உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் பிரபாகரன் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் – கெஹலிய

உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அரவது சகாக்களும் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டுமென
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.

இராணுவப் படையினர் வடக்கில் வெற்றிகரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்,தோல்வியிலிருந்து புலிகள் மீள்வதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதங்களை கீழே வைத்து, பாதுகாப்பு படையினரிடம் சரணடைவதன் மூலம் தம்மையும் தமது சகாக்களையும் பிரபாகரனினால் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை கீழே வைப்பது மற்றும் சரணடைவதென்பது புதிய விடயமல்ல எனவும் 1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின் போது ஜனாதிபதி ஜயவர்தனவினால்
முன்வைக்கப்பட்ட யோசனையை பிரபாகரன் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னிப் பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமானால் பிரபாகரன் சரணடைவது மிகவும் இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

படையினரிடம் சரணடைவதனைத் தவிர வேறும் மாற்று வழிகளில் தற்போது இல்லை என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.