பிரபாகரன் படத்தை பார்த்து பயப்படும் கொங்கிரசார்: மணிவன்னண்

பிரபாகரன் படத்தை பார்த்து பயப்படும் கொங்கிரசார்: மணிவன்னண்
திகதி: 26.02.2009 ஃஃ தமிழீழம் ஃஃ ஜசோழன்ஸ
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வடகாடு கிராமம். வடகாடு கிராமத்தில் தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பொதுக்கூட்டம் இன்றிரவு நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் திரைப்பட இயக்குனரும்இ நடிகருமான மணிவன்னண்இ திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணிஇ ஓவியர் புகழேந்தி ஆகியோர் சிறைப்புரை ஆற்றினார்கள்.

மணிவன்னண் பேசும்போதுஇ பிரபாகரன் படத்தைப் பார்த்து காங்கிரஸ் கட்சிக் காரர்கள் கோபம் அடைகிறார்கள். பிரபாகரன் படத்தை பார்க்கவே பயப்படுகிறார்கள். அத்வானிஇ வாஜ்பாய் போன்றவர்களின் படங்கள் சமீபத்தில்தான் தமிழ் நாட்டுக்குள் வந்தது. அதை எல்லாம் ஏற்றுக்கொண்டவர்கள் ஏன் பிரபாகரன் படத்தைப் பார்த்து பயப்படுகிறார்கள்.

பிரபாகரன் படத்தை செய்தித்தாள்களில் போடுகிறார்கள். ஆனால் சட்டையில் குத்திக்கொண்டால் கைது செய்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பிரபாகரனின் படங்களை எடுக்க கொங்கிரஸ் கட்சியினர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் பகுதியில் கொங்கிரஸ் கட்சியினர் தங்களின் தலைவர்கள் படங்களை வைத்தால்இ இந்தக் கூட்டத்தினர் சும்மா விடுவார்களா? வரும் தேர்தலில் கொங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வரக்கூடாது என்பதே நமது நோக்கம்.

படத்தில் நடிக்கிற மணிவன்னண்இ வடிவேலுவை விட நகைச்சுவைக்காரர்களாக இருக்கிறார்கள் கொங்கிரஸ் கட்சியினர். ஈழத்தை உடைத்து அதில் ஆட்சி செய்வது நமது நோக்கம் அல்ல. அமைதி நிலவ வேண்டும் என்பதே நமது நோக்கம்.

கடந்த 15 வருடங்களாக பிரபாகரன் இறந்துவிட்டார்இ இறந்துவிட்டார் என செய்திகளை பரப்பி வருகின்றனர். கடந்த 15 வருடமாக ஒரு நபர் தொடர்ந்து இறந்து கொண்டிருக்கிறார் என்றால் அது பிரபாகரன் மட்டும்தான். தமிழினத்துக்கு துரோகம் செய்யும் கொங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம். தமிழகத்தை விட்டே துரத்துவோம் என்றார்.

Source & Thanks : yarl.com

Leave a Reply

Your email address will not be published.