இன அழிப்புக்கு உள்ளான தமிழர்களை நினைவு கூர்ந்து அவுஸ்திரேலியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறிலங்கா படையினரின் கொடூர எறிகணைத் தாக்குதல்களில் இன அழிப்புக்கு உள்ளாகி வரும் தமிழ் மக்களை நினைவு கூர்ந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சிட்னியில் உள்ள Parramatta, Church St, Mally இல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டம் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட போதும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் தமிழ் மக்களின் இன அழிப்பை எதிர்த்து தீக்குளித்து தற்கொடையான ‘வீரத்தமிழ் மகன்’களை நினைவு கூர்ந்ததுடன் அவர்களுக்கு வணக்கத்தினையும் செலுத்தினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர் மாத்தளை சோமு, தமிழீழ மக்களின் அபிலாசைகளை விளக்கி உணர்வுபூர்வமாக உரையாற்றினார்.

அத்துடன், சிட்னி தமிழ் மன்றத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் தமிழ் இளையோர்களும் வன்னி அவலத்தை உலக மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் உரையாற்றினர்.

வன்னி அவலத்தை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டும் முகமாக இங்கு ஒளிப்படக் காட்சியும் காண்பிக்கப்பட்டது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.