மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் முதல் அவர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான கூட்டம் நடந்தது. இதன் பின் நிருபர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இது ஜனவரி 1ம் தேதி முன் தேதியிட்டு வழங்கப்படும்.

ஏற்கனவை அவர்களுக்கு 16 சதவீத அகவிலைப்படி அளிக்கப்பட்டு வருகிறது. இதையும் சேர்த்து அவர்களுக்கு இனி 22 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். அடுத்த மாதம் முதல் அவர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படியுடனான சம்பளம் வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் இந்த கூடுதல் அகவிலைப்படியால் அரசுக்கு ரூ. 6,020 கோடி கூடுதலாக செலவாகும் என்றார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கும்…

மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசும், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு 6 சதவீதம் உயர்த்தியுள்ளது.

இது குறித்து முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்தவாறு நிதி அமைச்சர் அன்பழகன், நிதித்துறை செயலர் ஞானதேசிகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.