நெல்லை கோர்ட்டிலிருந்து போலீசார் வெளியேற்றம்

நெல்லை: நெல்லையில் நேற்று வக்கீல்கள் கோரிக்கையைத் தொடர்ந்து கோர்ட் வளாகத்தில் இருந்த போலீஸார் வெளியேற்றப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில், அம்பை, வள்ளியூர், சிவகிரி, செங்கோட்டை நீதிமன்றங்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டன.

நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் வழக்கம்போல் பணிக்கு சென்றனர். அதே வேளையில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கோர்ட்டுகளில் வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

நெல்லை வழக்கறிஞர்கள் கோர்ட்டுக்குள் செல்லாமல் நீதிமன்ற வாளகத்தில் திரண்டு இருந்தனர். அப்போது நீதிமன்றத்துக்கு வந்த போலீசாரை உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும் கோர்ட்டில் இருந்து அனைத்து போலீசாரையும் வெளியேறுமாறு கோஷம் போட்டனர். இதையடுத்து அவர்கள் வெளியே சென்று விட்டனர்.

வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் சிவக்குமார், துணை செயலாளர் பீர்முகமது மற்றும் குற்றால நாதன், செல்வராஜ், கருணாநிதி, வெங்கடாஜலபதி, துரைமுத்துராஜ் உள்ளிட்டோர் ஒவ்வொரு நீதிமன்றங்களாக சென்று அங்கிருந்த போலீஸ்காரர்களை வெளியேற்றினர்.

அப்போது வெளியேறு, வெளியேறு காவல் துறையே வெளியேறு, அனுமதிக்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம், நீதி கிடைக்கும் வரை காவல் துறையை அனுமதிக்க மாட்டோம் என்று கோஷங்கள் முழங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.