இந்தியர்களுக்கு அமெரிக்க வேலை கம்பெனிகளுக்கு ஒபாமா நெருக்கடி

வாஷிங்டன் : “இந்தியா போன்ற நாடுகளுக்கு, வேலைகளை “அவுட் சோர்சிங்’ முறையில் தரும் அமெரிக்க கம்பெனிகளுக்கு இனி வரிச்சலுகை கிடையாது’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.அமெரிக்க பார்லிமென்டில் தன் அரசின் பொருளாதாரக் கொள்கையை அறிவித்த அவர், மந்த நிலை மாறும் வகையில் சலுகை நடவடிக்கைகள் தொடரும் என்றார்.


குறிப்பாக “அவுட் சோர்சிங்’ முறையில் பணிகளை தரும் அமெரிக்க நிறுவனங்கள் குறித்து, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இதனால் உள்ளூரில் வேலைவாய்ப்பு குறைகிறது என்ற குற்றச்சாட்டும் இருந்தது. அமெரிக்காவில் ஆயிரம் கம்பெனிகள் தங்கள் பணியை “அவுட் சோர்சிங்’ முறையில் வெளிநாட்டில் செய்து வருகின்றன.

தற்போது, ஒபாமா தன் அறிவிப்பில், ” இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பைத் தரும் ( அவுட் சோர்சிங் முறையில்) கம்பெனிகளுக்கு வரிச்சலுகை இனி கிடையாது. நம் வேலைவாய்ப்பை மற்றவர்களுக்கு தரும் கம்பெனிகளுக்கு ஏன் சலுகை? நம் நாட்டில் வரிகட்டுவோர் கேட்கும் நியாயமான கோரிக்கை இது’ என்று குறிப்பிட்டார்.வெளிநாடுகளில் “அவுட்சோர்சிங்’ முறையில் வேலை தரும் நடைமுறையைப் பின்பற்றும் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு இனி வரிச்சலுகை இருக்காது. இதுவரை இந்த முறையில் 30 லட்சம் பணிகளை ஏற்படுத்தும் வகையில் “அவுட் சோர்சிங்’ முறை உதவியது என்று கூறப்படுகிறது.

Source & Thanks ; dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.