பெற்றோருடன் தொடர்பின்மையால் முல்லைத் தீவு மாணவி கிழக்கு பல்கலைகழகத்தில் தற்கொலை

கிழக்கு பல்கலைகழகத்தில் பயிலும் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவி, பெற்றோருடன் தொடர்பின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்தப் பரிதாபகரமான சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு துணுக்காய் வீதி நட்டாங்கண்டல் என்ற இடத்தை சேர்ந்த நிரூஜா தனபாலசிங்கம் என்ற முதலாம் ஆண்டு கலைப்பீட மாணவியே தற்கொலை செய்து கொண்டவராவார்.

முல்லைத்தீவில் தற்போது இடம்பெற்று வருகின்ற யுத்தம் காரணமாக, தமது பெற்றோருக்கும் தமக்கும் இடையிலான தொடர்புகள் இல்லாமைக் காரணமாக மனமுடைந்த நிலையிலேயே தாம் தற்கொலை செய்துக் கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த நிலையில் இவரின் இறுதிக் கிரிகைகள் தொடர்பாக உரியவர்ளுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை கிழக்கு பல்கலைகழத்திற்கு ஏற்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.