எவ்வாறான தடைகள் ஏற்பட்டாலும் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் – இ.தொ.கா

எவ்வாறான சவால்கள் ஏற்பட்டாலும் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவு நிறுத்தப்பட மாட்டாதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ் தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் தமது கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.

வாக்குகளை அதிகளவில் பெற்றுக் கொள்வதனைவிட மக்கள் சேவையை முதனிலைக் கடமையாக தமது கட்சி கருதிச் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலின் போதும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்பாளர்களை நிறுத்த கட்சி முடிவு செய்துள்ளதாக
அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.