ EQ° ÚRÛY 250 –¥¦VÁ PÁ BL EV£• GÁ¿ G‡ŸTÖŸeLT|f\‰. EXf¥ Y¿ÛUVÖ¥ YÖ|• UeL· A‡L• E·[ 119 SÖ|L¸¥ C‹‡VÖ 94-Y‰ CP†‡¥ E·[‰.

AÙU¡eL EQ° Œ¿Y]• RVÖ¡†‰·[ “·¸ «YWTz EXfÚXÚV C‹‡VÖ«¥ 27 NR®R UeL· N†RÖ] EQ° fÛPeLÖU¥ AY‡T|f\ÖŸL·. C‡¥ 5 YV‰eh g² E·[ hZ‹ÛRL· 43 NR®R• ÚTŸ GÁ¿ ÙR¡«†‰ C£ef\‰. EXL A[«¥ 25 NR®R• ÚTŸ C‡¥ TÖ‡eLTy|·[]Ÿ. B‘¡e LÖ«¥ 28 NR®R• ÚTŸ TÖ‡eLTyz£ef\ÖŸL·.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ÙLÖ¥L†RÖ«¥ E·[ ^YLŸXÖ¥ ÚS£ ®‡ GÚTÖ‰• TWTWTÖL LÖQT|•.
‡{ÙWÁ¿ ¤.100, ¤.500, ¤.50 ÚSÖy|L· LÖ¼½¥ T\‹‰ Y‹R]. JÁ¿ CWP¥X. ¼ ¿eLQeLÖ] ¤TÖš ÚSÖy|L· UÛZVÖš ÙLÖyzV‰.

AÙRÁ] ‡{Ÿ TQUÛZ GÁ¿ ÙTÖ‰ UeL· BLÖV†ÛR AQÖ‹‰ TÖŸ†RÖŸL·. Ajh 14 UÖz LyzP†‡¥ C£‹‰ VÖÚWÖ ¤TÖš ÚSÖy|eLÛ[ Ly|LyPÖL ÙY¸ÚV A·¸ ®pe ÙLցz£‹R]Ÿ.

NÖRÖWQUÖL ÙR£«¥ J£ ¤TÖš SÖQV• fP‹RÖ¥ iP ÛSNÖL G|†‰ «|YÖŸL·. B]Ö¥ Ly| LyPÖL TQ• «µ‹RÛR TÖŸ†R‰• C‡¥ HÚRÖ ‘WopÛ] C£ef\‰ GÁ¿ L£‡ ÙTÖ‰UeL· VÖ£• J£ ÚSÖyÛP iPÙRÖP«¥ÛX.

RLY¥ A½‹R‰• ÚTÖ§NÖŸ A‹R Th‡eh «ÛW‹‰ Y‹R]Ÿ. ÚWÖyz¥ pR½ fP‹R ¤.3.2 XyN• ÚSÖy|LÛ[• ÙTÖ¿ef ÚNL¡†RÖŸL·. 14-Y‰ UÖz LyzP† ‡¥ AÛU‹‰·[ J£ GÁ ÈÃV¡j Œ¿Y]†‡¥ Y£UÖ] Y¡†‰Û\ A‡ LÖ¡L· ÚNÖRÛ] SP†‡ ]Ÿ. AÚTÖ‰ T‰ef ÛY†‰ C£‹R L¿” TQ†ÛR F³VŸL· ÙY¸ÚV ®pV‰ ÙR¡V Y‹R‰.

TQeLy|L· AÛ]†ÛR• ÚTÖ§NÖŸ Y£UÖ] Y¡†‰Û\ A‡LÖ¡L¸P• JTÛP†R]Ÿ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சீனாவின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்திருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விமர்சித்துள்ளது.
உலகெங்கிலுமான மனித உரிமைகள் நிலைவரம் குறித்து இத்திணைக்களத்தினால் வெளியிடப்படும் வருடாந்த அறிக்கையிலேயே இவ்வாறு விமர்சிக்கப்பட்டுள்ளது.
திபெத்தின் சிறுபான்மையினர் மற்றும் எதிர்க்கருத்துடையோர் மீதான அடக்குமுறைகள் உட்பட சில பகுதிகளில் மனித உரிமைகள் நிலைவரம் கடந்தாண்டில் மிக மோசமடைந்திருப்பதாக இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றத்தை விடவும் ஒத்துழைப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படுமென தெரிவித்திருந்த ஒரு வாரத்திலேயே இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் இவ்வறிக்கை அடிப்படையற்றதும் பொறுப்பற்றதுமென சீனாவின் அரச ஊடகம் விமர்சிக்கின்றது.
சீனாவைத் தவிர ரஷ்யா மற்றும் வடகொரியாவையும் இவ்வறிக்கை விமர்சித்துள்ளது.
ரஷ்யாவின் உள்நாட்டு மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்தும் எதிர்மறையான தரவுகளையே வெளிப்படுத்துவதாக இவ்வறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.
வடகொரியாவின் மனித உரிமைகள் தொடர்ந்தும் படுபாதாளத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளதுடன், இதற்கான உதாரணமாக சிறைகளில் பிறக்கும் குழந்தைகள் கொல்லப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளது.
இவைதவிர எகிப்தில் கருத்துச் சுதந்திரம், பத்திரிகை மற்றும் மதச் சுதந்திரம் என்பவை வீழ்ச்சியடைந்து வருவதாகவும், ஈரானில் ஊடகவியலாளர் மற்றும் எதிர்க்கருத்துடையோருக்கெதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும் சிம்பாப்வேயின் மனித உரிமை நிலைவரமும் மிக மோசமடைந்து வருவதாகவும் இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
இதேவேளை, அண்மையில் சீனாவுக்கான விஜயத்தை ஹிலாரி மேற்கொண்டிருந்தபோது, மனித உரிமைகள் குறித்து அவர் எதனையும் பேசவில்லையென மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானுக்கும், ஆப்கனுக்கும் அதிகளவில் ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க பாராளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அவர் உரையாற்றினார். அப்போது, அல் கொய்தா, தாலிபான் தீவிரவாத அமைப்புகள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் எல்லைகளில் செயல்பட்டுவருவதாகக் கூறினார். இந்த தீவிரவாத அமைப்புகளால் , அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, அதனை ஒழிக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் ஒபாமா குறிப்பிட்டார் . எனவே, பாகிஸ்தானுக்கும், ஆப்கனுக்கும் ராணுவ உதவிகளை மேலும் அதிகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆப்கனுக்கு, ராணுவம் அல்லாத உதவிகளை அதிகரித்தும் ஒபாமா உத்தரவிட்டார்
!!!!!!!!!!!!!!!!
வங்கதேச டாக்கா நகரில் கலவரம் நடத்திய படையினர் சரணடைந்துவிட்டதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.
இருந்த போதிலும் சுமார் 130 அதிகாரிகளை காணவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்களில் சிலர் கலகக்காரர்களால் கொல்லப்பட்டிருக்கக் கூடும்.
கலவரத்தை முறியடிக்க கொண்டுவரப்பட்ட இராணுவத்துடன், பொதுமக்களும் சேர்ந்து, தெருக்களில் கூடி , இந்த நெருக்கடி தீர்ந்ததை கொண்டாடினார்கள்.
ஆயுதங்களைக் களையும் கலவரகக்காரர்களுக்கு பகிரங்க மன்னிப்பு வழங்குவதாக உறுதியளித்த பிரதமர் ஷேக் ஹசீனா, அதனைச் செய்யாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தமது ஊதியம் மற்றும் பணி நிலைமை குறித்து விசனம் தெரிவித்து, நேற்று கலவரம் செய்த டாக்கா எல்லைக்காவல் படையினரின் தலைமையகத்தை சுற்றி 14 யுத்த தாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரை இராக்கில் தடுத்து வைத்த பிரிட்டிஷ் இராணுவம் அவர்களை பிரிட்டிஷ் சட்டங்களுக்கு முரணாக அமெரிக்க படையினரிடம் 5 வருடங்களுக்கு முன்னர் கையளித்த சம்பவத்தை பிரிட்டன் முதற்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளது.
போர்க்காலத்தில் தடுத்து வைக்கப்படுவோரை, வழக்கமான சட்ட ஒழுங்குகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் ஒரு நாட்டில் இருந்து இன்னுமொரு நாட்டுக்கு கொண்டு செல்லும் வழக்கத்தை பிரிட்டிஷ் அரசு அண்மைக்காலம் வரை மறுத்து வந்தது.
இந்தச் சம்பவம் பற்றி அந்தக் காலகட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை செயலர் ஜோண் ஹட்டன் வியாழனன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
!!!!!!!!!!!
sports
வெலிங்டனில் இன்று நடைபெறும் இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து, இந்திய அணியை முதலில் JLg;ngLj;jhl பணித்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இந்நிலையில், இன்றைய போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் உறுதியில் இந்திய அணியினர் களம் இறங்கி உள்ளJ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
,e;jpa mzp 20 Xtupy;6 tpf;Nfl; ,og;gpw;f;F149 Xl;lq;fis vLj;Js;sJ.
சேவாக் (24), கம்பீர் (10) ரெய்னா (0) ஆட்டமிழந்த பிறகு யுவ்ராஜும், தோனியும் இணைந்து ஸ்கோரை 13வது ஓவரில் 92 ரன்களுக்கு உயர்த்தினர்.

யுவாஜ் சிங் 34 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் சகிதம் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published.