இந்தியா: ஜவுளித்துறையில் 5 லட்சம் வேலை ‘காலி’

டெல்லி: பொருளாதார மந்தம் காரணமாக இந்தியாவில் வேலை வாய்ப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாகக் குறைந்து வருகின்றன.

இதை மத்திய அரசே வெளிப்படையாகவே நாடாளுமன்றத்தில் அறிவித்தும் கூட அதற்கு மீடியா அத்தனை முக்கியத்துவம் தரவில்லை.

கடந்த சில மாதங்களில் மட்டும் இந்திய ஜவுளித் துறையில் 5 லட்சம் பணியிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது தெரித்துள்ளார்.

ஜவுளித்துறையில் மோசமான தேக்கம், ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் குறைந்தது போன்ற காரணங்களால் 5 லட்சம் வேலை இழந்திருப்பது உணமையே. ஆனால் வருகிற மழை காலத்துக்குள் மீண்டும் ஓரளவு சகஜ நிலை திரும்பும் என நம்புகிறோம் என்றார்.

மேலும் பணியிழப்புகள் ஏற்பாடமால் இருக்க என்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவது என அரசு தீவிர பரிசீலனை செய்துவருவதாகவும் கூறியுள்ளார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.