உன்னிச்சை குளத்தில் மீன்பிடிக்க சிறிலங்கா படையினர் தடை: நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான உன்னிச்சை குளத்தில் மீன் பிடிப்பதற்கான தடையை இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உன்னிச்சை குளத்தில் எக்காரணம் கொண்டும் மீன்பிடிப்பதற்கு செல்லக்கூடாது என்றும் அது மாத்திரமல்லாது வேறு தேவைகளுக்காகவும் குளத்தில் இறங்கக்கூடாது என்றும் சிறிலங்கா படையினர் மிகக்கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

இதனால், மீன் பிடித்தலுக்காக குளத்தை நம்பியிருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது, அங்கு பிடிக்கப்படும் மீன்களை வாங்கி விற்பதன் மூலமாகவும் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ள நிலையில் – சிறிலங்கா படையினரின் தடை உத்தரவினால் குளத்தை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கை நிலை மோசமாக பாதிப்படையக்கூடிய அபாயம் தோன்றியுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.