இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தர இந்திய டாக்டர்கள் குழு

டெல்லி: இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்திய டாக்டர்கள் குழு செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தேவையான மருத்துவ உபகரணங்களுடன் இந்த குழு இலங்கை செல்கிறது. இந்தக் குழுவுக்கு தேவையான உதவிப் பொருட்களும் உடனுக்குடன் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுநிர்மாணம் செய்யவும், மறுவாழ்வு அளிக்கவும் இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.