மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாதது வருத்தம் அளிக்கிறது : சோம்நாத் உருக்கம்

புதுடில்லி : லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாதது, வருத்தம் அளிக்கிறது என சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உருக்கமாக தெரிவித்துள்ளார். 14வது லோக்சபா இன்றுடன் முடிவடைகிறது.

லோக்சபாவில் உரையாற்றிய சபாநாயகர் சோம்நாத் இவ்வாறு தெரிவித்துள்ளார். லோக்சபா மு‌டிவடைவதை ஒட்டி இன்றும், நாளையும் பார்லிமென்ட் எம்.பி.க்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள். சோம்நாத் சாட்டர்ஜி , பிரதமர் மன்மோகன்சிங் குணமடைய மனமாற வாழ்த்துவதாக தெரிவித்தார் . தனது பணிக்காலத்தில் , லோக்சபாவை நடத்த பல்வேறு இன்னல்களை சந்தித்தாகவும் அவர் கூறினார் .

மக்களவை தரத்தை உயர்த்தியவர் சோம்நாத் : பிரதமர் புகழாரம்

பிரதமர் மன்மோகன்சிங் உரையை வாசித்தார் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி . சோம்நாத் லோக்சபாவின் தரத்தை உயர்த்தியவர் என்றும் , காங்., தலைவர் சோனியா உத்வேகம் அளித்ததாகவும் பிரதமர் உரையில் குறிப்பிட்டிருந்ததாகவும் வாசித்தார் .

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.