போரில் காயமடையும் இராணுவ வீரர்களுக்கு முக்கியமான மருந்தை இந்தியா அனுப்புகிறது: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

இலங்கையில் போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு அறுவைச் சிகிச்சைக்குப் பின் பயன்படுத்தப்படும் முக்கியமான மருந்தை இந்தியா அனுப்புகிறது என இலங்கை நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வா தெரிவித்தார்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின் பயன்படுத்தப்படும் “பெதாடைன்’ என்கிற மருந்து கையிருப்பு குறைவாக இருப்பது குறித்து நாடாளுமன்றத்தில் ஜேவிபி உறுப்பினர் கேள்வி எழுப்பியபோது, அந்த மருந்தை இந்தியா அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளது என டி சில்வா கூறினார்.

வடக்குப் பகுதியில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ரூ.1.6 கோடி மதிப்பிலான மருந்துப் பொருள்களை இந்தியா அனுப்பியுள்ளது.

போரால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு அந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

இந்நிலையில் வன்னியில் படையினரின் கொடூரத் தாக்குதல்களினால் காயமடைந்துவரும் தமிழ் பொதுமக்கள் மருத்துவப் பொருட்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சையின்றி பலர் இறக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புதுமாத்தளன் மருத்துவமனை வைத்தியர் வரதராஜன் அவர்கள் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.