யுத்தத்தை நிறுத்துமாறு கோர அமெரிக்காவிற்கு தகுதியில்லை – ஒமல்பே சோபித தேரர்

யங்கரவாதத்திற்கு எதிராக இராணுவப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்தை நிறுத்துமாறு கோர அமெரிக்காவிற்கு எவ்வித தகுதியுமில்லை என ஜாதிக ஹெல
உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இராணுவப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளை நிறுத்துமாறு அமெரிக்கா கோருவதில் நியாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் லட்சக் கணக்கான அப்பாவி பொதுமக்களை அமெரிக்க இராணுவம் கொன்று குவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்பாவித் தமிழ் மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கிலேயே யுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பயங்கரவாதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதிகள் இரட்டைக் கொள்கைகளை பின்பற்றி வருவது பெரும் கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.