பிரணாப் முகர்ஜிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விரைவில் சந்திப்பு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வன்னிப் பிரதேச மக்களது மனிதாபிமான நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்படும் எனத் தெரியவருகிறது.

31 ஆவது சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் பிரணாப்முகர்ஜி கலந்து கொள்ள போதிலும், எதிர்வரும் நாட்களில் அவர் இலங்கைக்கு விஜயம்
செய்ய உள்ளதாகவும், இதேவேளை, வன்னி மோதல்கள் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேணன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.