‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (26.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

சுடர் ஒளி பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் இன்று காலை கடத்தப்பட்டுள்ளதாக அப்பத்திரிகையின் நிர்வாகப் பணிப்பாளர் தெரிவித்தார் . இக்கடத்தல் சம்பவம்குறித்து கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை கல்கிஸ்ஸை மஹிந்த மலர்ச்சாலையில் இடம்பெற்ற இறுதிக்கிரியை ஒன்றில் கலந்துகொண்ட நபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு இன்று காலை 9.15 மணியளவில் முறைப்பாடு கிடைக்கபெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் இறுதியாக கடல் வழியாக அழைத்து வரப்பட்ட நோயாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன .

கடந்த திங்கட்கிழமை அழைத்து வரப்பட்ட 5 ஆவது நோயாளர் தொகுதியில் 190 நோயாளர்களுடன் 195 உறவினர்களும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.இவ்வாறு அழைத்து வரப்பட்ட நோயாளர்களில் ஒருவரே மரணமடைந்ததாக வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

வைத்தியசாலை தகவல்களின் படி 5 தொகுதிகளில் அழைத்து வரப்பட்ட நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் கண்டி வைத்தியசாலையில் இருவரும் ,திருகோணமலை வைத்தியசாலையில் 10 பேரும் என 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது வரை நோயாளர்களும உறவினர்களும் என 1982 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர் .இவர்களில் 740 பேர் திருகோணமலை வைத்தியசாலையிலும் 28 பேர் மெதடிஸ்த கல்லூரி தற்காலிக மருத்துவ மனையிலும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனையோரில் ஒரு பகுதியினர் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள அதே வேளை இன்னொரு பகுதியினர் சிகிச்சை முடிந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈழத் தமிழர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டை கண்டித்து மலேசியாவில் நாளை கண்டனப் பேரணி நடைபெறவுள்ளது.
இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் மனிதப் பேரலங்களும் கொடுமைகளும் நடந்தேறுகின்றன.
அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதிலும் உடனடி நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டைக் கண்டித்து மலேசியாவில் மாபெரும் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்ஷிலில் இலங்கையின் மனிதாபிமான நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் அனா நிஸ்டாட் கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவில், போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், வன்னியில் மக்களுக்கெதிரான துஷ்பிரயோகத்தில் இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் எனும் தலைப்பிலான 45 பக்க அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது: இலங்கையின் இன்றைய நிலைமைகள் குறித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் பொறுப்பு இணைத்தலைமை நாடுகளுக்கும் , அமெரிக்காவுக்கும் இருக்கின்றது. இரு தரப்பினரதும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து அண்மைய வருடங்களில் அமெரிக்கா கவனம் செலுத்தி வந்துள்ளது. வன்னியிலுள்ள பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் குறித்து ஒபாமாவின் அரசாங்கமும், காங்கிரஸும் உடனடியாகக் கவனத்தில் கொள்ளவேண்டும். அத்தோடு, இராணுவ இலக்குகளா அல்லது பொதுமக்கள் உள்ள வைத்தியசாலையா? என்ற வேறுபாடின்றி போர் விதிமுறைகளை மீறும் எல்லா வகையான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும். மனிதாபிமான நிறுவனங்களை செல்வதற்கு அனுமதிக்கவும் போர் நடைபெறும் பிரதேசங்களில் அகப்பட்டுள்ள பொது மக்களை அங்கிருந்து வெளியேற்றும் வகையிலான நடவடிக்கைகளை விடுதலைப் புலிகளுடைய ஆதரவுடன் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். செப். 2008இல் வன்னியில் இருந்து வெளியேற்றப்பட்ட மனிதாபிமான நிறுவனங்கள் அங்கு மீண்டும் சென்று பணியாற்றவும், அபாயக் கட்டத்திலுள்ளவர்களுக்கு அவசியத் தேவைகளை வழங்கவும், மக்களுடைய எல்லா வகையான அடிப்படைத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையிலும் அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட வேண்டும். அத்தோடு, அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் இடையூறின்றிப் பணியாற்ற உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்..

ஊடகவியலாளர்களை அனுமதிக்கவும் ஊடகவியலாளர்கள் உட்பட சுதந்திரமான கண்காணிப்பாளர்கள், மோதல் பிராந்தியதிற்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அது அங்குள்ள நிலைமைகள் பற்றிய சரியான தகவல்களை உடனடியாக வெளிக்கொணர உதவுவதோடு, பொதுமக்களுக்கு அங்கு என்ன நடைபெறுகிறது என அறியவும் உதவும்..

சட்டத்திற்குப் புறம்பான வகையிலும், கால வரையறையின்றியும் இடம்பெயர்ந்தவர்கள் தடுத்து வைக்கப்படுவது உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படுதல் வேண்டும்ன. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் , சட்டத்திற்குப் புறம்பான கைதுகள், காணõமல் போதல்கள் பற்றி கண்காணிக்க சர்வதேசக் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும்..

இல்லையேல், ஐக்கிய நாடுகளின் பொது அடிப்படைகளான இடம்பெயர்ந்தவர்களுடைய சுதந்திர நடமாட்டத்தை அங்கீகரித்தல், இடம்பெயர்ந்தவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிப் போகும் அவர்களுடைய உரிமையை மதித்தல், இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ மனிதாபிமான நிறுவனங்களுக்கு அனுமதியளித்தல் வேண்டும். புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு இது தவிர, விடுதலைப் புலிகள் போர்ப் பிராந்தியத்திலிருந்து மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை என்றும், அவ்வாறு வெளியேறுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். அத்தோடு , விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்புச் செய்வதாகவும், அதுவும் 18 வயதிற்குக் குறைந்தவர்களை போரில் ஈடுபடுத்துவதாகவும், பயிற்சிபெறாத இவர்கள் போர்முனைகளில் ஈடுபடுத்தப்படுவதனால் அவர்கள் கொல்லப்படுகின்றனர். அரசாங்கம் ஜனவரி 1ஆம் திகதி பாதுகாப்பு வலயத்தை அறிவித்தது. ஆனால், ஜனவரி 24ஆம் திகதி அப்பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்; 15 பேர் காயமடைந்தனர். ஜனவரி 22க்கும் 29க்கும் இடையே இப்பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்; பல நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்..

காப்பரணாக பயன்படுத்த முயற்சி இது தவிர, வன்னிக்கான உணவு வாகனத் தொடரணி அனுப்பப்படும் போது, அதனைக் காப்பரணாகக் கொண்டு படையினர், புலிகளின் பிரதேசங்களை நோக்கி முன்னேற முயன்ற பல சம்பவங்களும் இருக்கின்றன. டிசம்பர் 29ஆம் திகதி படையினரின் இறுதிக் காப்பரணாக உள்ள ஒட்டுசுட்டானிலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவிலுள்ள புலிகளின் காப்பரண் உள்ள புதுக்குடியிருப்புக்கு உணவு வாகனத் தொடரணி, சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பாதுகாப்புடன் செல்லமுயன்ற போது, அதனைக் காப்பரணாகக் கொண்டு படையினரும் முன்னேற முயன்றதால் விடுதலைப் புலிகள் திருப்பித் தாக்கினர். இதனால், உணவு வாகனத் தொடரணியை இடைநடுவில் நிறுத்தவேண்டியதாயிற்று என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டை முடிவிற்கு வந்தாலும், தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இலங்கை அரசு ஆர்வம் காட்டாது என்று அமெரிக்க எம். பி. பாப் கேஸி குற்றம்சாட்டியுள்ளார்.

தெற்காசிய விவகாரங்களுக்கான செனட் வெளியுறவுத்துறை குழுவின் தலைவராக இருக்கும் பாப் கேஸி, வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு நடத்திவரும் சண்டை, முடிவிற்கு வந்து , மீண்டும் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசில் போதிய பங்கு அளிக்கப்படவில்லை என்றால் , மீண்டும் புலிகள் ஆயுதங்களைக் கையில் எடுப்பார்கள் என்று அவர் கூறினார். புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லாத நிலையில், தமிழர் அமைப்பினருடன் பேசுவதற்கு அந்நாட்டு அரசு முன்வர வேண்டும் என்று பாப் கேஸி வலியுறுத்தினார் . தமிழர்கள் வசிக்கும் பகுதிகள், பாதுகாப்பு வலையங்கள், மருத்துவமனைகள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்தை நிறுத்துமாறு கோர அமெரிக்காவிற்கு எவ்வித தகுதியுமில்லை என ஜாதிக ஹெல
உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இராணுவப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளை நிறுத்துமாறு அமெரிக்கா கோருவதில் நியாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் லட்சக் கணக்கான அப்பாவி பொதுமக்களை அமெரிக்க இராணுவம் கொன்று குவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்பாவித் தமிழ் மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கிலேயே யுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
உலகப் பயங்கரவாதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதிகள் இரட்டைக் கொள்கைகளை பின்பற்றி வருவது பெரும் கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் யுனிசெப் ஊடாக விடுவிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சர்வோதய நிலையத்தில் தற்போது தொழிற் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

யுனிசெப் ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ,மற்றும் இலங்கைஅரசாங்கம் ஆகிய தரப்பினருக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பேரில் தமது அமைப்பிலுள்ள சிறுவர்களை விடுவிப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவித்திருந்தனர் .

கடந்த மாதம் 22 ம் திகதி மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் விடுவிக்கப்பட்ட 15 சிறுவர்களும் தற்போது இந்த பயிற்சியை பெற்று வருகின்றனர்.கணனி மற்றும் மோட்டார் சைக்கிள் திருத்தனர் போன்ற துறைகளிலேயே இவர்களுக்கான இந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்திரசிறீ நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வரும் மேஜர் ஜெனரல் நிசன்கா விஜயசிங்க நாளை மறுநாள் சனிக்கிழமை (28.02.09) ஓய்வு பெறவுள்ளதால் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜி சந்திரசிறீ நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக சந்திரசிறீ பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எவ்வாறான சவால்கள் ஏற்பட்டாலும் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவு நிறுத்தப்பட மாட்டாதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ் தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் தமது கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார் .
வாக்குகளை அதிகளவில் பெற்றுக் கொள்வதனைவிட மக்கள் சேவையை முதனிலைக் கடமையாக தமது கட்சி கருதிச் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலின் போதும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்பாளர்களை நிறுத்த கட்சி முடிவு செய்துள்ளதாக
அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அரவது சகாக்களும் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டுமென
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.
இராணுவப் படையினர் வடக்கில் வெற்றிகரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்,தோல்வியிலிருந்து புலிகள் மீள்வதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதங்களை கீழே வைத்து, பாதுகாப்பு படையினரிடம் சரணடைவதன் மூலம் தம்மையும் தமது சகாக்களையும் பிரபாகரனினால் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை கீழே வைப்பது மற்றும் சரணடைவதென்பது புதிய விடயமல்ல எனவும் 1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின் போது ஜனாதிபதி ஜயவர்தனவினால்
முன்வைக்கப்பட்ட யோசனையை பிரபாகரன் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வன்னிப் பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமானால் பிரபாகரன் சரணடைவது மிகவும் இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார்.
படையினரிடம் சரணடைவதனைத் தவிர வேறும் மாற்று வழிகளில் தற்போது இல்லை என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வன்னியில் மோதல் நடைபெறும் பகுதிகளில் சுகாதார சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அங்கு தொற்று நோய்கள் பரவக் கூடிய அபாயம் குறித்தும் அது எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனம், தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் தொடரும் மோதல்கள் காரணமாக பல ஆயிரக்கணக்கானவர்களின் உடல் நலம் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் மோதல் நடைபெறும் பகுதிகளில் காணப்படும் சுகாதார நிலை தொடர்பாக துரிதமான மதிப்பீடொன்றை மேற்கொள்ளுமாறும் நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை மேலும் பலப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
போதிய பாதுகாப்பின்மை சிகிச்சைகளைப் பாதித்துள்ளது. மோதல் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் மோதலில் சிக்கியுள்ளவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு எமக்கு 45 இலட்சம் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன.
சுகாதாரத் துறையில் போதிய பணியாட்கள் இன்மை பல மக்களுக்கான சுகாதார பராமரிப்பு பாதிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளன. மேலும் தொடர்ச்சியாக மக்கள் இடம்பெயர்வதும் போதிய பாதுகாப்பின்மையும் மக்களுக்கான சிகிச்சைகளைப் பாதித்துள்ளன. கர்ப்பிணித் தாய்மார்கள் உரிய மருத்துவ சேவைகளைப் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது.
மேலும் நோய் எதிர்ப்புத் திறனை உயர்மட்டத்தில் வைத்திருப்பதற்கான முயற்சிகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது. மேலதிக நடவடிக்கைள் எடுக்கப்படாவிட்டால் சுகாதார நிலை மேலும் மோசமடையும். மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவலாம்.
அதிகளவானவர்கள் உள ரீதியான பாதிப்புக்கு உட்படும் அபாயம் ஏற்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வடக்கு மோதலில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மீண்டும் கனடா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கனடா சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் பெவர்லி ஜே.ஒட நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருப்பவை வருமாறு:
இலங்கையின் வடக்கில் மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா நாட்டு அரசு மேலதிக நிதி உதவியை அளிக்கவுள்ளது.
இலங்கைப் பெறுமதியின் படி 50 இலட்சம் டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளளோம்.
இம் மாதம் பெப்ரவரி 4 ஆம் திகதி அறிவிக்கப்பட்டதை விட மேலதிகமாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அத்துடன் மோதலில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் .
மீண்டும் நாங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பையும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித தடையுமின்றி மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு அனுமதியளிக்கப்படவேண்டும் என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையில் போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு அறுவைச் சிகிச்சைக்குப் பின் பயன்படுத்தப்படும் முக்கியமான மருந்தை இந்தியா அனுப்புகிறது என இலங்கை நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வா தெரிவித்தார்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின் பயன்படுத்தப்படும்பெதாடைன்என்கிற மருந்து கையிருப்பு குறைவாக இருப்பது குறித்து நாடாளுமன்றத்தில் ஜேவிபி உறுப்பினர் கேள்வி எழுப்பியபோது , அந்த மருந்தை இந்தியா அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளது என டி சில்வா கூறினார் .
வடக்குப் பகுதியில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ரூ.1.6 கோடி மதிப்பிலான மருந்துப் பொருள்களை இந்தியா அனுப்பியுள்ளது.
போரால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு அந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் வன்னியில் படையினரின் கொடூரத் தாக்குதல்களினால் காயமடைந்துவரும் தமிழ் பொதுமக்கள் மருத்துவப் பொருட்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சையின்றி பலர் இறக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புதுமாத்தளன் மருத்துவமனை வைத்தியர் வரதராஜன் அவர்கள் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ், தீவகப் பகுதிகளுக்கு சர்வதேச ஊடகவியலாளர் செல்வதற்கு கடற்படை தடைவிதித்துள்ளனர் காரைநகர்க்கு சென்ற சர்வதேச ஊடகவியலாளர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
யாழ் குடாநாட்டிற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று டென்மார்க் நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ஊடகவியலாளரும் யாழ் பல்கலைக்கழகத்தினது ஊடக வளங்கள் பயற்சி மையத்தினது நீண்ட கால ஆலோசகருமான ஹென்றிக் குருனர் குடாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
யாழ்க்குடாநாட்டில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காரைநகர் பகுதிகளுக்கு செல்ல முற்பட்ட போது காரைநகரின் நுழைவாயிலான பொன்னாலை சோதனைச் சாவடியில் 2 மணி நேரம் காக்க வைத்து கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.
ஊடகவிலாளன் என்ற வகையில் தனது விஜயம் அமையவில்லை எனவும் ஊடக வளங்கள் பயற்சி மையத்தினது நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே தான் செல்லவுள்ளதாகவும் அவர் கடற்படையிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே உள்ளுர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இப்பகுதிக்குச் செல்வதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்து வந்துள்ளதால் உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் உதவி நடவடிக்கைகள் இடைநின்று போயுள்ளன.

காரைநகரிலுள்ள கலாநிதி .நா தியாகராஜா மகாவித்தியாலயத்தில் ஊடக கற்கைநெறி தொடர்பான அறிமுக கற்கைநெறி ஒன்று இன்று இடம்பெற ஏற்பாடாகி இருந்தது. இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ஹென்றி குருனரும் கௌரவ விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத்தினது ஊடக வளங்கள் பயற்சி மையத்தினது பணிப்பாளரும் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளையும் அழைக்கப்பட்டிருந்தனர் .

படையினரின் இந்நடவடிக்கையானது குடாநாட்டிலுள்ள ஊடக அமைப்புகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது கடற்படையினரின் திட்டமிட்ட நடவடிக்கை என யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை கவலை தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கனடா பீல் பிரதேச மக்களால் மிஸ்ஸிஸாகாவில் நடைபெற்ற 50 மணிநேர தொடர் உண்ணாவிரதம் , கவனயீர்ப்பு, மனிதச் சங்கிலிப் போராட்டம் 02-20-2009 வெள்ளி மாலை 4 மணி தொடக்கம் ஞாயிறு மாலை 6 மணிவரை City Square (301 City Centre Drive)ல் பெருந்திரளான மக்கள் உணர்ச்சி பொங்கி கோசங்கள் எழுப்பிய வண்ணம் கலந்து கொள்ள எழுச்சியாக இடம்பெற்றது.
!!!!!!!!!!!!!!!
சிறீலங்கா இனவாத அரசின் தமிழினப் படுகொலை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து யேர்மனி டுசில்டோவ் நகரில் அமைந்துள்ள இணைத்தலைமை நாடுகளின் துணைத் தூதரகங்கள் மீதான மாபெரும் முற்றுகைப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1.00 மணி முதல் யேர்மனி வாழ் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது . இந்த முற்றுகைப் போராட்டத்தில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!
சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலை நடவடிக்கைகளைக் கண்டித்து gpuhd;R murpd; cjtpehb france paris நகரில் 28 / fev rdp gpw;gfy; 2kzpf;F republique metro ypUe;J bastile metrotiu fz;ldNguzp ,lk;ngw,Ug;gjhf Clfq;fs;nra;jp ntspapl;Ls;sd.

india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இராமேசுவரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களில் ஒருவர் படுகாயமடைந்தார். கம்பியால் கொடூரமாக தாக்கியதில் இருவர் காயம் அடைந்தனர்.
இராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குமீன்பிடிக்க சென்றனர். நண்பகல் 1 மணி அளவில் அந்த படகுகள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தன. அப்போது அந்த பகுதிக்கு ஆயுதம் பொருத்திய 5 அதி நவீன கப்பல்களில் சிங்கள கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறே நெருங்கி மீனவர்களை திரும்பிச்சென்று விடுமாறு எச்சரித்தவாறு வந்தனர்.
இதையடுத்து பயந்துபோன மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை அவசர அவசரமாக எடுக்க முயன்றனர். ஆனாலும் சிங்கள கடற்படையினர் இராமேசுவரம் மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த கான்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர் சூசைஅந்தோணி (வயது 28) யின் வலது கையில் குண்டு பாய்ந்து சதையை துளைத்தது. துடிதுடித்த சூசைஅந்தோணியை உடன் இருந்த மீனவர்கள் கிருபை, சிலுவை, ஞானசேகரன் ஆகியோர் படகில் நேற்று இரவு 9 மணி அளவில் இராமேசுவரம் கொண்டு வந்தனர். படுகாயம் அடைந்த சூசைஅந்தோணி சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த அருள்பிரகாசம் என்பவருக்கு சொந்தமான படகிலும் சிங்கள கடற்படையினர் இறங்கினர்.
படகில் உறைபனிக்கட்டி உடைப்பதற்காக போடப்பட்டிருந்த இரும்பு கம்பியை எடுத்து படகு ஓட்டுனர் அருள்பிரகாசத்தின் மகன் ராஜாவை கண்மூடித்தனமாக தாக்கினர். அதோடு கடலில் மீன்பிடிக்க வீசி இருந்த வலைகளையும் வெட்டிவீசி, விலை உயர்ந்த இறால் மீன்கள் , கைப்பேரிகளையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். வலி தாங்க முடியாமல் துடித்த ராஜாவை மீனவர்கள் நிஷாந்த், முருகேசன் மற்றும் 3 பேரும் இராமேசுவரத்திற்கு அழைத்து வந்தனர்.
காயம் அடைந்த ராஜாவை இராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு பின்னர் இராமநாதபுரம் தனியார் மருத்துவ மனைக்குதீவிர சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். மேலும் சிங்கள கடற்படையினரின் தாக்குதலில் முருகன் என்பவரது படகில் இருந்த முத்துலிங்கம் என்பவரும் காயம் அடைந்தார்.
இது குறித்து அருள்பிரகாசம் படகில் இருந்த மீனவர் நிஷாந்த் கூறுகையில்இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டனர். நாங்கள் அவர்களது எச்சரிக்கையால் மீன்பிடிப்பதை உடனே விட்டுவிட்டு புறப்பட்டோம். ஆனால் படகில் இறங்கி ராஜாவை அவர்கள் தாக்கியதோடு எங்களையும் அடித்தனர். நாங்கள் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் அவர்கள் தொடர்ந்து தாக்கினர் . பின்னர் இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றதும் நாங்கள் உயிர் தப்பி கரைவந்து சேர்ந்தோம்இவ்வாறு அவர் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்நாம் தமிழர் நடைப்பயணம்’ மார்ச் 4 மற்றும் 5-ந் தேதிகளில் நடக்கிறது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் இப்பயணத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்கிறார். .

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ஈழத்தமிழினத்திற்கு எதிரான சிங்கள இன வெறியர்கள் நடத்தும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இத்தகைய துணிச்சலுக்கு, தமிழினத்திற்கு எதிரான இந்திய அரசின் துரோக நடவடிக்கைகளே காரணமாகும் என்பதை நாடறியும்.

இந்நிலையில், போர் நிறுத்த நடவடிக்கைகளில் இறங்கும்படி இந்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் தனித்தனியாகவும், கூட்டமைப்பாகவும் இணைந்து தொடர்ச்சியாக அறவழியில் போராடி வருகின்றனர்.

எனினும், இந்திய அரசும், சிங்கள அரசும் அசைந்து கொடுக்கவில்லை. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கான முனைப்பில் ஈடுபாடு காட்டவில்லை. ஆகவே தமிழக மக்களாகிய நாம் ஈழத்தமிழ் சொந்தங்களை பாதுகாத்திட தொடர்ந்து போராட வேண்டிய தேவை உள்ளது.

ஈழத்தமிழர்களின் நிலை, சிங்கள இன வெறியர்களின் போக்கு மற்றும் இந்திய அரசின் துரோகம் ஆகியவற்றை தமிழக மக்களிடத்தில் இன்னும் தெளிவாக அம்பலப்படுத்த வேண்டும். எனவே ஊர் ஊராகச் சென்று மக்களை சந்திக்கும் வகையில்நாம் தமிழர் நடைப்பயணம்’ ஒன்றை விடுதலைச்சிறுத்தைகள் மேற்கொள் கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் மாநகரங்களிலும், தனித்தனி அணிகளாக இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படும்.
இந்த நடைபயணத்தில் கட்சியின் பொறுப்பாளர்கள் மட்டுமின்றி அனைத்து துணைநிலை அமைப்புகள் மற்றும் அணிகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக . ..தி.மு.. சார்பில், காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌‌ர் அலுவலகத்திலும் , செ‌ன்னை மாநகர கா‌வ‌ல்துறை அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளன
...தி.மு.. பொதுச்செயல‌ர் ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் தேனாம்பேட்டை காவ‌ல்துறை உதவி ஆணைய‌ரிட‌ம் நேற்று மாலை புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகா‌ர் மனுவில், நான், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் அலுவலக பொறுப்பாளராக பணிபுரிகிறேன். 25ஆ‌ம் தேதி அன்று (நேற்று) நான் அலுவலக பணியில் இருந்தபோது ஜெயலலிதா பெயருக்கு தபால் மூலம் கடிதம் ஒன்று வந்தது . அந்த கடிதத்தின் மேல் உரையில் அனுப்புனரின் பெயரோ, முகவரியோ இல்லை.

ஆனால் , அந்த கடிதத்தில், ‘புரட்சி புலி இயக்கம்தமிழ் இனத்தை அழிக்கும் உன் வீட்டை தரைமட்டமாக ஆக்குவேன், வெடி வைப்பேன், உன் அலுவலகத்தில்பைக் பாம்வைப்பேன், சில நாளில் நீ, உன் வீடு காலிஇப்படிக்கு சி.மோகன் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த கடிதத்தின் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவ‌ல்துறை‌யின‌ர் உடனடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும், ஜெயலலிதாவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுபோன்ற புகார் மனுக்களை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயல‌ர் டி.ஜெயக்குமார், அரசு முதன்மை செயலாளரிடமும், சென்னை காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌‌ர் அலுவலகத்திலும், செ‌ன்னை மாநகர கா‌வ‌ல்துறை அலுவலகத்திலும் கொடுத்தார். இந்த புகார் மனுக்கள் மீது போலீசார் உடனடியாக விசாரணையை மேற்கொண்டனர்.

ஜெயலலிதா வீட்டுக்கு வந்த கடிதத்தில், `24352770′ என்ற தொலைபேசி நம்பரும் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் இருந்த தொலைபேசி நம்பரை வைத்து அதற்கான முகவரியை ஆராய்ந்ததில், சென்னை தியாகராய நகர் தாமஸ் சாலை‌யி‌ல் வசிக்கும் சி.மோகன் என்பவரது முகவரியை கண்டறிந்ததாகவும், அந்த முகவரியில் உள்ள வீட்டில் விசாரித்த போது அங்கு வசிக்கும் மோகன் 114-வது வட்ட .தி.மு .. இளைஞரணி செயலாளர் என்பதும் தெரியவந்ததாக காவ‌ல்துறை‌யின‌ர் கூறின‌ர்.

காவ‌ல்துறை‌யின‌ர் விசாரித்த போது மோகன் வீட்டில் இல்லை. எனவே மிரட்டல் கடிதத்தை மோகன்தான் எழுதினாரா? அல்லது அவரைசி‌க்க வை‌‌ப்பத‌ற்காக யாரேனும் இது போன்ற கடிதத்தை அவர் பெயரில் எழுதினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவித்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இர‌ண்டு ஆ‌ஸ்கா‌ர்விருதுகளை பெ‌ற்று செ‌ன்னைதிரு‌ம்‌பிய இசையமை‌‌ப்பாள‌ர் . ஆ‌ர்.ரகுமானு‌க்கு ர‌சிக‌ர்க‌ள் உ‌‌ற்சாக வரவே‌ற்பு அ‌ளி‌த்தன‌ர்.

‌ஸ்லம்டாக் மில்லியனார் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெ‌ற்ற இசையமை‌‌ப்பாள‌ர் .ஆர்.ரகுமான் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். தூக்கத்தை எல்லாம் பாராமல் அவரை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அமைச்சர் பரிதி இளம்வழுதி , இயக்குநர் ஆர்.பார்த்திபன், நடிகர் சிம்பு பலரும் விமான நிலையத்தில் ரகுமானுக்கு வரவேற்பு கொடுக்க காத்திருந்தனர்.

கூட்ட நெரிசலால் அவர்களை எல்லாம் பார்க்க முடியாமல் சென்றுவிட்டார். ‌பி‌ன்ன‌ர் சென்னை கோடம்பாக்கதில் உள்ள தனது வீட்டுக்கு அதிகாலை 2.45க்கு .ஆர்.ரகுமான் வ‌ந்‌திற‌ங்‌கினா‌ர். அங்கு அவருக்காக பல மணி நேரம் காத்திருந்தனர் ரசிகர்கள் வரவே‌‌ற்பு அ‌ளி‌த்தன‌ர்.

‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய .ஆ‌ர்.ரகுமா‌ன், ”இந்த இரண்டு விருதுகளையும் இந்தியாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் எ‌ன்று‌ம் ஒரு தமிழனாக இருந்து ஹாலிவுட் சென்று இந்த விருதை வாங்கி வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன் எ‌ன்றா‌ர்.

தமிழன் என்று சொல்வதால் மொழி பேதம் என்று நினைக்காதீர்கள். எனக்கு எல்லா மொழியும் ஒன்றுதான் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து ரகுமா‌ன், பாலிவுட் சென்றாலும், ஹாலிவுட் சென்றாலும் நான் எப்பவுமே தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். தமிழ்ப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைப்பேன் எ‌ன்றா‌ர் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ச‌த்‌ய‌ம் க‌ம்‌ப்யூ‌ட்ட‌ர்‌ஸ்நிறுவன‌நி‌தி மோசடிவிவகார‌ம் இ‌ன்று ம‌க்களவையை உலு‌க்‌கியது. இ‌ந்தவிவகார‌த்தை போ‌ர்‌க்கால அடி‌ப்படை‌யி‌ல் புலனா‌ய்வு அமை‌ப்புக‌ள் விசா‌ரி‌த்து வருவதாகவு‌ம், கு‌ற்றவா‌ளிக‌ள்விரை‌வி‌ல் த‌ண்டி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் கா‌ர்பரே‌ட்விவகார‌த்துறை அமை‌ச்ச‌ர்பிரே‌ம் ச‌ந்‌த் கு‌ப்தா அ‌ளி‌த்தவிள‌க்க‌த்தா‌‌ல்திரு‌ப்‌தியடையாத எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளி‌ன் உறு‌ப்‌பின‌ர்க‌ள் வெ‌ளிநட‌ப்பு செ‌ய்தன‌ர்.
!!!!!!!!!!!!!!!
TÖWÖºUÁ\† ÚRŸR¥ ˜z°L· GTz C£eh• GÁT‰ T¼½ Ge]Ö–e Ay ÙTÖ¦yzeL¥ ®e¦ GÁ\ T†‡¡ÛL J£ L£†‰eL‚” SP†‡V‰. C‡¥ LÖjfWÍ RÛXÛU›XÖ] IefV ˜¼ ÚTÖeh iyP‚ÛV «P TÖWˆV ^]RÖ RÛXÛU›XÖ] ÚRpV ^]SÖ VL iyP‚eh A‡L CPjL· fÛPeh• GÁ¿ ÙR¡V Y‹‰·[‰.

ÚRŸR¦¥ LÖjfWÍ, U¼¿• TÖ.^.L.°eh R†‰ Byp AÛUeh• A[°eh ÙT£• TÖÁÛU TX• fÛPeLÖ‰. B]Ö¥ iyP‚ LypL· J†‰ ÛZ”PÁ TÖ.^.L.°eh LÖjfWreh fÛPTÛR «P A‡L CPjL· fÛPeL YÖš”·[‰. h^WÖ†, E†RWLցy, TtN֐, ’LÖŸ BfV UÖŒXjL¸¥ L‚NUÖ] ÙRÖh‡L¸¥ TÖ.^.L. iy P‚ ÙY¼½ ÙT\ YÖš “·[‰.

WÖ^ÍRÖÁ, LÖЗŸ, ÙP¥¦, –ÚNÖW•, SÖLXÖ‹‰, LŸSÖPLÖ, U†‡V ‘WÚRN•, N†ˆÍLŸ, CUÖo NX ‘WÚRN•, ‡¡”WÖ, ÚULÖXVÖ UÖŒXjL¸ ¨• TÖ.^.L.°eh YÖš” A‡L¡†‰·[‰. C‹R UÖŒXjL¸¥ E·[ 116 ÙRÖh‡L¸¥ 72 ÙRÖh‡L¸¥ TÖ.^.L.°eh YÖeLÖ [ŸL¸P• BRW° ÙT£f E·[‰. C‰ TÖ.^.L.°eh ÙT¡‰• ÛL ÙLÖ|eh•.

B‹‡WÖ,A¡VÖ]Ö, pef•, J¡NÖ, ^ÖŸe Ly, UWÖyzV•, A£QÖNX ‘WÚRN• BfV UÖŒXjLÛ[ LÖjfWÍ UÛX ÚTÖX S•‘ E·[‰. C‹R UÖŒ XjL¸¥ ÙUÖ†R• 137 ÙRÖh‡L· E·[]. C‡¥ TX ÙRÖh‡L¸¥ LÖjf Wreh ‘Á]ÛP° H¼Ty| C£ef\‰.

«ÛXYÖp EVŸ°, ÚYÛX C¥XÖ ‡PÖyP•, U¼¿• E·»Ÿ ‘WopÛ] L· LÖjfWreh G‡WÖL ‡£•‘·[]. h½TÖL UWÖyzV•, B‹‡WÖ«¥ LÖjfWreh G‡Ÿ” f[•‘ E·[‰. C‹R UÖŒXjL¸¥ ÙRÖh‡L· T½ ÚTÖh• TyN†‡¥ LÖj fWreh TX†R Az «Ze i|•.

E†RW‘WÚRN•, ’LÖŸ UÖŒXjL¸¥ LÖjfW reÚLÖ, TÖ.^.L.°eÚLÖ A‡L CPjL· fÛPeL ÚTÖY‡¥ÛX. C‹R C£ UÖŒXjL¸¨• iyP‚ LypLÛ[ÚV LÖjfWr•, TÖ.^.L.°• S•‘ E·[]. C†RÛLV s²ŒÛX›¥ R–²SÖ|, B‹‡WÖ, ÚU¼h YjLÖ[• BfV 3 UÖŒ XjL¸¥ fÛPeL ÚTÖh• ÙY¼½ÚV, VÖŸ Byp AÛUT‰ GÁTÛR ŒŸQ›eh•.

C‹R 3 UÖŒXjL¸¨• AWpV¥ s²ŒÛXL· N¼¿ UÖ½ E·[]. C‹R UÖŒXjL¸¨• LÖjfW reh G‡ŸTÖŸeh• ÙY¼½ fÛPehUÖ GÁT‡¥ ÚL· «eh½ H¼Ty|·[‰.

CXjÛL R–ZŸ «cV†‡¥ E¿‡VÖ] SPY zeÛL G|eLÖRRÖ¥ LÖjfWNÖŸ —‰ R–²SÖ| ˜µ Y‰• A‡£‡ ŒX° f\‰. B‹‡WÖ, ÚU¼h YjLÖ[• UÖŒXjL¸¨• E·»Ÿ ‘WopÛ]L· Gµ‹‰·[]. CÛYÙV¥XÖ• LÖjfWÛN «P TÖWˆV ^]RÖ°eÚL NÖRLUÖL E·[] GÁ¿ L£†‰e L‚‘¥ ÙR¡«eLTy|·[‰.
!!!!!!!!!!!!!!!!
மத்திய வர்த்தகம் மற்றும் மின்சாரத் துறை இணை அமை‌ச்ச‌ர் ஜெய்ராம் ரமேஷ் , நேற்று திடீரென ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை குடியரசு‌‌த் தலைவ‌ர் ஏற்றுக் கொண்டார்.

மத்திய வர்த்தகம், தொழில்துறை மற்றும் மின்சார துறையில் இணை அமை‌ச்சராக ஜெய்ராம் ரமேஷ் இருந்து வந்தார். ஆந்திர மாநிலத்தில் இருந்து டெல்லி மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், நேற்று திடீரென தனது மத்திய அமை‌ச்ச‌ர் பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து பிரதமரின் பரிந்துரையின் பேரில் ஜெய்ராம் ரமேஷ் ராஜினாமாவை குடியரசு‌த் தலைவ‌ர் பிரதீபா பாட்டீல் உடனடியாக ஏற்றுக் கொண்டார். குடியரசு‌‌த் தலைவ‌ர் மாளிகை செய்திக் குறிப்பில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். எனவே, அவருடைய ராஜினாமா குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் வீரப்ப மொய்லியிடம் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ள் கேட்டபோது, “அவர் ராஜினாமா செய்து விட்டார் என்பது மட்டுமே எனக்கு தெரியும்என்று மட்டுமே தெரிவித்தார். வேறு எந்த விபரமும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

எனினும், பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவதற்காக அமை‌ச்ச‌ர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பணி தொடர்பாக அவருக்கு ஒரு பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது .
!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது .

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்ற மோதல் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரணை நடத்தியது . அப்போது, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தடியடி நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது யார் என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர் . மேலும், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்நிலையம் இருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வெளிமாநில நீதிபதி ஒருவர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர். நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் கோஷமிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர் . இதுகுறித்த விசாரணை இன்றும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதலமைச்சர் கருணாநிதிக்கு அனைத்து தையல்களும் பிரிக்கப்பட்டன எ‌ன்று‌ம் அவர் மா‌ர்‌ச் 1ஆ‌ம் தேதி இருந்து வீடு திரும்வா‌ர் எ‌ன்று போரூர் ராமச்சந்திரா மரு‌த்துவமனையின் எலும்பு சிகிச்சை நிபுணர் மரு‌த்துவ‌ர் மார்த்தாண்டம் தெ‌‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் செய்திக்குறிப்பில், முதலமைச்சர் கருணாநிதியின் முதுகுவலியை குணப்படுத்துவதற்காக , கடந்த 11ஆ‌ம் தி அவருக்கு போரூர் ராமச்சந்திரா மரு‌த்துவமனை‌யில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டெல்லியில் இருந்து மரு‌த்துவ‌ர் அரவிந்த் ஜெயஸ்வால் புதன்கிழமை (நேற்று ) வந்து முதலமைச்சர் கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்தார்.

கருணாநிதிக்கு எஞ்சியுள்ள 3 தையல்களும் அப்போது பிரிக்கப்பட்டன. இதன்மூலம் அனைத்து தையல்களும் பிரிக்கப்பட்டு விட்டன . இதையடுத்து, முதலமைச்சர் கருணாநிதியை மரு‌த்துவ‌ர்கள் படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வைத்தனர். இருக்கையில் அமர வைத்தனர்.

முதலமைச்சர் கருணாநிதி, இன்னும் 4 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மரு‌த்துவ‌ர்க‌ள் அறிவுறுத்தி உள்ளனர். சிலபிசியோதெரபிஉடற்பயிற்சிகளையும் செய்யுமாறு கூறியுள்ளனர். கருணாநிதி மார்ச் 1ஆ‌ம் தேதி மரு‌த்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!!!
பிரிட்டனில் பிறந்த ரோமன் கத்தோலிக்க பாதிரியார், ஜெர்மனியில் நாஜிகளின் காலத்தில் விஷவாயுக் கிடங்கில் ஒரு யூதர் கூட கொல்லப்படவில்லை என்று பேசியதால் அர்ஜென்டீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் தனது சொந்த நாடான பிரிட்டனுக்கு New;W திரும்பினார் .

ரிச்சர்ட் வில்லியம்ஸன் என்று அழைக்கப்படும் என்ற அந்தப் பாதிரியார், கடந்த மாதம் அர்ஜன்டினாவில் இருந்த போது ஸ்வீடன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ விஷவாயுக் கிடங்கில் ஒரு யூதர் கூட கொல்லப்படவில்லைஇதெல்லாம் பொய்கள், பொய்கள் , வெறும் பொய்கள்என்று அதிரடியாகக் கூறினார்.

இதனால் உலகெங்கிலும் யூதர்கள் கொதிப்படைந்துள்ளனர். இதுபோன்று கூறி அர்ஜென்டீனா மக்களையும் யூத பெருமக்களையும் மட்டுமல்லாது , மனித குலத்தையே அதிர்ச்சியடையச் செய்த பாதிரி ரிச்சர்ட் வில்லியம்ஸன், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அர்ஜென்டீனாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் பல அச்சுறுத்தல்களுக்கு இடையே பாதிரியார் ரிச்சர்ட் வில்லியம்ஸன் New;W லண்டன் திரும்பினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வங்கதேசத்தில் மீண்டும் துணை ராணுவப்படை வீரர்கள் கலகத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பல்வேறு இடங்களில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றுவருகிறது. உயிரிழப்பு குறித்து இதுவரை தகவல் இல்லை.

வங்க தேசத்தில் துணை ராணுவப்படையினர் நேற்று திடீரென்று புரட்சியில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அந்நாட்டு பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைதி நிலை திரும்பியது. ஆனால், இன்று மீண்டும் அவர்கள் புரட்சியில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். பெஹ்னி, சகிரா, மௌல்வி பஜார் உள்ளிட்ட அந்நாட்டின் 7 பகுதிகளில் துணை ராணுவத்தினரின் புரட்சி வெடித்துள்ளது. இந்த பகுதிகளில் துப்பாக்கி சண்டை நடைபெற்றுவருவதாகவும், ஆனால் உயிரிழப்பு குறித்த தகவல் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, வங்கதேச பிரதமர் ஹசீனா, டாக்காவில் அவரது இல்லத்தில் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ராணுவத்தினரின் புரட்சி நாட்டில் மேலும் பல இடங்களுக்கும் பரவலாம் என்பதால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ÙTÖ£[ÖRÖW ®²op: JTÖUÖ ‡yP†‰eh T֑ȁPÖ¥ G‡Ÿ”


AÙU¡eLÖ«¥ E· ©pVÖ]Ö UÖLÖQ†‡Á LYŸ]WÖL TÖ‘ ȁPÖ¥ C£‹‰ Y£f\ÖŸ. CYW‰ ÙT¼Ú\ÖŸL· C‹‡VÖ «¦£‹‰ AÙU¡eLÖ«¥ hzÚV½VYŸL·. JTÖUÖ «Á ÙTÖ£[ÖRÖW N¡ÛY qŸ ÙNš• ‡yP• T¼½ AYŸ i½VRÖY‰:-

EXL ÙTÖ£[ÖRÖW ®²op›Á LÖWQUÖL H¼TyP AÙU¡eLÖ«Á ÙTÖ£[ÖRÖW ®²op›¥ C£‹‰ —|• TÛZV ŒÛXeh Y‹‰ qWÛPV ÚY|• GÁ¿ hzVWr LypÛVo ÚNŸ‹R SÖj L· «£•”fÚ\Ö•. B]Ö¥ AÙU¡eL ÙTÖ£[Ö RÖW†ÛR N¡ ÙNšV JTÖUÖ «Á 787 ‘¥¦VÁ PÖXŸ ‡yP• Y£jLÖX†‡¥ Y¡ EVŸ° U¼¿• N‹R‡›]Ÿ —‰ LPÛ] rU†‰• ‡yP UÖL E·[‰.CªYÖ¿ AYŸ i½]ÖŸ.
!!!!!!!!!!!!!!!!!!
ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்தில், டேர்க்கிஷ் ஏயர் லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில், 9 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் குறைந்தது 50 பேர் காயமடைந்ததாக டச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்தான்புல்லில் இருந்து வந்த இந்த விமானம் தரையிறங்க முயன்ற வேளை விபத்துக்குள்ளானது .
மூன்று பாகங்களாக இந்த விமானம் உடைந்து பிளந்தபோதிலும், அதில் தீப்பற்றவில்லை.
விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் 130 பயணிகளும், சிப்பந்திகளும் இருந்துள்ளனர்.
பிளந்த பகுதி ஒன்றின் ஊடாக தான் விமானத்தில் இருந்து சுழற்றி வீசப்பட்டதாக உயிர் தப்பிய பயணி ஒருவர் துருக்கிய தொலைக்காட்சியில் கூறினார்.
!!!!!!!!!!!
சீன தலைநகர் பீஜிங்கின் மையத்துக்கு அருகில் கார் ஒன்றுக்குள்ளே மூன்று பேர் தமக்கு தாமே தீ மூட்டிக்கொண்டனர்.
ஆயினும் அவர்கள் மூவரும் காப்பாற்றப்பட்டுவிட்டனர்.
ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்க இந்த மூன்று பேரும் தலைநகருக்கு வந்ததாகக் கூறும் சீன அதிகாரிகள், ஆனால், அந்தப் பிரச்சினை என்னவென்பதற்கான சமிக்ஞை எதுவும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இன்று திபெத்தியர்கள் தமது புது வருடத்தை அனுட்டிக்கின்றனர். சீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வருடாந்த தேசிய காங்கிரஸுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வேளையில் இந்த தீக்குளிப்பு இடம்பெற்றுள்ளது.
அண்மைக்காலங்களில் சிறு எண்ணிக்கையிலான மக்கள் பல் வேறு காரணங்கள் குறித்து பொதுக்கவனத்தை ஈர்ப்பதற்காக சீனாவில் தீக்குளிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள
!!!!!!!!!!!!!!!!

1 euro = 145.61 sl /64.01in
1 us $ = 114.55 sl / 50.35in
1 swiss fr = 97.80sl / 42.99in
1 uk pound = 162.78sl / 71.55in
1Saudi Arabian Riyal = 30.54sl /13.29 in

Leave a Reply

Your email address will not be published.